675 குழந்தைகளை நரபலி கொடுத்த போலி சமயகுரு!

Subscribe to Boldsky

உலகில் இன்றும் மர்மம் விலகாத பல விஷயங்களை மனிதன் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறான். ஆனால், இதை எல்லாம் அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே செய்வதில்லை. இந்த பட்டியலில் சிலவனவற்றை பொதுமக்களே மூட நம்பிக்கையுடன் பின்பற்றி வருவதை நாம் காண இயல்கிறது.

அதில், ஆன்மீகம், சாத்தான் என்பவை பெரும் சக்தி கொண்டவையாக கருதப்படுபவை. இன்றளவும் தெய்வ நம்பிக்கை மற்றும் ஆவி, பேய்களை நம்புவோர் இருக்கிறார்கள்.

Fake Pastor Claims He Killed 600 Children in Alleged Ritual

Image Source: Keetru

90களில் நாம் திரைப்படத்தில் கண்ட சாத்தானிடம் இருந்து சக்தி பெற்று கடவுளையே வெல்வேன் என்று சவால்விட்டு கொண்டு திரியும் வில்லன்கள் இன்றும் நிஜ வாழ்விலும் இருக்கிறார்கள். 

உலகின் சில மூலைகளில் இந்த வகையிலான நரபலிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. சில காலமாக காணாமல் போயிருந்த இந்த நரபலி செய்திக்கு புதியதாக கானாவை சேர்ந்த ஒரு முகமூடி ஆசாமி தூபம் போட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாத்தானுடன் வாழ்க்கை!

சாத்தானுடன் வாழ்க்கை!

கானாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மாஸ்க் அணிந்துக் கொண்டு பேட்டியளித்த போலி சமயகுரு ஒருவர், திடுக்கிடும் தகவலை கூறி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இவர் கடந்த 17 ஆண்டுகளாக தான் சாத்தான் உடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டது மட்டுமின்றி, இதுநாள் வரை 600க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Image Source: R TV

வாக்குமூலம்!

வாக்குமூலம்!

தனியார் நிகழ்ச்சி ஒன்று பங்கேடுத்துக் கொண்ட அந்த போலி சமயகுரு தான் அளித்த வாக்கு மூலத்தில் இதுநாள் வரை 675 பேரை நரபலி கொடுத்திருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் கூறி உள்ளார்.

இதில் அதிர்ச்சி என்னவெனில், போலி சமயகுரு நரபலி கொடுத்த சிறுவர்களை இவரிடம் கொண்டு சேர்த்தவர்கள் மருத்துவ துறையை சார்ந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் என்று அறியப்படுகிறது. அதையும் அவர் அந்த டிவி நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

Image Source: R TV

எங்கே? எப்படி?

எங்கே? எப்படி?

இணையத்தில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கு இந்த காணொளிப்பதிவு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நரபலி குறித்த எந்த தகவலும் தெளிவாக வெளியாகவில்லை. இந்த நரபலி எங்கே நடந்தது, எப்படி நடந்தது., முகமுடி அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த அந்த போலி சமய குரு யார்? என்ற பல கேள்விகளுக்கு விடை அறியப்படவில்லை.

யார்?

யார்?

முகமூடி அணிந்து வந்த அந்த போலி சமயகுருவின் வயது 30களில் இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இவர் தந்திர, மந்திர வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதுநாள் வரை 650க்கும் மேற்ப்பட்ட உயிர்களை இவர் நரபலி கொடுத்திருக்கிறார். இந்த நரபலிகள் இவரது சூப்பர் பவருக்காக கொடுக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏமாற்றுவேலை!

ஏமாற்றுவேலை!

இந்த நிகழ்ச்சி கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு ஆனது. இந்த நபரை போலி சமயகுரு என்று குறிப்பிடுகிறார்கள். தன்னை பின்பற்றுபவர்களை ஏமாற்ற, இப்படியான போலியான சாத்தான் வேலைகளை இவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் பணத்தாசைக்காக இப்படி பேசி வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமாற்றுவேலை!

ஏமாற்றுவேலை!

மேலும், இவர் மறைந்த ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியின் மகன் என்றும். இவர் பெயரில் ஏற்கனவே சொத்துக்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆகமொத்தம் இப்படி ஒரு கொடூரமான நரபலி நடந்ததா? கானா தனியார் தொலைக்காட்சி ஏற்படுத்திய வீண் டி.ஆர்.பி நாடகமா? அல்ல தனக்கு விளம்பரம் விளம்பரம் தேடிக் கொள்ள அந்த போலி சமயகுரு இப்படி பரபரப்பாக பேசினாரா என்பது அறியப்படவில்லை.

ஆனால், இந்த தகவல் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது தான் மிச்சம். காவலர்கள், தனியார் தொலைக்காட்சியில் இவரை பேட்டி கண்டவர்கள் மூலம், இந்த போலி சமயகுருவை விசாரித்தால் தான் அப்படி ஒரு நரபலி சம்பவம் நடந்ததா? எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர்? நிஜாமாகவே இவருக்கு மருத்துவர்கள் உதவினார்களா? அல்லது இது எல்லாம் போலி நாடகமா? என்ற உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Fake Pastor Claims He Killed 600 Children in Alleged Ritual

    Pastor claims he carried out ritual murders of more than 600 children handed to him by devil-worshiping doctors and nurse
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more