For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியல் சிவாஜி ரஜினியாக உருவாகும் பாப் பாடகர் ஏகான். சொந்த கரன்ஸியுடன் ஒரு ஹைடெக் நகரம்!

நிஜ வகாண்டாவை உருவாக்கும் பாப் பாடகர் ஏகான். சொந்த கரன்ஸியுடன் ஒரு ஹைடெக் நகரம்!

|

மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் பிளாக் பேந்தரின் ஒரு அங்கமானது வகாண்டா. இது சப்-சஹாரா ஆப்ரிக்கா பகுதியில் அமைந்திருப்பது போல காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு கற்பனை நகரமாகும்.

பிளாக் பேந்தர் எனப்படும் சூப்பர் ஹீரோவால் ஆட்சி செய்யப்படும் இந்த நகரம் தொழில்நுட்பத்தில் உயர்ந்து காணப்படும் பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க ஆப்ரிக்க மக்கள் வாழ்ந்து வரும் பகுதியாக காண்பிக்கப்படும் இந்த வகாண்டாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Akon Going To Built Real Life Wakanda With His Own Crypto Currency and The City Gonna Be Named Akon Crypto City

பிளாக் பேந்தர், எவஞ்சர்ஸ் படங்களை பார்த்திருந்தால், உங்களுக்கு வகாண்டா மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதிநவீன தொழில்நுட்பம், உலகின் வேறெந்த பகுதிகளிலும் காணப்படாத ஆடம்பரமான, ஆரோக்கியமான வாழ்க்கை நிறைந்த பகுதியாக காண்பிக்கப்படும் வகாண்டா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிஜத்தில்?

நிஜத்தில்?

ஆப்ரிக்காவில் இப்படி ஒரு பகுதியா என்பது நிஜத்தில் சாத்தியமற்றது. உலகின் பெரும் ஏழை நாடுகள் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற வாழ்க்கையை தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை தேவைக்கான தண்ணீர் கூட இன்றி, சுகாதார பிரச்சனைகளால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கும் பகுதியாக இருந்து வருகிறது ஆப்ரிக்கா.

ஏகான்!

ஏகான்!

மார்வல் காமிக்ஸ்ல் இடம்பெற்றிருக்கும் வகாண்டா அளவு இல்லாவிட்டாலும். அதன் ஒரு சதவிதம் வாழ்வியல் கிடைத்தாலும் ஆப்ரிக்காவின் பெரும் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அது சொர்க்கமான எண்ணத்தை அளிக்கும் என்பது நிதர்சனம். ஒரு சதவிதம் என்ன... நூறு சதவிதம் உங்களுக்காக உருவாக்குகிறேன் என்று களமிறங்கி இருக்கிறார் பாப் பாடகர் ஏகான்.

ஒன் மேன் ஆர்மி!

ஒன் மேன் ஆர்மி!

உலகளவில் தனது பாடலுக்கும், குரலுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ஏகான். ஏற்கனவே தான் சம்பாதித்த, சம்பாதித்து வரும் பெரும்பகுதி பணத்தை ஆப்ரிக்க நாட்டு மக்களுக்காக தான் செலவழித்து வருகிறார் ஏகான். ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நீர், மின்சாரம், சாலை, கல்வி வசதிகளை மக்களுக்கு ஏகான் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.

செனகல்!

செனகல்!

ஏகான் ஆப்ரிக்காவின் செனகல் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் லயன்ஸ் இண்டர்நேஷனல் திருவிழாவில் தனது சொந்த கரன்ஸியை வெளியிடப்பவதாக கூறி இருந்தார். அதாவது டாலர், யூரோ, தினார், ருப்பீஸ் போல கிரிப்டோ கரன்ஸி இப்போது உலகின் பல நாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியான ஒரு சொந்த கிரிப்டோ கரன்ஸியை தான் வெளியிட போவதாக கூறி இருக்கிறார் ஏகான். அந்த கரன்ஸிக்கு ஏகாயின் என்று பெயரிட்டிருக்கிறார்.

அதிநவீன!

அதிநவீன!

பேஜ் சிக்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி காண்கையில், செனகல் நாட்டில் தலைநகர் அருகே ஏகான் ஸ்மார்ட் சிட்டி ஒன்று உருவாக இருக்கிறது. இந்த நகரில் மட்டும் தான் இந்த ஏகாயின் கிரிப்டோ கரன்ஸி செல்லுபடி ஆகும். மேலும், இந்த நகரம் மார்வலின் பிளாக் பேந்தர் காமிஸில் இடம்பெறும் வகாண்டா என்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட நகரை போல ஏகான் ஸ்மார்ட் சிட்டி உருவாக இருக்கிறது என்றும் அறியப்படுகிறது.

அரசு உதவி!

அரசு உதவி!

ஏகானின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் செனகல் நாட்டு அரசு இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்து உதவி இருக்கிறது. இந்த இடம் டாக்கர் (Dakar) எனும் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. மேலும் இங்கிருந்து செனகல் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையத்தை வெறும் ஐந்தே நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பாக காணப்படுகிறது.

முதலீட்டாளர்கள்!

முதலீட்டாளர்கள்!

ஏகானின் இந்த புதிய முயற்சிக்கு பல முதலீட்டார்கள் உதவ முன்வந்துள்ளனர். பொது மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் கூட இந்த புதிய நகரம் கட்டமைக்க உதவலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் என்பதை தாண்டி, ஏகானின் இந்த ரியல் லைப் வகாண்டா நகரமைப்பு முயற்சிக்கு நிறைய தொழில்நுட்ப ஆர்வலர்கள், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களும் உதவ, பங்கெடுத்துக் கொள்ள முன்வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

லைட்டிங் ஆப்ரிக்கா!

லைட்டிங் ஆப்ரிக்கா!

இதுதான் ஏகானின் முதல் முயற்சி என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு முன் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா என்ற திட்டத்தின் மூலம் ஆப்ரிக்காவின் 17 நாடுகளில் சோலார் பேனல் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. அந்த பிராஜக்ட் இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, இப்போது 25 ஆப்ரிக்கா நாடுகள் என்ற குறிக்கோளுடன் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக ஏகான் நிறைய விருதுகள் வென்றார். இதில் சீன முதலீடு அதிகம் இருந்தது. ஐநா முதற்கொண்டு இந்த முயற்சிக்காக ஏகானை பாராட்டியது.

வெயிட்டிங்!

வெயிட்டிங்!

ஏகானின் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா பிராஜத்க் போலவே, ரியல் லைப் வகாண்டாவான ஏகான் ஸ்மார்ட் சிட்டி பிராஜக்டும் வெற்றிகரமாக முடிவடைந்தால்... இதுவரை காமிக்ஸ்ல் மட்டும் கண்டுவந்த வகாண்டாவை கூடிய விரைவில் செனகல் நாட்டில் தலைநகர் அருகே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Akon Going To Built Real Life Wakanda With His Own Crypto Currency and The City Gonna Be Named Akon Crypto City

Akon Going To Built Real Life Wakanda With His Own Crypto Currency and The City Gonna Be Named Akon Crypto City
Desktop Bottom Promotion