2018 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த நிறம் அதிர்ஷ்டமானது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். பலருக்கு இந்த ஆண்டாவது நமக்கு நல்ல ஆண்டாக இருக்குமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். சீன ஜோதிடத்தின் படி 2018 ஆம் ஆண்டு 'நாய்' வருடமாகும். இதனால் இந்த வருடம் பலருக்கு நல்ல காலமாக இருக்குமாம்.

ஒவ்வொரு புதிய வருடத்தையும் நன்றாக இருக்க வேண்டுமென சந்தோஷமாக வரவேற்போம். சீன ஜோதிடத்தின் படி, நாய் வருடமான 2018 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்காருக்கும் ஒரு நற்செய்தி வழங்கப் போவதாக சொல்கிறது. அந்த விஷயத்தை வெளிப்படுத்தும் முன், நிறங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறங்கள் எப்படி வாழ்க்கையை பாதிக்கின்றன?

நிறங்கள் எப்படி வாழ்க்கையை பாதிக்கின்றன?

நீங்கள் இருக்கும் இடம் பிரகாசமான நிறத்தில் சூழ்ந்து இருந்தால், உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் நிறங்கள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, உங்கள் மனநிலையையும் குழப்பமின்றி தெளிவாக வைத்து, வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லும்.

நிறங்களின் ஆற்றல்

நிறங்களின் ஆற்றல்

ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு ஆற்றலைக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் நம்மைச் சுற்றி நல்ல பிரகாசமான நிறங்கள் சூழ்ந்திருக்க, அது நாம் வாழும் வாழ்க்கையை பிரகாசமாக கொண்டு செல்லும்.

நாய் வருடங்கள்

நாய் வருடங்கள்

இதுவரை 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006 போன்றவை நாய் வருடங்களாகும். இந்த வருடங்களில் வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் சாதகமான நேரத்தை அனுபவித்ததாக நம்பப்படுகிறது.

2018 வண்ண ஜோதிடம்

2018 வண்ண ஜோதிடம்

2018 ஆம் ஆண்டு நாய் வருடம். இந்த வருடத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஊதா போன்றவை நல்ல நிறங்களாக நம்பப்படுகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த நிறம் நல்ல அதிர்ஷ்டமாக இருக்கும் என்பது குறித்து காண்போம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், 2018 ஆம் ஆண்டு சிவப்பு நிறத்தைத் தவிர்ப்பது நல்லது. மாறாக வெள்ளை, எலுமிச்சை பச்சை அல்லது மரகத பச்சை போன்ற நிறங்கள் நல்ல அதிர்ஷ்ட காற்றை உங்கள் பக்கம் வீசச் செய்யும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆப்பிள் பச்சை மற்றும் குங்கும சிவப்பு போன்றவை மிகச்சிறந்த நிறங்களாகும். நல்ல நாட்களில் இந்த நிற உடைகளை அணியுங்கள். இதனால் உங்கள் வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் காணலாம்.

மிதுனம்

மிதுனம்

புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வெள்ளை, வெளிரிய சாம்பல் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தை வழங்கும். குறிப்பாக புதன் கிழமைகளில் பச்சை நிறங்களை உபயோகிப்பது இன்னும் நல்லது.

கடகம்

கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்களுக்கு நீலம் மற்றும் சிவப்பு நிறங்கள் நல்ல அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிலும் திங்கட்கிழமைகளில் வெள்ளை, கடல் பச்சை அல்லது வெளிரிய நீல நிறங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு 2018 ஆம் ஆண்டு வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் அதிர்ஷ்டம் வழங்கும் நிறங்களாகும். இருப்பினும் இவர்கள் காப்பர், வெளிரிய பச்சை மற்றும் வெள்ளை போன்ற நிறங்கள் வாழ்க்கையை மாற்றும்.

கன்னி

கன்னி

புதன் கிரகத்தால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சை, நீலம், போன்றவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நினைத்த காரியம் நடக்க வேண்டுமானால், புதன் கிழமைகளில் பச்சை நிற உடைகளை அணியுங்கள்.

துலாம்

துலாம்

சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் 2018 ஆம் ஆண்டு வெள்ளை, பச்சை, நீலம் போன்ற நிறங்களைப் பயன்படுத்தினால், அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வெள்ளிக் கிழமைகளில் சந்தன நிறங்களைப் பயன்படுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கருப்பு அல்லது வெள்ளை அதிர்ஷ்ட நிறங்களாகும். எனவே நல்ல நாட்களில் இந்த நிற உடைகளை அணிவது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு

வியாழனால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்களுக்கு 2018 ஆம் ஆண்டு பச்சை, ஆரஞ்சு சிவப்பு போன்றவை அதிர்த்தை வழங்கக்கூடிய நிறங்களாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்த எதிலும் சாதகமான தீர்வு கிடைக்கும்.

மகரம்

மகரம்

சனியால் ஆளப்படும் மகர ராசிக்காரர்களுக்கு நீலம், பச்சை மற்றும் அன்னாசி நிறங்களில் அதிர்ஷ்டம் மறைந்துள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற உடையை அணிய அதிர்ஷ்டம் கொட்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சிவப்பு, ஆப்பிள் பச்சை, ஸ்கை ப்ளூ போன்றவை அதிர்ஷ்ட நிறங்களாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊதா அல்லது மிட்நைட் ப்ளூ நிற உடை அணிவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் 2018 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்க பச்சை நிறங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதிலும் ஒவ்வொரு வியாழக் கிழமையும் வெளிரிய மஞ்சள் நிற உடைகளை அணிய அதிர்ஷ்டம் கொட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Year 2018 predictions: Lucky color for your Zodiac Sign!

Want to know which color is best suited for your zodiac sign for the upcoming New Year, keep reading.
Story first published: Saturday, December 9, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter