டெல்லி ரயிலேறி வந்த டெங்கு கொசுவும், போருக்கு தயாரான நாடகக் காரர்களும் - 2017 ரிவியூ!

Posted By:
Subscribe to Boldsky

"ஒன்லைன் ரிவியூ 2017: ஜனவரியில் டக்கரில் துவங்கி, டிசம்பரில் குக்கரில் முடிந்துள்ளது" என சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் கேலியாக ஒரு பதிவிட்டிருந்தார். ஆம்! இது நூறு சதவீதம் உண்மை தானே!

சென்ற வருடங்களை காட்டிலும் தமிழர்களுக்கு கர்வமும், திமிரும், தமிழ் உணர்வும் அதிகமாக வெளிப்பட்ட வருடமாக திகழ்ந்தது 2017. இன்னும் ஓரிரு நாட்களில் டாட்டா, பை சொல்லிக் கிளம்பவிருக்கும் இந்த 2017 நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

தமிழின் மகத்துவம். படிப்பின் முக்கியத்துவம். நாம் அளித்த வாக்கும், நமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் என்னவாகின? எம்.எல்.எ-க்கள் முதல் அமைச்சர்கள் வரை கூவத்தூர் ரிசார்ட்டில் கூடி கும்மாளம் அடித்த நினைவுகள் முதல் நம்மை எரிச்சலடைய செய்த நிகழ்வுகள் பலவனவும் இந்த வருடம் நடந்துள்ளது.

கலைஞரும், அம்மாவும் மாறி, மாறி விட்ட அறிக்கையில் ஆவேசம் இருந்தன. ஆனால், இன்றைய அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகளில் வெறும் வேஷம் மட்டுமே இருக்கின்றன.

இதோ! இந்த வருடம் டிரெண்ட்டான வார்த்தைகள் சில...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு!

தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா என இன்றைய சமூதாயம் கூறிக் கொள்ள பெரும் வரலாற்று நிகழ்வினை நடத்தினர் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுக்காக போராடி உலகளவில் பெரும் பெயர்பெற்றனர் நமது தமிழ் மாணவர்கள். எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒரு பெண்ணுக்கு கூட பாலியல் கொடுமை விளையவில்லை. போராட்டத்தின் கரு என்னவோ, அதிலிருந்து ஒரு அடி கூட நகரவில்லை.

போராட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை உலகுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஒரு பாடம் எடுத்துக் காட்டினார்கள் தமிழக இளைஞர்கள்.

தியானம்!

தியானம்!

முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு பிரபலம் ஆனது இந்த தியானம். பன்னீர் செல்வம் அவர்கள் தியானம் செய்த பிறகு, தியானம் என்ற வார்த்தை தமிழகத்தில் பதட்டத்திற்கான பொருள் கொண்டது என்பது மிகையாகாது. செய்தியில் யாரேனும் தியானம் செய்கிறார்கள் என தகவல் வந்தால்.. அன்று இரவு உறக்கத்தை மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நிலை உண்டானது. அந்த அளவிற்கு தியானம் பெரும் பதட்டத்தை தமிழகத்தில் உண்டாக்கியது.

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்?

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்?

உருவத்திலும், ஆங்கலம் பேசுவதிலும் அட அம்மா மாதிரியே இருக்காங்களே என ஆச்சரியப்பட செய்த நபர். அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும், அதை மக்கள் தான் சொல்ல வேண்டும் என சீனா பொம்மைக்கு கீ கொடுத்தால் பேசுவது போல, பேசி, பேசி... அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்ற சொல் மிகப்பெரிய கலாய் வார்த்தையாக மாற காரணமாகிவிட்டார்.

தர்மாக்கோல் அமைச்சர்!

தர்மாக்கோல் அமைச்சர்!

அதிமுக எவ்வளவு பெரிய பரிதாப நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை முதன் முதலில் வேட்டவேளிச்சமிட்டு காட்டிய அசாத்திய மனிதர் செல்லூர் தர்மாக்கோல் அமைச்சர் அவர்கள். நீர் ஆவியாவதை தவிர்க்க இவர் கொண்டு வந்த தர்மாக்கோல் திட்டம் பிபிசி முதல் பிரபலமானது யாராலும் மறக்க முடியாது. செல்லூர் என்ற அடைமொழி தர்மாக்கோலாக மாறியது பின்னாட்களில்.

ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி

பணமப்பிழப்பு என்ற சோகம் மறைவதற்குள் ஜி.எஸ்.தி என்ற பேரிடி விழுந்தது மக்கள் மீது. ஜி.எஸ்.டி என்பது ஏற்கனவே இருந்த வரிகளின் மாற்று அமைப்பு தான். ஆனால், சில வியாபாரிகள், ஏற்கனவே இருந்த வரியை நீக்காமல். அந்த வரி சேர்ப்பின் உடனான விலையுடன், ஜி.எஸ்.டியும் சேர்த்து விலை உயர்த்தி பொருட்கள் விற்றதால் ஜி.எஸ்.டி என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட கூடுதல் வரியாக வெகுஜனமக்கள் காண துவங்கினார்கள்.

ஹார்ட்வர்க்!

ஹார்ட்வர்க்!

விவேகம் மூலமாக பிரபலமான வார்த்தை ஹார்ட்வர்க். படம் சுமார் தான்... ஆனால் அஜித்தின் ஹார்ட்வர்க் செம்ம. அதற்காகவே படம் ஹிட்டாக வேண்டும் என பலர் கூவினார்கள். அப்படி பார்த்தால் பரத்தின் 555 சூப்பர்ஹிட் ஆகியிருக்க வேண்டும். விக்ரமின் படங்கள் அனைத்தும் பிளாக்பாஸ்டர் ஆகியிருக்க வேண்டுமே.?

ஐ.டி ரெய்டு!

ஐ.டி ரெய்டு!

ரெய்டு ஹே..... இந்தியாவில் இந்த வருடம் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வார்த்தை. யாரேனும் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் ரெய்டு.. ரெய்டு.. ரெய்டு... என பரபரப்பு செய்திகள் பறந்தன. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல. பாரபட்சம் இன்றி பலர் வீடுகளில், அலுவலங்கங்களில் ரெய்டு பறந்தன. ஆனால், அதன் ரிசல்ட் என்ன? அந்த ரெய்டில் என்ன கண்டுப்பிடித்தனர் என்பது தான் இதுநாள் வரையும் யாருக்கும் புலப்படாத விஷயமாக இருக்கிறது.

டெல்லிக் கொசு!

டெல்லிக் கொசு!

இந்த வருடம் மக்களாய் பாடாய்படுத்தியது அரசியல் வாதிகள் மட்டுமல்ல, கொசுக்களும் தான். அதிலும், தமிழகத்திலும் இவர்கள் இருவரும் டாக் டீம் போட்டுக் கொண்டு அலுச்சாட்டியம் செய்தார்கள் என்பது மிகையாகாது. கொசுக்கள் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க ஏதேனும் செய்யக் கூறினால், தமிழகத்தில் டெங்கு பரவ தமிழ்நாட்டு கொசுக்கள் காரணம் அல்ல. டெல்லியில் இருந்து ரயில்களில் வரும் கொசுக்கள் தான் அதற்கு காரணம் என கொசுக்களுக்குள்ளும் எல்லை பிரித்து சண்டைமூட்டி விட்டனர் நமது ஊர் அரசியல் வாதிகள்.

டுபுச்சுக்கு டுபுச்சுக்கு பிக் பாஸ்!

டுபுச்சுக்கு டுபுச்சுக்கு பிக் பாஸ்!

ஏற்கனவே பக்கத்து வீட்டு கதைகளை கேட்பதெனில் நம்மவர்களுக்கு காது ஷார்ப்பாகிவிடும். இதில், அதையே படம்பிடித்து காண்பிக்கப் போகிறார்கள். அதில் பிரபலங்கள் கலந்துக் கொள்ள போகிறார்கள் என்றவுடன. நம்மாட்கள் டபிள் ககுஷி ஆகிவிட்டார்கள். சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை முணுமுணுத்த வார்த்தைகளில் இந்த வருடத்தில் டுபுச்சுக்கு டுபுச்சுக்கு பிக் பாஸும் இடம் பிடித்தது.

இதில் ஓவியா ஆர்மி முதல் ஜூலி, பிந்து, ரைசா ஆர்மி வரை படைகள் திரண்டு ஓட்டுப் போட்டனர்.

மெர்சல்!

மெர்சல்!

இந்த வருடம் மெர்சல் கோலிவுட்டில் மெர்சல் செய்ததோ இல்லையோ இந்திய அரசியலில் ஒரு மெர்சல் செய்தது. சும்மா இருந்த சங்கை ஊத்திக் கெடுத்தான் என்பார்களே அப்படி தான் இந்த மெர்சல் மேஜிக்கும். சும்மா விட்டிருந்தால், அதுவே ஓரிரு வாரங்களில் அடங்கியிருக்கும்.

அதை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட மலர்ந்தே தீரும் அறைக்கூவல் கூட்டத்தினர். ஜோசப், ஆண்டி-இந்தியன், என கூவ... மெர்சல் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாற. 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் செய்தது.

சமீபத்தில் இவர்கள் வாங்கிய வாக்குகளை காட்டிலும், இவர்களை எதிர்த்து வந்த ட்வீட்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே. நகர்!

ஆர்.கே. நகர்!

இந்த வருடம் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு மாதத்தில், காலத்தில் தான் பேசப்பட்டன. ஆனால், ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பேசப்பட்ட ஒரே வார்த்தை ஆர்.கே. நகர். பணப்பட்டுவாடா எப்படி செய்ய வேண்டும் என தனி பாடம் நடத்திய தொகுதி. இரண்டே நாட்களில் நூறு கோடிகளுக்கும் மேல் மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சூரியன் உதிக்கவில்லை. இலை வாடின, தாமரை மலரவில்லை. ஆனால், குக்கர் மட்டும் செம்மையாக விசில் அடித்து வேக வைத்தது... அரசியலை!

போர்... போர்... போர்!

போர்... போர்... போர்!

1996-ல் ஆரம்பித்த அறைகூவல். ஆனால், இன்றுவரை போர் துவங்கவில்லை. அடிக்கடி போர் முழக்கங்கள் வருவது போன்ற சப்தம் கேட்கிறதே தவிர, போர் வந்தபாடில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து பேசியது போலவே. இன்றும் சந்தித்து பேசி வருகிறார் ரஜினி. இன்றைய பேட்டியிலும் டிசம்பர் 31 அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என்று தான் கூறினேனே தவிர, அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை என குழப்பி தான் பேசியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

இவர் போர் துவங்குவதற்குக்குள் வடக்கொரியா மூன்றாவது உலகப்போரை துவக்கிவிடும் போல.

நீட் - அனிதா!

நீட் - அனிதா!

இந்த வருடத்தின் பெரிய சோகம் சகோதரி அனிதாவின் மரணம். நீட் என்ற ஒற்றை வார்த்தை கொண்டு அனிதாவின் பெரும் கனவு தகர்க்கப்பட்டது. போராடியிருக்க வேண்டும் அனிதா என பலர் கூறினார்கள். அனிதா போராடிய போது நம்மில் பலர் டுபுச்சுக்கு, டுபுச்சுக்கு என யாருக்கோ செல்லாத வாக்குகளை கோடிக் கணக்கில் அளித்துக் கொண்டிருந்தோம்.

அப்போதே அனிதாவுக்கு ஆதரவாக பொதுமக்களும், நீட்டுக்கு எதிராக மாணவர்கள் கைகோர்த்து இருந்தால். அனிதா இன்று தனது கனவுப் பயணத்தில் நடைப்போட்டுக் கொண்டிருந்திருப்பாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Trending Words of 2017!

Trending Words of 2017!