150க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ரசித்து, ரசித்துக் கொன்ற சீரியல் கில்லர் - குற்றப்பத்திரிகை #002

Posted By: Staff
Subscribe to Boldsky

பொதுவாக தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வரும் நபரை கைது செய்து, சிறையில் அடைத்துவிட்டால், அந்த குற்றங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்.

ஆனால், ஒருசில சமயங்களில் அந்த குற்றவாளியை சிறையில் அடைத்த பிறகும் கூட அந்த குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் விலகாமல் இருக்கும். சில சீரியல் கில்லர்களின் குற்ற வழக்குகள் இப்படியாக தான் இருக்கிறது.

அவர்கள் செய்த கொலைகளுக்கான தண்டனை பெற்றுவிட்டாலும், அவர்கள் கடத்திய, கொலை செய்த நபர்கள், அவர்களிடம் இருந்து தப்பித்த நபர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே இருக்கும். அப்படி ஒரு சீரியல் கில்லர் தான் இந்த ரோட்னி அல்கலா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1979

1979

ரோட்னி அல்கலாவை 1979லேயே கைது செய்துவிட்டனர். ஆனால், காவல் துறையோ, இவனால் கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களோ, இந்த வழக்கை விட்டு நகர முடியவில்லை. அதற்கு, காரணம் அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் பின்னால் இருக்கும் உண்மை மிகவும் அபாயகரமானவை.

2010

2010

2010ல் ரோட்னி அல்கலாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்பளித்தது கலிபோர்னியா நீதிமன்றம். இவன் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கள் இருந்தன. அதில், கலிபோர்னியாவை சேர்ந்த இரண்டு பெண்களும், நியூயார்க்கை சேர்ந்த இரண்டு பெண்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கின் முடிவு அல்ல, துவக்கம்.

தி டேட்டிங் கேம் கில்லர்!

தி டேட்டிங் கேம் கில்லர்!

ரோட்னி அலகலாவை தி டேட்டிங் கேம் கில்லர் என்று குறிப்பிட்டு அழைக்கிறார்கள். இதற்கு காரணம், இவன் கொலை செய்து வந்த காலக்கத்திற்கு நடுவே 1970-களில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தான். மேலும், அந்த நிகழ்ச்சியில் திருமணமாக ஒரு பெண்ணுடன் டேட் செய்ய இவன் வெற்றிப் பெற்றான். ஆனால், சேர்லி எனும் பெண் இவனுடன் டேட்டிங் செல்லவில்லை. இவனை விசித்திரமான அச்சுறுத்தும் வகையிலான நபராக அந்த பெண் குறிப்பிட்டு கூறியிருந்தார்.

சிறையில்...

சிறையில்...

கலிபோர்னியா சிறையில் இரண்டு பெண்களை கொலை செய்ததற்காக இவன் சிறையில் இருந்த போது, மேலும், நாட்டில் இவன் இரண்டு கொலைகள் செய்தது அறியவந்தது. அதிகாரிகள் சாட்சியங்களை வைத்து இவன் 150க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளான் என்று கண்டறிந்தனர். மேலும், அந்த பெண்களை எல்லாம் இவனது இச்சை தாகம் தீர ரசித்து, ரசித்து கற்பழித்து கொன்றுள்ளான் என்பதையும் அறிந்தனர்.

லாக்கர்!

லாக்கர்!

ரோட்னி அலகலாவின் சேமிப்பு லாக்கரை திறந்து பார்த்த போது, அதில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் மாடல் அழகிகளின் புகைப்படங்கள் இருந்ததை அதிகாரிகள் அறிந்தனர். அவர்களில் பலர் இளம்பெண்கள், சிலர் சிறுமிகள். அந்த படங்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஆதாரம் கிடைக்காதா என அதிகாரிகள் அலைந்தனர். ஆனால், அனைத்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போயின.

சில படங்கள்...

சில படங்கள்...

காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்த சில படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். அதை வைத்து, பொதுமக்கள் யாராவது அந்த படத்தில் இருக்கும் நபர்களை கண்டு தங்களை அணுக வருகிறார்களா என்று காத்திருந்தனர்.

வருகை!

வருகை!

சில பெண்கள் அந்த படங்களில் இருப்பது தங்களை போன்றே இருப்பதாக கூறி காவல் அதிகாரிகளை அணுகினார்கள். இதன் மூலம் காவல் துறைக்கு இந்த வழக்கில் ஒரு வழி கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் எங்கே எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்று வந்த பெண்களுக்கு தெரியவில்லை.

பிறகு தான் காவல் அதிகாரிகள் கண்டறிந்தனர் ரோட்னி அலகலா ஆரம்பத்தில் புகைப்படக் கலைஞராக இருந்த பிறகு சீரியல் கில்லராக மாறியுள்ளான் என்று.

வெகு சிலரே...

வெகு சிலரே...

சில படங்களை மாடலிங் போட்டோ சூட் என்று ரோட்னி எடுத்துள்ளான். ஆனால், போலீஸ் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த படங்களில் இருந்து சிலர் மட்டுமே அவர்களை அணுகினார்கள். பல படங்களில் இருப்பவர்கள் யாரென்றே தெரியவில்லை. இது வழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காணவில்லை...

காணவில்லை...

சில குடும்பங்கள் அந்த படங்களில் இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டை சேர்ந்தவர் என்றும், அவர்கள் வெகு நாட்கள் முன்னர் காணாமல் போனவர்கள் என்றும் போலீசை அணுகி கூறினார்கள். இதன் மூலமாக இந்த வழக்குக்கு ஏதாவது துப்புக் கிடைக்குமா என்று போலீஸ் யோசித்து.

இந்த வழக்கில் போலீஸ் அயராது உழைத்து. ஆனால், துரதிர்ஷ்டவசமாக போலீஸ் தேடிய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

விடை இல்லை...

விடை இல்லை...

ரோட்னி அலகலாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தாலும் கூட, தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்த அந்த உறவுகளுக்கோ, பல வருடங்கள் இந்த வழக்கில் அயராது உழைத்த காவல் அதிகாரிகளுக்கோ அவர்கள் தேடிய நபர்களும் கிடைக்கவில்லை, அந்த படத்தில் இருந்த பல பெண்கள் சார்ந்த கேள்விகளுக்கு பதிலும் கிடைக்கவில்லை.

என்ன படங்கள் அவை..

என்ன படங்கள் அவை..

அவன் புகைப்படக் கலைஞராக இருந்த காரணத்தால்... அவை எல்லாம் அவன் எடுத்த படங்கள் மட்டுமா. அல்ல அவனால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கையா என்று இதுநாள் வரையிலும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

குழப்பம்!

குழப்பம்!

இந்த வழக்கில் உண்மையை கண்டறிந்துவிட வேண்டும் என்ற காவல் அதிகாரிகள் இன்று வரையிலும் இந்த வழக்கை க்ளோஸ் செய்யாமல், என்றாவது ஒருநாள் உண்மை புலப்படும் என்று காத்திருந்து தகவல்களை தேடி வருகிறார்கள். இன்னும் காணாமல் போனவர்கள் என்று குடும்பங்களால் கூறப்பட்ட பெண்களின் நிலை என்னவென்று அறியப்படவில்லை. இது தான் இந்த வழக்கின் பெரிய குழப்பமே.

விதை!

விதை!

ரோட்னி அலகலா எடுத்த பெண்களின் படங்களில் அவர்கள் முக பாவனை கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது. பெரும்பாலான பெண்களின் முக பாவனை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. இது, இந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் பெரிய மர்மத்தின் விதையாக இருந்து வருகிறது.

All Image Source:boredomtherapy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crime Story: California’s most prolific serial killers, Rodney Alcala!

Crime Story: California’s most prolific serial killers, Rodney Alcala!