For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்பானி வீட்டு வேலைக்காரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்யும் வேலைககரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

|

இன்றைக்கு எல்லாருடைய ஓட்டமும் செல்வத்தை நோக்கியதாகவே இருக்கிறது. பணத்தை தேடும் எந்த தேடலில் பலரும் வாழ்க்கையை வாழமலேயே விட்டு விடுகிறோம். அப்படி சேர்த்த பணத்தைக் கொண்டு சந்தோசமாக வாழ்கிறோமா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நம்மிடம் பணமில்லை என்றால் ஒன்றுமில்லாதவன் அவமானப்படுத்தப்படுகிறோம். அதே அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால் மரியாதை காரணமாகவோ அல்லது பொறாமை காரணமாகவோ பெருவாரியான மக்கள் கூட்டத்தினருடன் சேர்த்துக் கொள்வது கிடையாது. இங்கேயும் அப்படிப்பட்ட ஒர் கோடிஸ்வரரைப் பற்றிய சுவாரஸ்ய தகவலைத் தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு நாளைக்கு பதினோராயிரம் கோடி சம்பாதிக்கிறார் முகேஷ் அம்பானி. இதை மாதத்திற்கு... வருடத்திற்கு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் இவர். இவர் தங்கியிருக்கும் வீடு உலகிலேயே அதிக விலை மதிக்கத்தக்க வீடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் .

#2

#2

மும்பையின் அண்டிலா பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகையில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. அங்கே சுமார் 160க்கும் மேற்பட்ட கார் நிறுத்துவதற்கான இடம்,குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஹெல்த் க்ளப்,சினிமா தியேட்டர்,நீச்சல் குளம்,கோவில்,ஜிம்,ஹெலிபேடு என்ற வசதிகளுடன் இவற்றை பராமரிக்க 600க்கும் மேற்பட்ட வேலையாட்கள் இருக்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

முகேஷ் அம்பானிக்கு நீடா அம்பானி என்ற மனைவியும் ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஆனந்த் தீவிர கடவுள் பக்தி உடையவர். பெருமாளின் மீது கொண்ட தீவிர பக்தியால் பெருமாளுக்கு வெள்ளை யானையை தானமாக வழங்கியிருக்கிறார். ஏற்கனவே இதற்கு முன்னால் மாடு,எருது,கிளி உட்பட பல்வேறு விலங்குகளை வழங்கியுள்ள நிலையில் வெள்ளையானையையும் திருப்பதி கோவிலில் தானமாக வழங்கியிருக்கிறார்.

இதைத் தவிர அங்கே நடக்கிற நித்திய அன்னதானத்திற்கும், திருப்பதி மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வாழும் காட்டுவிலங்குகளை பாதுகாக்கவும் ஏரளமான உதவிகளை செய்திருக்கிறார்.

Image Courtesy

#4

#4

இங்கே வெள்ளை யானை என்று தனியாக எதுவும் கிடையாது. வெள்ளையானை என்பது அல்பினோ எனப்படக்கூடிய சருமம் வெளிறியிருக்கக்கூடிய யானை. உண்மையிலேயே அந்த யானை வெள்ளை நிறத்தில் இருக்காது. கருப்பாக இல்லாது ஒரு வகை லைட் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

சருமம் ஈரமாகும் போது அவை லேசாக பிங்க் வண்ணத்திற்கு மாறிடும்.

Image Courtesy

#5

#5

என்ன தான் கோடி கோடியாக சம்பாதித்தாலும், வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் செலவிடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். பெரும்பாலான ஞாயிற்று கிழமைகளில் மனைவி, குழந்தைகளுடன் தான் நேரத்தை செலவிடுகிறார்.

குடும்ப பொறுப்புகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டின் எல்லா அறைகளிலும் குடும்ப படத்தை மாட்டி வைத்திருக்கிறார்.

Image Courtesy

#6

#6

அம்பானி வீட்டில் வேலை செய்வோருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு வருடத்திற்கு 24 லட்ச ரூபாய். இது மாதச்சம்பள கணக்கு மட்டும்... இடையில் அம்பானி வீட்டில் வழங்கப்படுகிற அலவன்ஸ் எல்லாம் சேர்க்கவில்லை.

இது போக தன் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் வரை பாக்கெட் மணியாக வழங்குகிறார் அம்பானி. அவருடைய மூத்த மகன் மற்றும் மகள் பிஸ்னஸில் இறங்கிவிட்டதால் தங்களுக்கு பாக்கெட் மணி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

Image Courtesy

#7

#7

கோடிஸ்வரனாக இருந்தால் செலவுகள் வராதா என்ன? அப்படி செலவுகள் கழுத்தை நெரித்து, மாதக்கடைசியில் கையை பிசையும் சூழல் எல்லாம் இவர்களுக்கு வராதா என்று தோன்றுகிறதா?....

அந்த சூழ்நிலை ஒரு போதும் முகேஷ் அம்பானிக்கு வந்ததில்லை. ஏன் தெரியுமா? அடிப்படையில் முகேஷ் அம்பானியிடம் இருக்கிற ஒரு பழக்கம் தான் இதற்கு காரணம்.

Image Courtesy

#8

#8

நாமெல்லாம் எப்போது வெளியில் சென்றாலும் செலவுக்காக என்று பணத்தை கையில் வைத்திருப்போம். இப்போது எல்லாரும் கார்ட்,மொபைல் பேங்கிங்,பே டிஎம், இப்படி பல வழிகளில் நமக்கான பொருட்களை வாங்கிக் கொள்கிறோம். எவ்வளவு எடுத்திருக்கிறோம். இன்னும் எவ்வளவு இருக்கும் அடுத்த பொருள் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு தேவை போன்ற கணக்குகள் ஓரளவிற்கு நமக்கு தெரிந்து கொண்டேயிருக்கும். அதனால் பணப்பற்றாகுறை என்றால் உடனேயே நமக்கு தெரிந்து விடும்.

Image Courtesy

#9

#9

ஆனால் முகேஷ் அம்பானி வெளியில் செல்லும் போது ஒரு நாளும் பணமோ அல்லது கார்டோ கொண்டு சென்றதில்லை.ஆச்சரியமாக இருக்கிறதா? குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ ஒரு விலையுயர்ந்த ஹோட்டலுக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே அவர் கண்டிப்பாக பணம் கொடுத்தாக வேண்டுமே?

Image Courtesy

#10

#10

சமீபத்தில் வெளியில் பேட்டி கொடுக்கும் போது கூட முகேஷ் அம்பானி தான் வெளியில் பணமோ கார்டோ கொண்டு செல்வதில்லை என்று தெரிவித்தார். அப்போதும் செலவு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், என்னைச் சுற்றி யாராவது எனக்கான பில் கட்ட தயாராய் இருப்பார்கள் என்றாராம்.

அவ்வளவு பெரிய கோடிஸ்வரர் கையில் எப்போதும் பணத்தை வைத்திருக்க மாட்டேன் என்று சொல்வது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

#11

#11

தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குகிறார். அதோடு இரண்டு வேலைக்காரர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மாதம் பதினைந்து லட்சம் வரை வழங்குகிறார் முகேஷ் அம்பானி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Did You Know Mukesh Ambani Servants Salary

Did You Know Mukesh Ambani Servants Salary
Story first published: Monday, June 11, 2018, 11:47 [IST]
Desktop Bottom Promotion