For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தான் ரத்தத்தில் குளிக்க வேண்டும் என்பதற்காக 650 பெண்களை கொன்று குவித்த பெண்...

|

"ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி ?" என்ற பாடல் இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஆம், ஒரு காலத்தில் இந்த பெண்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பல கொலைகளை செய்தவர்கள். சமத்துவமின்மை நாகரீகத்தின் விலையாகும் என்று கூறும் ஜார்ஜ் ஆர்வேல், சண்டை மற்றும் சச்சரவு நேரங்களில் மக்கள் அதிகாரத்தை விட்டு கொடுக்கின்றனர் என்று மிக எளிமையாக கூறுகிறார். அசாதாரண பண்புகளைக் கொண்ட சக்தி வாய்ந்த நபர்களை வரலாறு கண்டுணர்ந்து நமக்கு வெளிபடுத்துகிறது. அவர்கள் கூட்டத்தில் இருந்து தனியாக தெரிகின்றனர். ஹிட்லர், நீரோ, முசோலினி, காஸ்ட்ரோ போன்றவர்களை மக்கள் சர்வாதிகாரிகளாக நினைவில் வைத்துக் கொள்கின்றனர். ஆனால் இதே செயல்களைச் செய்த பெண்களை மறந்து விடுகின்றனர். இது சமூதாயத்தின் முரண்பாடு.

female criminals

இருப்பினும், வரலாற்றின் பிரதான ஆண் சர்வாதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புகழ் மற்றும் கவனம் காரணமாக, பெண் சர்வாதிகாரிகள் எந்த பெரிய வெளிச்சத்தையும் அனுபவிக்கவில்லை. இந்த பெண்களில் சிலர் மிகுந்த பயத்தைக் கொடுப்பவர்களாக மட்டும் இல்லாமல் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இரக்கமற்ற, இரத்த வெறி கொண்ட சில பெண் சர்வாதிகாரிகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலிசபத் பதொரி

எலிசபத் பதொரி

ஹங்கேரிய பிரபுத்துவத்தின் வழி வந்த இவரை "இரத்த கோமாட்டி" என்று உலகம் முழுவதும் அங்கீகரித்தது. அந்த அளவிற்கு உலகிலேயே அதிகமானோர் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார். 16,ம் நூற்றாண்டு மற்றும் 17ம் நூற்ற்றாண்டின் இறுதியில் இவர் 650 இளம் பெண்களை கொன்று குவித்தார்.

இவருடைய இளமையான சருமத்தை பாதுகாக்க, இளம் பெண்களின் இரத்தத்தில் குளிப்பது நல்லது என்று இவர் நம்பினார். தற்போது நவீன காலத்தில் ஸ்லோவாகியா என்று அழைக்கப்படும் தனது கோட்டையில் தொடர்ந்து கொடூரமான முறையில் அவர்களை கொன்று வந்தார். 300 க்கும் மேற்பட்டவர்கள் அவரை ஒரு தொடர் கொலையாளியாக உறுதி செய்தனர். காட்டேரித்தனத்துடன் இருக்கும் மனிதர்களில் ஒருவராக இவர் இருந்திருக்கிறார்.

Image Source

கேத்ரின் டி மெடிசி

கேத்ரின் டி மெடிசி

இத்தாலிய பிரெஞ்சு பிரபுத்துவத்தின் குடும்பத்தில் ஒருவரான கேத்ரின் பல்வேறு மாத்ரீகம், சூனியம் போன்றவற்றோடு தொடர்புடையவராக இருந்து வந்தார். இவர் பிரான்சின் ராணியாக 1547-1559 வரை நீடித்தார்.

ஆகஸ்ட் 1572 இல் ஹுகெனோட்ஸ் (பிரெஞ்சு கால்வினிஸ்ட் புராட்டஸ்டன்ட்) க்கு எதிராக நடத்தப்பட்ட செயின்ட் பர்த்தோலோம்'ஸ் தினம் படுகொலைக்குப் பின்னால் கேத்தரின் தான் முக்கிய நபராக செயல்பட்டிருக்கிறார் என நம்பப்படுகிறது. சுமார் 30,000 ஹுகெனோட்கள் பாரிசில் ஒரு வார காலமாக படுகொலை செய்யப்பட்டனர்.

பிரெஞ்சு உணவுகளில் பல வகைகளைக் கண்டுபிடித்த ஒரு சமையல் சூத்திரதாரியாகவும் இவர் விளங்குகிறார். இவர் பிரான்சில் அறிமுகப்படுத்திய உணவு வகைகள், டின்னெர் போர்க், பார்ஸ்லே, லெட்டுஸ், ப்ரோகோலி, பட்டாணி, பாஸ்தா, பர்மேசன், வான்கோழி போன்றவை அவற்றுள் அடங்கும்.

Image Source

இங்கிலாந்தின் மேரி

இங்கிலாந்தின் மேரி

மேரி த்யுடோர் இங்கிலாந்தின் முதல் ராணி ஆவார். இவருடைய காலம் 1553-1558 ஆகும். இங்கிலாந்தின் சீர்திருத்தம் மக்கள் கலாச்சாரத்தையும் நம்பிக்கையையும் மாற்றும்போது அது சிம்மாசனத்தையும் எட்டியது.

சீர்திருத்தத்தின் விளைவுகளை மாற்றுவதற்கான அவரது பிரச்சாரம், சுமார் 300 பேரை மரண தண்டனைக்குள்ளாக்கியது. அவர் ஹென்றி VIII மற்றும் கேத்ரின் ஆப் ஆர்கான் ஆகியோரின் ஒரே, வயது வந்த மகள் ஆவார். இவருடைய பிரச்சாரம் "மரியன் துன்புறுத்தல்" என்று குறிப்பிடப்படுகிறது.

Image Source

ரணவலோனா

ரணவலோனா

1800 களின் முற்பகுதியில் ரணவலோனாவின் 33 வருடகால ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதன் மூலம், மடகாஸ்கரில் உள்ள ஐரோப்பிய தாக்கங்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பிற்கு பிரபலமாக அறியப்பட்டார். ரனவலோனா தனது சொந்த குபும்பத்தையும் வெளிப்படையான வாரிசுகளையும் கொன்று சிம்மாசனத்தில் ராணியாக அமர்ந்தார். அவரது கடுமையான ஒழுக்கம் மற்றும் தண்டனையின் வழிமுறைகள் பாரம்பரியமான நடைமுறையில் மையப்படுத்தப்பட்டன - வரி செலுத்துவது மற்றும் கட்டாய உழைப்பு இவருடைய நடைமுறையானது. இவர் மலகசி கிறிஸ்தவ இயக்கத்தை இழிவு படுத்தினார். கணிசமான இராணுவம் இருந்த போதிலும், வழக்கமான போர், நோய் மற்றும் கட்டாய உழைப்பு ஆகியவற்றின் கடுமையான வழிகள், அவரது படையினரின் உயர்ந்த இறப்பு விகிதத்திற்கு வழிவகுத்தன. மற்றும் 83 வயதில் அவர் இறந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் அவர் கொன்று குவித்திருந்தார்.

Image Source

இர்மா க்ரேஸ்

இர்மா க்ரேஸ்

ஒரு நாஜி போர் குற்றவாளி மற்றும் நாசி சித்திரவதை முகாம்களில் இரண்டாம் உயர்ந்த இடத்தைப் பெற்ற பெண் வார்டன், ஆஷ்விட்ஸ் ஹைனா, இர்மா க்ரேஸ் ஒரு மிருகத்தனமான பெண். போர் குற்றங்களுக்காக நேச நாடுகளால் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், 30,000 பெண் கைதிகளுக்கு அவர் பொறுப்பாளியாக இருந்தார். 22 வயதில், அவர் நூற்றுக்கணக்கான பெண்களை சித்திரவதை செய்தார் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். கைதிகளின் மீது பசியோடு இருக்கும் நாய்களைத் ஏவி விட்டதாகவும் , அத்தகைய செயல்களின் இருந்து பாலியல் மகிழ்ச்சியைப் பெற்றதாகவும் கூறுகிறார். 22 வயதில், அவர் பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் மிகவும் இளையவராக இருந்தார்.

