For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos

சீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos

|
Award Winning Chinese Photographer Lu Guang

லூ குவாங் சீனாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் தனது புகைப்படங்களுக்காக விருதுகள் வென்றிருக்கிறார். இவர் சமூதாயத்தில் நடக்கும் விஷயங்களை, மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.

லூ குவாங்கின் ஒவ்வொரு புகைப்படமும் சர்வதேச மேடையில் சீனாவின் வேறொரு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. இவர் சீன சமூகத்தில் மக்களின் அவலத்தை தன் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக போதைப்பழக்கம் உள்ளவர்கள், எச்.ஐ.வி நோய் தாக்கம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்வோரது படங்களை இவர் உணர்ச்சிப்பூர்வமாக படமெடுத்துள்ளார்.

இப்போது, விருதுகள் பல வென்ற லூ குவாங் ஸ்டேட் செக்கியூரிட்டி ஏஜெண்டுகள் மூலம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இவர் எங்கே போனார், இவருக்கு என்ன ஆனது... லூ குவாங் மாயாமாகிவிட்டாரா என்றே செய்திகள் வளம்வந்தபடி இருந்தன.

லூ குவாங்கின் மனைவி க்சூ க்சியோலி கடந்த நவம்பர் 27ம் தேதி தான் தன் கணவர் ஸ்டேட் செக்கியூரிட்டி ஏஜெண்டுகள் மூலம் பிடித்து செல்லப்பட்டது குறித்து கூறி இருந்தார். நவம்பர் 3ம் தேதி லூ க்சிஞ்சியாங்கிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் நான் கடைசியாக அவரை தொடர்பு கொண்டேன்.

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு (அக்.23) உரும்கி தலைநகரில் புகைப்படக் கலைஞர்களை லூ சந்தித்ததாகவும். மேலூம், நவம்பர் 5ம் தேதி அவர் சிசுவான் மாகாணத்தில் இருக்கும் தனது நண்பர் ஒருவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் என்றும் க்சூ கூறி இருக்கிறார்.

க்சூவின் தோழி ஒருவர் தான், லூ எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் கண்டறிய உதவி இருக்கிறார். லூ மற்றும் அவருடன் பணியாற்றி வந்த மற்றுமொரு புகைப்படக் கலைஞர் இருவரையும் க்சிஞ்சியாங் ஸ்டேட் செக்கியூரிட்டி பிடித்து சென்றது. ஆனால், அவர்கள் எதற்கு பிடித்து சென்றனர் என்பது குறித்து தகல்வல்கள் அறியப்படவில்லை என்று க்சூவின் தோழி தெரிவித்திருக்கிறார்.

"எனக்கு தெரியும், லூ ஒருபோதும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடமாட்டார்", என்று க்சூ நியூயார்க்கில் இருந்து பேட்டியளித்த போது கூறி இருக்கிறார். நியூயார்க்கில் க்சூ ஆர்ட் டிசைனிங் பயின்றுக் கொண்டே குழந்தையை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

க்சிஞ்சியாங் செய்தித்துறை இதுக்குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அனுப்பப்பட்ட ஃபேக்ஸ்களுக்கும் பதில் எதுவும் இதுவரையிலூம் வரவில்லை. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெங் ஷூவாங் இதுக்குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார் என்று தெரிய வருகிறது.

லூ உலகின் மதிப்பிற்குரிய உலக விருதான வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதினை சீனா விவசாயிகள் தங்கள் ஏழ்மையால் இரத்தத்தை விற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு மேலூம், அதனால் எப்படி அவர்களுக்கு எச்.ஐ.வி நோய் தாக்கம் ஏற்பட்டது என்றும் தன் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து. அதற்காக இந்த மதிப்பிற்குரிய விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலூம் லூவின் புகைப்படங்கள் சுற்றுசூழல் சீர்கேடு, தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள் போன்றவற்றை தான் எடுத்துரைத்தன. ஆனால், இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதாக சீன ஊடகங்களில் வெளிப்படையாக கூறிட முடியாது. அப்படி மீறி பதிவு செய்தால், அரசிடம் இருந்து தண்டனை பெறும் சூழல் அங்கே இருக்கிறது.

க்சூ கூறுவதை வைத்து பார்க்கும் போது, முன்கூட்டியே போலீசிற்கும் லூ குவான்கிற்கும் மத்தியில் பிரச்சனை இருந்திருக்க கூடும் என்று அறியப்படுகிறது. மேலூம், லூ க்சிஞ்சியாங் மாகாணத்திற்கு போட்டோ பிராஜாக்ட் வேலையாக செல்வதாக தனக்கு முன்கூட்டியே அவர் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் க்சூ கூறி இருக்கிறார்.

சர்வதேச மேடைகளில் லூ குவாங் நிறைய விருத்திகள் வென்றிருக்கிறார். மேலூம், லூ குறித்த இந்த செய்தி சீனாவின் weiboவில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் செய்திகள் அறியப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source & Courtesy - Lu Guang

சீனாவின் வுஹன் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வரும் வேலையாள்., ஏப்ரல் 5, 2005.

