Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
2016-ல் தீர்க்க முடியாத மர்மங்களாக நீடித்த 6 விஷயங்கள்
இங்கு 2016-ல் தீர்க்க முடியாத மர்மங்களாக நீடித்த 6 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஏலியனில் இருந்து பல பிரபலங்களின் மரணங்கள் வரை என உலகில் இன்றளவும் கண்டறியப்படாத மர்மங்கள் பலவன இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் கூட பல அரசியல் தலைவர்களின் மரணங்களில் இருந்து ஆன்மீக விஷயங்கள் வரை பல மர்மங்கள் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இந்த வகையில், சென்ற 2016-ம் ஆண்டும் சில தீராத, தீர்வு கிடைக்காத மர்மங்களை புதைத்து சென்றிருக்கிறது. அதை பற்றி இங்கு காணலாம்...

திடீர் கோமாளிகள்!
பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரை போல வேடிக்கையான முகமூடி மற்றும் மேக்கப் போட்டுக்கொண்டு, சாலையில் செல்வோரை, காரில் செல்வோரை எல்லாம் வழிமறித்து மிரட்டு, பயமுறுத்தினர்.

வழக்கு பதிவு!
இந்த கோமாளிகள் ஏன் தோன்றினர், எதற்காக இந்த சம்பவங்கள் நடந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது. இது குறித்து பல வழக்குகள் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
கஜகஸ்தான்!
கஜகஸ்தான்-ல் சுவஸ்திக் போன்ற சில வடிவங்கள் தென்பட்டன. இதை கூகிள் வரைப்படத்தின் உதவியோடு கண்டனர். இந்த வடிவத்தின் பிறப்பு, தோற்றம் பற்றி அறிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பலர் முயன்றனர். ஆனால், இதுவரை இதற்கான பதில் கிடைக்கவே இல்லை.
மான்கள் இறப்பு!
ஆண்டிலோப் எனப்படும் மறிமான்கள் திடீரென இறந்தன. ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்குள் 1,20,000 மான்கள் இறந்தன. இதற்கான காரணம் இன்றளவும் அறியப்படவில்லை.

பிண படகுகள்!
ஜப்பானில் பிணங்கள் அடங்கிய பல படகுகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த சில வருடங்களாகவே இந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த மரணங்களுக்கான காரணம் இன்றளவும் அறியப்படவில்லை.

வடகொரியா!
புலனாய்வு அதிகாரிகள் இதற்கு பின்னாடி இருப்பது வடகொரியாவின் சூழ்ச்சி என கூறுகின்றனர். ஆனால், வடகொரியாவிற்கு எதிராக இதுவரை எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.



Click it and Unblock the Notifications