அரிய வகை கண் நோயினால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனின் சோக கதை!

Posted By:
Subscribe to Boldsky

அஸ்ஸாமைச் சேர்ந்த 4 வயதைக் கொண்ட சாகர் டோர்ஜி என்னும் இளம் சிறுவனின் கதை தான் இது. இச்சிறுவனின் கதையைக் கேட்டால், நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை உணர்வீர்கள். இப்படியும் ஒரு கொடிய நோய் இருக்குமா என்று பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அரிய வகை கண் நோயால் தான் இச்சிறுவன் அவஸ்தைப்பட்டுள்ளான்.

அதுவும் அச்சிறுவனின் கண்கள் வீக்கமடைந்து, இரத்தக்கசிவு ஏற்பட்டு, இரத்தம் உறைந்து யாரும் பார்க்க முடியாத அளவில் பயங்கரமாக இருக்குமாம். இப்போது அச்சிறுவனின் கதையைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விசித்திர நிலை

விசித்திர நிலை

சாகர் என்னும் சிறுவனுக்கு பிலாட்ரல் ப்ராப்டோசிஸ் மற்றும் தீவிரமான மைலாய்டு லுகிமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையால், இச்சிறுவனின் விழிகள் பிதுங்கியவாறும், கடுமையான இரத்தப்போக்கினால் இரத்தம் உறைந்தும் இருக்கும்.

வைரலாக பரவிய கதை

வைரலாக பரவிய கதை

இச்சிறுவனின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதால், இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்கு அரசே முயற்சி மேற்கொண்டு, இச்சிறுவனை சிகிச்சைக்காக பெங்களூருக்கு மாற்றியது.

தீவிரமான மைலாய்டு லுகிமியா

தீவிரமான மைலாய்டு லுகிமியா

மஜும்தார் ஷா புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தான் இச்சிறுவனுக்கு தீவிரமான மைலாய்டு லுகிமியா என்னும் ஒருவகையான இரத்த புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் இந்த வகை இரத்த புற்றுநோய் கண்களைத் தாக்குவது என்பது மிகவும் அரிது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

சிகிச்சை

சிகிச்சை

அதோடு இச்சிறுவனுக்கு பிலேட்ரல் ப்ரோப்டோசிஸ் என்னும் விழி வீக்க பிரச்சனையால், பார்வையையும் இழந்திருந்தான். 5 மாதங்களுக்கு முன் தான், இச்சிறுவனுக்கு இருந்த அரிய நோய் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தம்பியைக் காப்பாற்றிய சகோதரி

தம்பியைக் காப்பாற்றிய சகோதரி

இச்சிறுவனுடைய சகோதரியின் எலும்பு மஜ்ஜையைக் கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி, அதனால் தான் இச்சிறுவனின் எலும்பு மஜ்ஜை சகோதரியுடன் 30% ஒத்துப்போனது.

முற்றிலும் குணம்

முற்றிலும் குணம்

தற்போது இச்சிறுவன் மருத்துவமைனையில் இருந்து வீடு திரும்ப, எவ்வித பிரச்சனையும் இல்லாமல், சந்தோஷமாக தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறான்.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறுவன் நோய் தாக்கியவாறான புகைப்படங்கள் கிராபிக் செய்யப்பட்டவை.

All Image Sources

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Kid Had A Rare Disease Of Bleeding Eyes

This is one of the most bizarre conditions in which a young boy from Assam suffered from a rare condition of his eyes that used to bleed. Find out...
Story first published: Monday, January 23, 2017, 13:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter