விரும்பியவனை மணமுடிக்க பழங்கால பெண்கள் செய்த சில வினோத பழக்கங்கள்!

Written By:
Subscribe to Boldsky

பிப்ரவரி 14க்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன, அதற்கு முன்னாலேயே அது கலாச்சார சீரழிவு தினம் அதைக் கொண்டாடக்கூடாது,கொண்டாடவும் அனுமதிக்கக்கூடாது என்று சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க காதலர்கள் தங்கள் இணைக்கு எப்படி சர்ப்பரைஸ் கொடுப்பது, வித்யாசமாக எப்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவது, காதலைச் சொல்வது, என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று யோசித்து களமிறங்கிவிட்டனர்.இவர்களோடு சேர்ந்து இன்னொரு கூட்டமும் களமிறங்குமே அதான் காதலர் தினத்தனூர் இந்த உடை போட்டுட்டு போங்க... மறந்தும் கூட இந்த கலர் செலக்ட் பண்ணீறாதீங்கன்னு திகில் கிளப்பிட்டேயிருப்பாங்களே....

சரி... பிப்ரவரி 14 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது அந்த நாள் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த வேலன்டைன் கொண்டாட்டம் ரோம் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்திருக்கும் என கூறப்படுகிறது. அவர்கள் இதனை பேகன் திருவிழா என்ற பெயரில் கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது விலங்குகளை எல்லாம் பலி கொடுத்திடுவார்கள். அதோடு இந்த விழாவினை குழந்தை பேருக்கான ஒர் நிகழ்வாக கருதப்பட்டது.

#2

#2

இந்த விழாவினை பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொண்டாடினர். இதற்கு காரணம் அது தான் பறவைகளுக்கான மேட்டிங் டைம். குறிப்பாக டோவ் பறவை இந்த காலத்தில் தான் தன்னுடைய இணையை நோக்கி பயணிக்கும்.

#3

#3

க்ளாடியஸ் 2 என்ற அரசன் போர் காலத்தில் வீரர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்திரவிட்டிருந்தான். ஆனால் பிஷப் வேலன்டைன் என்பவர் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் அதில் அரசர் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

போர்க்கொடி தூக்கியதோடு, ரகசியமாக போர் வீரர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் செய்தார். இதனால் வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டார்.

 #4

#4

இதோடு பிப்ரவரி 14 அன்று தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலன்டைன் இறந்தார் என்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேலன்டைன் நினைவிடத்திற்கு சென்று பூங்கொத்துக்களை வைத்தனர்.

தொடர்ந்து தங்களை வாழ்க்கை சேர்த்து வைத்த வேலன்டைன்னுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிப்ரவரி 14 நினைவு கூறப்படுகிறது.

#5

#5

15 ஆம் நூற்றாண்டில் வேலன்டைன் துவங்கப்பட்டிருந்தாலும் 17ஆம் நூற்றாண்டில் தான் தீவிரமாக அதனை கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். அப்போது தான் பூக்கள் அதனுடன் வாழ்த்து அட்டைகளையும் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்

#6

#6

1936 ஆண்டில் ஜப்பானில் கொண்டாட ஆரம்பித்த பிறகு உலகம் முழுவதும் மிகவும் வைரலாக பரவியது. அதோடு அது காதலை வெளிப்படுத்தும் நாள், அன்பைச் சொல்லுங்கள், காதலுக்கான பரிசுப்பொருளினை கொடுத்திடுங்கள் என்று சாக்லெட்,பொக்கே என வர்த்தக சந்தையுடன் சேர்ந்ததாக மாற்றினார்கள்.

#7

#7

தொடர்ந்து அதைச் சுற்றி பல்வேறு கதைகள் ஆரம்பிக்கப்பட்டன க்ரஷ்,சிங்கிள்,கமிட்டட் என ஏராளமான கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். இதோடு சேர்ந்து வர்த்தக சந்தையும் சேர்ந்தே வளர்ந்தது.

கிட்டதட்ட ஒரு பில்லியன் அளவிற்கு மட்டும் வேலன்டைன் கார்டு விற்பனை நடந்தது. அதோடு சாக்லெட் மற்றும் ரோஸ் விற்பனையும் சூடு பிடித்தது.

 #8

#8

வரலாற்றில் இதுவரை அதாவது அவர் வாழ்ந்த காலத்தில் இவரைத் தவிர எட்டு பேர் அதே வேலன்டைன் என்ற பெயருடன் இருந்திருக்கிறார்கள். இவர்களில் ரோம் நாட்டிலிருந்தவர் தான் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் தினத்திற்கு மூலக்காரணமான வேலன்டைனை வேலன்டைன் ஆஃப் டெர்னி என்று அழைக்கிறார்கள். இவர் இறந்து பிப்ரவரி பதினான்கு 269 ஆம் ஆண்டு.அதே நாட்களில் தான் பறவைகளின் மேட்டிங் சீசனும் இருந்திருக்கிறது.

#9

#9

1700களில் வித்யாசமான ஒர் நடைமுறை இருந்திருக்கிறது. நான்கு bay இலைகளை பறித்து தங்கள் தலையணைக்குள் வைத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு கடினமான வேகவைக்கப்பட்ட முட்டையை அதன் ஓட்டுட்டுடன் சாப்பிடுகிறார்கள்

இப்படிச் செய்வதினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் அதோடு வாழ்க்கையின் கடினமான நாட்களைக் கூட எளிதாக கடந்து விடுவார்கள் என்று நம்பப்பட்டது

#10

#10

பெண்கள் தாங்கள் விரும்பிய ஆணின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி அதனை களிமண்ணில் புதைத்து ஆற்றில் போட்டுவிடுகிறார்கள். உடன் அது கரைந்து உள்ளே எழுதியிருக்கக்கூடிய காகிதம் மேலே எழும்பி வந்தால் தான் விரும்பிய நினைத்த ஆண் மகனையே அடைவார் என்று சொல்லி அதனை நடைமுறைபடுத்தியும் வந்திருக்கிறார்கள்.

#11

#11

இதே போல ஜெர்மனியில் என்ன நடைமுறை இருந்திருக்கிறது தெரியுமா? பெண்கள் தங்கள் காதலரின் பெயரை எழுதி தோட்டத்திலோ அல்லது ஒரு பூந்தொட்டியிலோ புதைத்து வைக்கிறார்கள்.

அருகில் ஐந்தாறு வெங்காயத்தை நட்டு வைக்கிறார்கள். இவற்றில் பெயரை எழுதி புதைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் வெங்காயம் முதலில் முளைத்தால் தாங்கள் நினைத்தது நடக்கும் என்று நம்புகிறார்கள்.

#12

#12

காதலுக்கு பொதுவான சிம்பளாக இருப்பதே இதயம் தான், அதுவும் சிவப்பு நிறத்திலான இதயம்,ரெட் ரோஸ் என எல்லாம் சிகப்பு மயமாகத்தன இருக்கும். பொதுவாக காதலின் அடையாளமாக ரோமானியர்களின் காதல் கடவுள் என்று வர்ணிக்கப்படும் குப்பிட்டை காதலின் அடையளாமக வைத்திருந்தார்கள்.

#13

#13

பொதுவாக சிகப்பு நம் ரத்தத்தை நினைவுப்படுத்தும் ஒரு காலத்தில் நமக்கு காதல் உணர்வு மேலோங்கும் போது தான் இதயத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரித்திருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தும் போது அல்லது புதைக்கும் போது உடலில் இருக்கும் எல்லா உள் உறுப்புகளையும் எடுத்துவிடுவார்கள். ஆனால் இதயத்தை மட்டும் எடுக்கமாட்டார்களாம்!

அதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம் என்ன தெரியுமா? இதயத்தின் மூலமாகத் தான் அடுத்த ஜென்மத்திற்கு அவர்கள் சென்றடைவார்கள் என்று நம்பியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts Of Valentines Day

Facts Of Valentines Day
Story first published: Friday, February 9, 2018, 12:40 [IST]
Subscribe Newsletter