ஜல்லிக்கட்டு போராளிகளிடம் இருந்து உலகம் கற்க வேண்டிய 10 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

திருவள்ளுவர் உலகிற்கு இரு அடிகளில் எண்ணற்ற வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுத்தார். தமிழக இளைஞர்கள் ஐந்து நாட்களில் உலகிற்கு பல சமோக பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கத்து சமுத்திரமாக மாறினால் உரிமை கைக்கு எட்டும் கனி தான் நிரூபித்து காட்டியுள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது ஒரு தடை அல்ல

வயது ஒரு தடை அல்ல

போராடுவதற்கு வயது ஒரு தடை அல்ல. ஆறில் இருந்து, அறுபது வரை எல்லாரும் பங்கேற்று ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மனதில் இருப்பது தான் தவறு

மனதில் இருப்பது தான் தவறு

ஊனம் உடலில் இருப்பதை விட, மனதில் இருப்பது தான் தவறு. ஊனத்தை கடந்து, போராட்டத்திற்கு எழுச்சி கொடுத்த இளைஞர்.

ஆயிரத்தில் ஒருத்தி

ஆயிரத்தில் ஒருத்தி

ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உலகிற்கே பாடமாக காண்பித்த இளைஞர்கள்.

தன் கையே தனக்கு உதவி

தன் கையே தனக்கு உதவி

தன் கையே தனக்கு உதவி என நிரூபித்தனர். அரசு விளக்குகளை ஆப் செய்த மறுநொடி, மொபைல் டார்ச்சை ஆன் செய்து பிரம்மாண்டத்தை காட்டிய இளைஞர்கள்.

நாகரீகம்!

நாகரீகம்!

குப்பைகளை அகற்றி, தாங்கள் இருந்த இடத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொண்ட மாணவர்கள். ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர்.

ஜாதி, மதத்தை கடந்த போராட்டம்!

ஜாதி, மதத்தை கடந்த போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நேரத்திலும் இஸ்லாமிய தோழர்கள் வணங்கும் நேரத்தில் கோஷங்களை நிறுத்தி அவர்களுக்காக அமைதி காத்தனர்.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு மக்களுக்கு எதிரி அல்ல என நிரூபித்த போராட்டம்.

பகிர்வு!

பகிர்வு!

உணவை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து, நல்லுணர்வை எடுத்துக் காட்டிய போராட்டம்.

பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டம்.

பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டம்.

பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டம். கர்ப்பிணி பெண்கள் முதல், பச்சிளம் குழந்தைகளை ஏந்தியபடி என பல பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கமித்து

ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கமித்து

எல்லைகள் கடந்து, ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கமித்து சமுத்திரமாக மாறினால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்த பெரும் போராட்டம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things We Learnt From Jallikkattu Protesters

Things We Learnt From Jallikkattu Protesters
Subscribe Newsletter