இந்த படத்த எல்லாம் பார்த்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்தும். # கன்ஃபியூஸ் போட்டோஸ்

By Staff
Subscribe to Boldsky

பொழுது போகாம இன்டர்நெட்டுல உலாவிட்டு இருக்கும் போது, ஃபேஸ்புக்ல எத பாக்குறோம்ன்னே தெரியாம சும்மா ஸ்க்ரால் பண்ணிட்டு இருக்கும் போது, இப்படியான படங்கள், ஜிஃப் இமேஜஸ் எல்லாம் நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீங்க. டக்குன்னு பார்க்கும் போது நெஞ்சு பக்குன்னு ஆயிடும். அப்பறம் கொஞ்சம் உத்து கவனிச்சா தான்.. அடடே இவ்வள தான் விஷயமா... எம்புட்டு விஷமத்தனமா இருக்குன்னு தெரிய வரும்.

இங்க நாம பார்க்க போற புகைப்படங்கள் அப்பறம் சில ஜிஃப் இமேஜஸ் கூட அப்படியானது தான். முதல் தடவை பார்க்கும் போது ஒரு மாதிரி தெரியும்... திரும்ப, திரும்ப ரெண்டு மூணு தடவை பார்க்கும் போதுதான்... அட விஷயம் இதுதானான்னு புரிஞ்சுக்க வைக்கும்...

வார இருதியில நிச்சயம் இந்த புகைப்பட தொகுப்பு உங்களுக்கு ஒரு நல்ல டைம் பாஸா இருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கபூர் குடும்பம்!

கபூர் குடும்பம்!

இந்தி சினிமா நடிகைகள் கரீனா கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் இருவரும் தனது தந்தை கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். நிச்சயம் முதல் தடவை பார்க்கும் போது சிலருக்கு இந்த புகைப்படம் ஏடாகூடமாக தெரிந்திருக்கலாம்.

ஆனால், பாஸ் கன்ஃபியூஸ் ஆகக் கூடாதுன்னு நாங்க முன்னாடியே சொல்லிட்டோம். நல்லா பாருங்க அவரு கரீனாவோட தோள்பட்டை மேல தான் கை வெச்சிருக்காரு.

புதிர்!

புதிர்!

இந்த கியூபிக் பாக்ஸ் விளையாட்டே பெரிய புதிர் தான். இதுல வேற நம்மாளு ஏதோ பெரிசா கன்ஃபியூஸ் பண்றாப்புல. சும்மாவே இது விளங்காது. அதாவது இது ஒருவகையான 3டி வரைப்படம். ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது மட்டும் அது சரியானதாக இருக்கும். மற்ற அனைத்து கோணங்களிலும் கோணல், மாணலாக இருப்பது போல தான் காட்சி அளிக்கும்.

நல்ல விளையாட்டு...

நல்ல விளையாட்டு...

நடுவுல இருக்க பிளஸ் குறியீடு மேல கவனத்த செலுத்து உத்து பாருங்களேன்... நிச்சயம் முதல் ரெண்டு மூணு தடவ தடுமாறுவீங்க. ஆனால், நல்ல முயற்சி பண்ணி பாருங்க... உங்களுக்கு ஒரு செம்ம ஃபன் காத்திருக்கு. ட்ரை பண்ணி தான் பாருங்களேன்...

Image Source: Wordpress

புரிஞ்சதா...

புரிஞ்சதா...

நூறு தடவை பார்த்தாலும் பலருக்கு இந்த கணக்கு புரியாது. பேசிக்காவே நமக்கும் கணக்கு வராது... இதுல இப்படி எல்லாம் எடக்கு மடக்கா ஏதாவது பண்ணா நாம எங்க போய் முட்டிக்கிறது. இந்த கணக்க பார்த்தா.. இந்த சாக்லேட் தீரவே தீராது போலயே.

Image Source: wordpress

மெய்யாலுமா...

மெய்யாலுமா...

அதாகப்பட்டது பொது ஜனங்களே... அய்யா என்ன சொல்றார்ன்னா... நீங்க படத்துல பார்த்துட்டு இருக்க எல்லா பேப்பருமே துண்டு, துண்டா மேஜையில... விழுந்து கிடக்காம்... எதுவும் நம்ம கண்ணுக்கு தெரியிற மாதிரி நிக்கிற பொசிஷன்ல இல்லையாம்.

நாம முன்னாடி பார்த்த அதே 3டி டிசைன் வேலை தான் இதுவும். ஒரு சில பேப்பர் துண்டுல ஷேடிங் பண்ணியிருக்காங்க... சில பேப்பர் துண்டுகள் வித்தியாசமான கோணங்கள்ல கட் பண்ணியிருக்காங்க அதனால தான் இப்படி தெரியுது.

Image Source: Reddit

பறக்கும் படகா?

பறக்கும் படகா?

நிச்சயமா இது ஏலியன் படகு எல்லாம் இல்ல. சாதாரண நீர் படகு தன். ஏறத்தாழ கானல் நீர் போல தான். பல சமயம் இதே மாதிரியான பல படங்கள் நாம இன்டர்நெட்டுல பார்த்திருப்போம். பீச்ல மைக்குல பேசிட்டு இருக்க பொண்ணு காத்துல பறக்குற மாதிரியான படங்கள் எல்லாம் இந்த வகையிலான இன்டர்நெட்டுல உலா வர வைரல் படங்கள்.

Image Source: fotocommunity

குளமா? வானமா?

குளமா? வானமா?

வாட்டர் இல்யூஷன் போட்டோகிரபி வகை இது. தெளிவான நீர் நிலையில இந்த மாதிரியான படங்கள்ல ரொம்ப ஈஸியா எடுக்கலாம். தெளிவான குளத்துல வானம், மேகங்களோட பிம்பம் அப்படியே விழுந்திருக்க அவ்வளவு தான். ஆனா, நாம இத ஈஸியா கண்டுபிடிக்க முடியாம கன்ஃபியூஸ் ஆயிடுவோம்.

Image Source: Twistedsifter

கையா அது?

கையா அது?

டக்குன்னு பார்த்தா அந்த நீல கலர் சொக்கா போட்டுருக்க அண்ணன் கை ரொம்ப குட்டியா இருக்க மாதிரி தெரியுதா... ச்சீ.. ச்சீ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல... ரெண்டு பெருக்கும் நடுவுல... பின்னாடு ஒரு ஆல் நின்னுட்டு இருக்காரு. அவரோட கை தான் அது.

Image Source: Twitter

முடிவே இல்லையா?

முடிவே இல்லையா?

மொதல்ல பார்த்தா... அங்கன நின்னு போட்டோ புடிச்சுட்டு இருக்க தம்பிய இந்த தம்பி போட்டோ எடுத்துட்டு வந்து நிக்கிற மாதிரி இருக்கும். கொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இங்க போஸ் கொடுக்குற அதே தம்பி... அதே போஸ்ல படத்துக்குள்ள இருப்பாரு. அப்போ இவர போட்டோ எடுத்தது யாரு? அந்த படத்துக்குள்ள இருக்க படத்துல இருக்குறதும் அதே தம்பி தானே...

இப்படியே ஒரு ரயில் வண்டி போல... இது போகிட்டே இருக்கு... இதுக்கு ஒரே முடிவே இல்ல போலயே..

Image Source: Imgur

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Collection of Pictures That Will Confuse Your Brain.

    Even These Pictures also very common and normal. But Due to the angle of picture and its colour tone. It will make you look twice to understand the reality. Come on lets get ready to feel the fun.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more