கால் கட்டை விரல்களை இறந்த பின் ஏன் கட்டுகிறார்கள்?

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் யாராவது இறந்திருந்தால் நாம் இதை கண்டிப்பாக பார்த்திருப்போம். இறந்தவரது கால் கட்டை விரல்களை ஒரு சிறிய துணி கொண்டு கட்டுவார்கள். இது ஏன்? எதற்கு? என்பது பற்றி நம்மில் பலருக்கும் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், காலம், காலமாக இதை நாம் பின்பற்றி வருகிறோம்.

இதற்கான விடை என்ன என்பது குறித்தும். கூறப்படும் தகவல்கள் குறித்தும் நாம் இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராணசக்தி!

பிராணசக்தி!

ஒருவர் மரணமடைந்த பின் அவரது உடலில் இருந்து பிராணசக்தி உடலை விட்டு முற்றிலும் அகன்றுவிடுவதில்லை. அந்த உயிரானது உடலை சுற்றி இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான் இறந்தவரது உடலை வடக்கு, தெற்காக வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

ஏன் வடக்கு தெற்காக?

ஏன் வடக்கு தெற்காக?

இறந்த உடலை அல்லது இறக்க போகும் நபர்களை வடக்கு தெற்காக வைப்பதால் உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களால் அவ்வுடலின் பிராணசக்தி ஆனது, உடனே அகன்று விடும் என கூறப்படுகிறது. மற்ற நிலைகளில் பிராணசக்தி மீண்டும் உட்புக முயலும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் சில தாக்கங்கள் இறந்த நபரின் உடலுக்கும், அவரை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறப்படுகிறது.

கால்கள் அகலமாக திறந்தால்?

கால்கள் அகலமாக திறந்தால்?

இறந்த நபரின் கால்கள் அகலமாக திறந்த நிலையில் இருந்தால். பின்புற துவார திறந்திருக்கும். இந்த நிலையில் பிரானசக்தியானது இந்த மூலாதாரம் வழியே மீண்டும் உட்புக முயலும். இதுவும் உடலுக்கும், சூழலுக்கும் உகந்தது அல்ல என கூறப்படுகிறது.

கால் கட்டு!

கால் கட்டு!

இதனால் தான் இறந்த நபரின் கால்கள் கட்டப்படுகின்றன. இதனால் மூலாதாரம் மூடப்படும். இதேபோல, யோகக்கிரியைகள் செய்ய நீங்கள் கால் விரல்களை கட்டினாலும் பின்புற துவாரம் இயல்பாக மூடிக் கோலும். இதனால் மீண்டும் பிராணசக்தி உட்புக வாய்ப்புகள் இன்றி போகும்.

மாந்திரீகம்!

மாந்திரீகம்!

மீண்டும் பிராண சக்தி உட்புகும் போது ஏற்படும் சில எதிர்மறை சக்திகள் தீய காந்த அலைகளை உண்டாக்கும் என்றும் அது அந்த உடலை மாந்திரீக செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

இது போன்ற பல காரணங்கள் இருப்பதால் தான் இறந்த நபரின் கால் விரல்களை கட்டுகிறார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why in Hindu Rituals, They Tie Toe Finger Together after death?

Why in Hindu Rituals, They Tie Toe Finger Together after death?
Story first published: Saturday, April 1, 2017, 11:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter