இவங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது - மொக்க போட்டோஷாப் கலக்ஷன்!

Posted By:
Subscribe to Boldsky

#NoFilter #NoEdits இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இந்த Hashtag உடன் நீங்கள் சில புகைப்படங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆம்! நாங்க எந்த போட்டோஷாப் எடிட்டும், ஃபில்டரும் போடாமலேயே அழகா இருக்கோம்ன்னு சொல்லிக்க ஒரு குடும்பம் இப்படி புகைப்படங்கள் பகிர்வதை நாம் அவ்வப்போது காணலாம்.

இப்போ எல்லாம் யாருப்பா எடிட் பண்ணாம போட்டோ ஷேர் பண்றாங்க... ஃபேஸ்புக்குல ஒருத்தர் போஸ்ட் பண்ற போட்டோக்கும், அந்த நபர நேர்ல பார்க்குறதுக்கும் ஆறு என்ன ஆறாயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம் ஃபேஸ்ல மட்டும்.

அழகா இருக்கணும், லைக்ஸ் அதிகம் வேணும்னு தான் இப்படி சமூக தளத்துல போட்டோ போடும் போது எடிட் பண்றாங்க. அதையாவது ஒழுங்கா பண்றாங்களா... இத கொஞ்சம் பாருங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமன்னா பாவம்!

தமன்னா பாவம்!

கேடி படம் மூலமாக அறிமுகம் ஆனது தவிர தமன்னா வேற என்ன பாவம் பண்ணாங்கன்னு தெரியல, ஒருவேளை பாகுபலியில தமன்னா திரும்பலன்னு, இப்படி ஒரு அபாயகரமான போட்டோஷாப் பண்ணிவிட்டுடான் போல இந்த பய. ஏம்பா, ஒரு தமன்னா பத்தாதா, ரெண்டு தான் வேணுமா...

கத்ரீனா....

கத்ரீனா....

எல்லாருக்குமே தங்களுக்கு பிடிச்ச ஸ்டார்ஸ் கூட பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும், ஆட்டோகிராப் வாங்கனும்ன்னு ஆசை இருக்கும் தப்பில்ல. இந்த தம்பிக்கு கத்ரீனாவ தோளுல சாச்சு வெச்சு பத்திரமா பாத்துக்கணும்ன்னு ஆசை போல...

அடேங்கப்பா!

அடேங்கப்பா!

இந்த வார்டு கவுன்சிலர், மேயர் எல்லாம் வேணாம்... ஆனா ஸ்ட்ரைட்டா சி.எம் தான் ரேஞ்சு போல இந்த தம்பி. போட்டோஷாப் எடிட்டிங் விடுங்க... ஏதோ அந்த பொண்ணு மெய்யாலுமே பின்னாடி உக்காந்துட்டு இருக்க மாதிரி ஒரு தெய்வீக புன்னகை வெச்சுருக்காரு பாருங்க மூஞ்சில... அது மேட்டரு!

சிக்ஸ் பேக்காம்!

சிக்ஸ் பேக்காம்!

சிக்ஸ் பேக் வெக்கிறது கஷ்டம் தான். சிக்ஸ் பேக் பாடி இருக்குற மாதிரி எடிட் பண்ண எத்தனையோ ஈஸியான மொபைல் ஆப் வந்துருச்சே... அப்பறம் எதுக்கு கஷ்டப்பட்டு போட்டோஷாப்ப கொலை பண்ணி, மக்களை நோகடிக்க இப்படி ஒரு மொக்கை எடிட்டிங்? சொல்லுங்க டூட் சொல்லுங்க... இதுல அந்த கண்ணாடி ரொம்ப அவசியம்.

அப்படியே ஏத்திடுங்க ப்ளீஸ்...

அப்படியே ஏத்திடுங்க ப்ளீஸ்...

அட்லீஸ்ட் சி.ஜி. வர்க் பண்ணியாவது அந்த ரயில் இவரு மேல ஏறிட்டு போற மாதிரி ஒரு வீடியோ பண்ணுங்கப்பா...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க. ஒருவேளை இந்த படத்த எல்லாம் உண்மைன்னும், செம்ம போட்டோஷாப்னும் நம்புற கூட்டத்துக்கு மத்தியில தான் இவங்க எல்லாம் வாழ்ந்துட்டு இருக்காங்களா?

புலிக்கு வந்த சோதனை...

புலிக்கு வந்த சோதனை...

இதுவரைக்கும் அவங்கவங்க போட்டோ எடிட் பண்ணி தான் இரிடேட் பண்ணாங்க. இவருக்கு புலிக் கூட இருக்குற மாதிரி போட்டோ வேண்டும்னா.. பேசாம ஒரு புலி போட்டோவா வெச்சு எடிட் பண்ணியிருக்கலாம். பாவம் அந்த நாய் என்ன பாவம் பண்ணுச்சு, அந்த புலி என்ன பாவம் பண்ணுச்சு... அந்த தலையை இந்த உடலுடன் ஒட்டி கலை என்ற பெயரில் போட்டோஷாப்பை கொலை செய்ய எதுக்கு இத்தன வெறி!

மெஸ்ஸி!

மெஸ்ஸி!

கடைசியில நம்ம பயலுக மெஸ்ஸிய கூட விட்டு வைக்கல. ஏம்பா தம்பி, எடிட் தான் பண்றிங்க சரி, அட்லீஸ்ட் கொஞ்ச நல்ல போட்டோ எடுத்து எடிட் பண்ணியிருக்க கூடாதா? எதுக்கு இந்த பிஞ்சு வயசுல இந்த விஷமத்தனம்.

ஸ்பைடர் மேன்!

ஸ்பைடர் மேன்!

அந்த கண்ணு... கஜேந்திரா, நரசிம்மா ரெண்டு படத்துல கேப்டன் பண்ண மொத்த வெறித்தனத்தையும் ஒன்னு சேர்த்தா கூட, இந்த ரிசல்ட்ட கொண்டு வர முடியாது. வேற லெவல் லுக்கு. இது யாரோ இந்த ஆளுக்கு வேண்டாத ஒருத்தர் தான், இவருக்கே தெரியாம எடிட் பண்ணி போட்டுருக்காங்க.

கேட்டு வாங்கு தம்பி...

கேட்டு வாங்கு தம்பி...

அட! உங்கள் அழகுக்கும், அந்த ரொமாண்டிக் ரியாக்ஷனுக்கு கத்ரீனா கிட்ட அந்த முத்தத்த கேட்டே வாங்கிருக்கலாம். யாரு கண்டா... உங்க அழகுல மயங்கி, அவங்க சல்மான் கான் படம் முடிச்சுட்டு சினிமாவுக்கே கும்பிடு போட்டு உங்கள கல்யாணம் பண்ணாலும், பண்ணிருப்பாங்க...

எதுக்கு...

எதுக்கு...

தம்பி கரக்டா வண்டில உட்கார வெச்சுட்டாபல... ஆனா, பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா... இந்த அஞ்சடி, ஆறடி பொண்ணெல்லாம் வேண்டாமா...? நம்ம உசுரெடுக்கவே வராயிங்க போல...

ஹன்ஷிகா பாவம்!

ஹன்ஷிகா பாவம்!

மொதல்ல இது ஹன்ஷிகாவான்னு ஒரு டவுட்டு இருக்கு. ஆரம்பக் காலகட்டத்துல இந்த லுக்குல இருந்தாங்க.. அப்பறம் ஒரு லவ் ரிலேஷன்ஷிப்ல இருந்தப்ப கொஞ்ச நாள் உடம்ப குறைச்சாங்க... சரி! அது பத்தி எதுக்கு இப்ப பேசிக்கிட்டு... நோ கமண்ட்ஸ்... சிம்ப்ளி வேஸ்ட்... இந்த படமும் சரி, அந்த ரிலேஷன்ஷிப்பும் சரி!

ஹாலிவுட்!

ஹாலிவுட்!

அட, போங்கப்பா.. சும்மா, தமன்னா, கத்ரீனா, ஹன்ஷிகான்னு இந்தியாவுக்குள்ள சுத்திக்கிட்டு. தம்பி புடிச்சாரு பாருங்க நல்ல பாப் சாங் பாடுற பொண்ணு மாதிரி. ஏம்ப்பா... சும்மா இருக்குறதுக்கு முன்னாடி ஒரு வடச்சட்டி வெச்சு வடகிட சுட்டு கொடுக்கலாம்ல அந்த பொண்ணுக்கு.... நல்ல போஸ்!

ப்ளீஸ் கிவ் ஹிம் எ அவார்ட்!

ப்ளீஸ் கிவ் ஹிம் எ அவார்ட்!

தயவு செஞ்சு அடுத்த வருடம் நடிப்புக்கு ஆஸ்கார் கொடுக்குற மாதிரி, போட்டோ எடிட்டிங்க்கு ஏதாவது அவார்ட் இருந்தா இந்த தம்பிக்கு கொடுங்க. கொஞ்சம் கூட பிசிறு தட்டாமா, காருக்கு எந்த சேதாரமும் இல்லாம எடிட் பண்ணி அசால்ட்டு காமிச்சிருக்காரு.

டார்ச்சர் பண்றாயிங்களே!

டார்ச்சர் பண்றாயிங்களே!

டேய்! நான் சுகர் பேஷண்டு டா... விட்டுறா என்னங்கிறது மாதிரி. சும்மா வெச்சு செஞ்சிருக்காங்க. இவங்கள இதெல்லாம் செயிறாங்களா? இல்ல இவங்களுக்கு எல்லாம் இப்படி செம்மையா போட்டோஷாப் பண்ணி தர ஊருக்கு ஒரு குழு இருக்கான்னு தெரியல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Indian Stupid Netizens Should Stop Using Photoshop Right Now!

These Indian Stupid Netizens Should Stop Using Photoshop Right Now!