உவ்வ்வேக்...! ஆன்லையில் வைரலாகும் அடுத்த கன்றாவி சேலஞ்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நல்லவேளையாக டைட் பாட்ஸ் (Tide Pods) சவால் முடிவடைந்தது என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த கன்றாவியான சவாலுடன் களம் கண்டுள்ளனர் அயல்நாட்டு இளைஞர்கள். டைட் பாட்ஸ் என்பது சலவை செய்ய பயன்படும் பொருளாகும். இரசாயன கலவை கொண்ட இதை வாயில் வைத்துக் கொண்டு செய்வது தான் இந்த டைட் பாட்ஸ் சவால்.

ஒருவழியாக இது முடிந்தது என்று நிம்மதி அடைவதற்குள் இப்போது ஆணுறையை அடுத்த சவாலுக்கு கையில் எடுத்திருக்கின்றனர் அயல்நாட்டு இளைஞர்கள். ஐஸ் பக்கெட் சவால் என ஒன்று வந்தாலும், வந்தது, அதை தொடர்ந்து எண்ணற்ற சவால்கள் வரத்துவங்கின. அதில் முக்கால்வாசி கன்றாவியானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன இது?

என்ன இது?

காண்டம் சேலஞ் என்று கூறப்படும் இந்த சவாலில் கலந்துக் கொள்ளும் நபர் முதலில் ஒரு ஆணுறையை எடுத்துக் கொள்ள வேண்டும், அதை நாசி துவாரம் மூலமாக உள்ளிழுத்து, அதை தொண்டை வாயிலாக, வாய் வழியே வெளியே எடுக்க வேண்டும்.

படிக்கும் போதே குமட்டிக் கொண்டு வரும் இதை தான் பெரிய சவால் என்று செய்து வருகிறார்கள் அயல்நாட்டு இளசுகள்.

அபாயம்!

அபாயம்!

முதலில் முக்கியமாக இந்த சவாலில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய அபாயம் என்னவெனில், ஆணுறை போன்ற திக்கான பொருளை நாசி துவாரம் வழியாக உறிஞ்சி இழுக்கும் போது சுவாசிக்க முடியாமல் அடைத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. இதனால், சுவாசிப்பதில் தடை உண்டாகும்.

மேலும், இது பல அழற்சிககளையும் ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. பல ஆணுறைகளில் லியூப் சேர்ப்பதால், அது நிச்சயம் பல்வேறு தொற்றுகளை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுகாதார பேராசிரியர்!

சுகாதார பேராசிரியர்!

அயல்நாட்டு இளைஞர்கள் மத்தியில் சூடுப்பிடிக்க துவங்கியிருக்கும் இந்த கன்றாவியான ஆணுறை சவால் கண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பள்ளியை சேர்ந்த பேராசிரியர் ப்ரூஸ் லீ என்பவர், "ஆணுறையை நாசி வழியாக உள்ளிழுத்து, அதை வாய் வழியாக எடுக்கும் சவாலே முட்டாள்தனமானது, ஒருவேளை வெற்றிகரமாக இதை எடுத்துவிட்டாலும் கூட, இது மூச்சுவிடும் போது வாய் மற்றும் நாசி பகுதிகளில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். வெறும் லைக்ஸ் மற்றும் வீடியோ வியூஸ்க்காக இளைஞர்கள் இதை செய்வது தகுந்த செயலல்ல" என்று கூறியுள்ளார்.

மோகம்!

மோகம்!

கடந்த 2007ம் ஆண்டு முதல் தான் இப்படியாக பல சவால்கள் ஆன்லைனில் பிரபலம் அடைந்து வருகின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஒரு யூடியூப் சேனல் ஒன்று, இப்படியான சவால்கள் மேற்கொண்டு, பார்வையாளர்கள் அனுப்பும் வீடியோக்களை பதிவேற்றி பிரபலம் அடைந்தனர்.

மரணம்!

மரணம்!

அதே சமயத்தில் 2016ம் ஆண்டு ஆணுறையை விழுங்கும் சவால் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்ட பெண்மணி ஒருவர், பின் அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால் (அந்த ஆணுறை அப்பெண்டிக்ஸ் பகுதியில் சிக்கிக் கொண்டது) அவர் இறந்து போனார். பிறகு, அவருக்கு அறுவை மூலம் அகற்றியுள்ளனர்.

பெற்றோர்களே!

பெற்றோர்கள் குழந்தைகள் ஆன்லைனில் அதிக நேரம் செலவழிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் இருப்பதால் புத்திசாலி என்றாகிவிடாது. அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள், என்ன கற்கிறார்கள் என்பதையும் நாம்அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இப்படியான அபாயகரமான சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Condom Snorting Challenge is The Latest Dangerous Trend Gripping Youngsters!

Condom Snorting Challenge is The Latest Dangerous Trend Gripping Youngsters!