#2

#2

Image Source & Courtesy - Lu Guang

அருகாமையில் வசித்து வரும் மக்கள் வாழும் பகுதியை மிகுதியாக மாசுப்படுத்தும் தொழிற்சாலை.

#3

#3

Image Source & Courtesy - Lu Guang

சுகாதார சீர்கேடு காரணமாக எலும்பு புற்று நோயில் பாதிக்கப்பட்ட சிறுவன்...

#4

#4

Image Source & Courtesy - Lu Guang

சீனாவின் தொழிற்சாலை நகரில் வசித்து வரும் சிறுவனின் சருமம். இன்று உலகின் இரண்டாவது பெரும் வர்த்தக / பொருளாதார நாடாக வளர்ந்து நிற்கும் சீனாவில், அதற்கு மேல் சுற்றுசூழல் மாசு வளர்ந்து நிற்கிறது.

#5

#5

Image Source & Courtesy - Lu Guang

2010ம் ஆண்டு பப்லைன் உடைந்து கடலில் கலந்த எண்ணெய் கசிவு. அதனால், கடலில் ஏற்பட்ட தாக்கம்.

#6

#6

Image Source & Courtesy - Lu Guang

சுற்றுசூழல் மாசு காரணத்தால் இறந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை விவசாய நிலத்தில் வைத்து வணங்கி வரும் சிறுவன்.

#7

#7

Image Source & Courtesy - Lu Guang

தீவிரமான நோய் தாக்கத்தால் பதிக்கப்பட்ட தன் பேரனை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே கதறி அழுதபடி ஓடி வரும் பாட்டி.

#8

#8

Image Source & Courtesy - Lu Guang

மாசு காரணத்தால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தை சேர்ந்த ஊனமுற்று பிறந்த சிறுவர்களின் காப்பகம்.

#9

#9

Image Source & Courtesy - Lu Guang

காப்பகத்தில் பால் பவுடரை மெத்தையில் கொட்டி நக்கி உண்டு வரும் சிறு குழந்தைகள்.

#10

#10

Image Source & Courtesy - Lu Guang

இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தLaseng Templeம் சுற்று சூழல் மாசு காரணத்தால் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

#11

#11

Image Source & Courtesy - Lu Guang

சீனாவின் கிழக்கு பகுதியில் இயங்கி வந்த பெரும்பாலான தொழிற்சாலைகள், காற்று மாசுப்பட்டக் காரணத்தால், இப்போது மத்திய சீனா மற்றும் மேற்கு சீனா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

#12

#12

Image Source & Courtesy - Lu Guang

Baotou ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை மினரல் பிராசஸிங் முடிந்து கழிவுகளை வெளியேற்றும் காட்சி.

#13

#13

Image Source & Courtesy - Lu Guang

காற்று மாசின் தாக்கம் தாள முடியாமல், மூக்கை பொத்திக் கொண்டு இருக்கும் நபர்.

#14

#14

Image Source & Courtesy - Lu Guang

யான்வெய் துறைமுகத்தில் கெமிக்கல் தொழிற்சாலைகள் கடலில் நேரடியாக கழிவுகளை கலக்கும் காட்சி.

#15

#15

Image Source & Courtesy - Lu Guang

சீனாவின் க்சிண்டாங் நகரம். இங்கே தான் ஜீன்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகின்றன. தினமும் காலை டெனிம் ஜீன்ஸ் கிரைண்டிங் செய்ய வரும் தொழிலாளி.

#16

#16

Image Source & Courtesy - Lu Guang

குண்டும் குழியுமாக வேற்று கிரகம் போல காட்சி அளிக்கும் ஒரு இடம்...

#17

#17

Image Source & Courtesy - Lu Guang

மரணத்தின் பிடியில் கடைசி நிமிடங்களை வாழ்ந்து வரும் கணவனை மடியில் தாங்கி வைத்திருக்கும் மனைவி...

#18

#18

Image Source & Courtesy - Lu Guang

நோய்வாய்ப்பட்டு போன தன் மனைவியை தூக்கி செல்லும் கணவன்...

#19

#19

Image Source & Courtesy - Lu Guang

மருத்துவ செலவுக்காக வீட்டில் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, ஏழ்மையில் வாடும் குடும்பம்..

#20

#20

Image Source & Courtesy - Lu Guang

குளிர் காலத்தில் தன் கைகளை கொண்டு சூடு பரப்படும் இளம் பெண். இவரது தந்தை எச்.ஐ.வி'யால் பாதிக்கப்பட்டிருகிறார். இன்னும், இவர் தனது குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்து வருகிறார்.

#21

#21

Image Source & Courtesy - Lu Guang

வெறும் ஆறு வயதில் எய்ட்ஸில் இறந்த தங்கள் சகோதரனின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து வரும் சகோதரிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Award Winning Chinese Photographer Lu Guang

Lu Guang is an award winning Chinese photographer. He exposed the real face of china. He captured the real life of Chinese coal miners, drug addicts and HIV patients. No the problem is, Lu Guang missing for a month. No one know, where he is or what happened to him.
Desktop Bottom Promotion