For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை கண்டு உலகம் வாய்ப்பிளந்து பிரமிக்கும் 12 விஷயங்கள்!

இங்கு இந்தியாவை கண்டு உலகம் வாய்ப்பிளந்து பிரமிக்கும் 12 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது

|

இந்தியா ஒரு காலத்தில் செல்வம் நிறைது சொர்க்கபுரியாக இருந்த நாடு. கடல் கடந்து ஆட்சி செய்த வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு. கடல் வழியே வந்தவரிடம் அடிமையான நாடும் கூட.

இப்போது மீண்டும் டிஜிட்டல் யுகத்தில் தனது எழுச்சியை உறுதியாக்கி, இந்தியா இன்றி ஒன்றும் செய்ய இயலாது என வல்லரசு நாடுகளை புலம்பவும் வைத்திருக்கிறது.

காலம் காலமாக உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வாய்ப்பிளந்து பிரமிக்கும் 12 விஷயங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யுனெஸ்கோ!

யுனெஸ்கோ!

யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் 32 இடங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் 23 இடங்கள் தான் இருக்கின்றன என்பது குறிப்பித்தக்கது.

தபால் நிலையங்கள்!

தபால் நிலையங்கள்!

  • உலகின் பெரிய தபால் துறை கொண்ட நாடு என்பதை தாண்டி, இந்தியாவில் சில விசித்திரமான தபால் நிலையங்களும் இருக்கின்றன.
  • ஹிக்கிமில் தான் உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தபால் நிலையம் இருக்கிறது. இது 15,400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
  • காஷ்மீரில் டால் நதியில் மிதக்கும் தபால் நிலையம் இருக்கிறது.
  • 70களில் ராஜஸ்தானில் ஒட்டகங்களின் உதவியோடு சில இடங்களில் மொபைல் தபால் நிலையங்கள் இயங்கி வந்தன.
  • வாரணாசி!

    வாரணாசி!

    நீண்ட காலமாக மக்கள் வாழ்ந்து வரும் உலகின் பழம்பெரும் நகர்களில் ஒன்று வாரணாசி. இங்கு மக்கள் கடந்த 3,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நகரம் சிவனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.இங்கு ஒருவர் இறந்தால் அவருக்கு மறுபிறவி இல்லை என்ற ஐதீகம் இங்கு இருக்கிறது.

    உத்தரபிரதேசம்!

    உத்தரபிரதேசம்!

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலோடு ஒப்பிட்டால் உத்திரபிரதேசம் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கும்பமேளா!

    கும்பமேளா!

    உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேகாலயா!

    மேகாலயா!

    உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் இருக்கும் சிரபுஞ்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

    பத்மநாபசுவாமி கோவில்!

    பத்மநாபசுவாமி கோவில்!

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் பத்மநாபசுவாமி கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவில். 2011-ல் இந்த கோவிலும் சில அறைகள் 130 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டன அப்போது பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, கற்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    காரி போலி (Khari Baoli)

    காரி போலி (Khari Baoli)

    டெல்லியில் இருக்கும் காரி போலி தான் உலகிலேயே நீண்ட காலமாக இயங்கி வரும் பழைய சந்தை ஆகும். இங்கு உலர்ந்த பழங்கள், நட்ஸ், மசாலா பொருட்கள், இனிப்புகள் போன்றவை விற்கப்படுகின்றன.

    மதங்கள்!

    மதங்கள்!

    உலகில் உள்ள எல்லா முக்கிய / பெரிய மதங்களும் இந்தியாவில் குறிப்பிடப்படும் அளவில் இருக்கின்றன.

    சைவம்!

    சைவம்!

    அதிகமாக சைவம் உண்ணும் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா.

    ஆங்கிலம்!

    ஆங்கிலம்!

    உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

    சிங்கம்!

    சிங்கம்!

    ஆசிய சிங்கங்கள் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் மட்டும் தான் காணப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Facts About India

Surprising Facts About India
Desktop Bottom Promotion