Image Source

டரியா சால்ட்டிகொவா

டரியா சால்ட்டிகொவா

ரஷிய பிரபுத்துவத்தில் பிறந்தவர். அரண்மனை உறுப்பினர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். இதனால் 1750-1760 வரை இருந்த அதிகாரியாளுக்கு இவர் மேல் சந்தேகம் எழுந்ததே இல்லை. இவர் பெண்களையும் , இளம் பெண்களையும் மட்டும் குறி வைக்கும் ஒரு கொடுமையான தொடர் கொலைகாரர் மற்றும் கொடுச்செயல் புரிபவர் ஆவார். இவருடைய எஸ்டேட்டில் மாயமான முறையில் இறந்ததாக கருத்தப்பட்ட 140 அடிமைகளை துன்புறுத்தி கொலை செய்திருக்கிறார் என்பது பின்னாட்களில் தெரிய அந்தது. இவரை பொதுவாக சால்டிசிக்கா என்று அழைப்பார்கள். இதே மனநிலை கொண்ட எலிசபெத் பதொரியுடன் இவரை ஒப்பிட்டு இவரையும் "இரத்த கோமாட்டி" என்றுக் கூறுவார்கள்.

Image Source

மா பர்கர்

மா பர்கர்

1920 களின் முற்பகுதியிலும் 30 களின் முற்பகுதியிலும் "பொது எதிரி சகாப்தத்தின்" போது ஒரு இரக்கமற்ற குற்ற அணிவகுப்பு மற்றும் குழு தலைவர்களில் மிகவும் மோசமானவர் , மே பர்கர் மத்திய மேற்கு அமெரிக்காவில் ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருந்தார். பர்கர் குழுவை நடத்தி வந்த தனது பிள்ளைகள் செய்து வந்த பல குற்றங்களுக்கு இவர் தலைமை வகித்து வந்தார். FBI நிறுவனர் J.எட்கர் ஹூவர் , மா பர்கரை பற்றி , சென்ற தசாப்தத்தின் மிகவும் கொடூரமான, ஆபத்தான மற்றும் திறமையான குற்றம் புரியும் நபர் என்று விவரிக்கிறார். மா பர்கர், FBI ன் நம்பர் ஒன் பொது எதிரி ஆவார். பல்வேறு திருட்டு, கொள்ளை,கொலை மற்றும் கடத்தல் வழக்குகளில் இவர் தொடர்பு கொண்டுள்ளார். FBI வரலாற்றில் நீண்ட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டிருந்தார்.

Image Source

காஸ்டிலாவின் இசபெல்லா

காஸ்டிலாவின் இசபெல்லா

கேத்ரின் ஆப் அரகோன் என்ற பிரபலத்தின் தாய் இசபெல்லா. கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிப்பதற்கான பயணத்திற்கு இவர் நிதி உதவி புரிந்தார். இஸ்லாம் மற்றும் யூதர்களுடன் இவருக்கு சில நெருக்கமான பிரச்சனைகள் இருந்து வந்தன. அவரது சீர்திருத்தங்கள் யூதர்களையும் முஸ்லிம்களையும் வெளியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தன. போர்ச்சுகலுக்கு எதிரான போர் இந்த அணுகுமுறையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என பலர் நம்புகின்றனர். குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான அவளுடைய தண்டனைகள் கடுமையானதாக மன்னிக்க முடியாததாக இருந்தன. கஸ்டிலில் முதல் முறையாக ஒரு நியமிக்கப்பட்ட போலிஸ் படையைப் பயன்படுத்தியது இவருடைய ஆட்சி காலத்தில் தான்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Female Master Criminals You Didn't Know About

We list down powerful women who have not cared about what people felt, so much so that they have set records for kills at a time.
Story first published: Saturday, June 30, 2018, 8:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more