திருட சென்ற வீட்டில் உயிரை விட்ட திருடன் - நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

பிறப்பும் சரி, இறப்பும் சரி எதுவும் அவரவர் கையில் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இறப்பு ஒரு மனிதனை எப்படி வந்தடைகிறது என்பதை யாராலும் அறிய முடியாது. இயற்கை, செயற்கை, கொலை, தற்கொலை, விபத்து என எப்படி வேண்டுமானாலும் மரணம் ஒரு நபரை அடையலாம்.

பிரிட்டனை சேர்ந்த ஒரு திருடன், திருட சென்ற இடத்தில் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராட்போர்ட்!

பிராட்போர்ட்!

பிரிட்டனின் பிராட்போர்ட் நகரில் மருந்து விற்பனை மையம் நடத்தி வந்த நபரின் வீட்டில் திருட சென்ற இடத்தில் திருடன் எதிர்பாராத விபத்தால் மரணமடைந்தார். விற்பனை மையம் வீட்டின் அருகில் தான் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருட முயற்சி!

திருட முயற்சி!

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடன். வீடு புகுந்து திருட முயற்சித்துள்ளார். வீட்டின் மீது ஏறி, கழிவறை கூரையை பிரித்து அதன் மூலமாக இறங்கு முயற்சித்துள்ளார் திருடன்.

விபத்து!

விபத்து!

ஆனால், கூரையில் இருந்து கீழே குதிக்க முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக ஆடை கிழிந்து சிக்கிக் கொண்டது. இதில் இருந்து வெளிவரவும் முடியாமல், கீழே குதிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. எவ்வளவு போராடியும் விடுபட முடியவில்லை.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

வெளியே சென்று ஒரு வாரம் கழிந்து வீடு திரும்பிய உரிமையாளர் கழிவறையில் பிணமாக திருடன் தொங்கிக் கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு போலீசில் புகார் அளித்தார்.

மூச்சுத்திணறல்!

மூச்சுத்திணறல்!

ஆடை சிக்கி தொங்கி கொண்டிருந்த போது, ஆடையின் ஒரு பகுதி கழுத்த நெரித்து, மூச்சுத்திணறல் உண்டாகி திருடன் இறந்திருக்கிறார் என போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thief Died in the Home where he went to Stole Things

Thief Died in the Home where he went to Stole Things!
Story first published: Saturday, March 25, 2017, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter