மக்களின் உடலில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட உயிரினங்கள் பற்றிய சில உறைய வைக்கும் சம்பவங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நமக்குத் தெரியாமலேயே நம் உடலினுள் வாழும் உயிரினம் என்றதும் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வருவது புழுக்கள் தான். ஆனால் இந்த புழுக்களைத் தவிர, வேறுசில உயிரினங்கள் சில மனிதர்களின் உடலினுள் கூடு கட்டி வாழ்ந்துள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்துப் பாருங்கள். இதில் கொடுக்கப்பட்டுள்ள சில சம்பவங்கள் நிச்சயம் உங்களை உறைய வைக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் சில மனிதர்களின் உடலில் இருந்து உயிரோடு எடுக்கப்பட்ட சில உயிரினங்களைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிலந்தி

சிலந்தி

ஒரு பெண் தன் காதில் நீண்ட நாட்களாக ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருப்பதாக கூறி மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அப்பெண்ணின் காதை பரிசோதிக்கும் போது, காதினுள்ளே சிலந்தி வலையை உருவாக்கி உள்ளது தெரிய வந்தது. நல்ல வேளை, அந்த சிலந்தியை மருத்துவர் எப்படியோ வெற்றிகரமாக வெளியே எடுத்துவிட்டார்.

தலையில் புழு

தலையில் புழு

ஒருவர் தன் தலையில் வீக்கம் பெரிதாகிக் கொண்டே இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள, மருத்துவரிடம் சென்றார். அப்போது மருத்துவர் அது ஏதோ பூச்சி கடித்ததால் வந்திருக்கும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தை சோதிக்கும் போது தான், அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், அந்த மனிதனின் தலையில் 5 கூட்டுப்புழுக்கள் வளர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக, மருத்துவர் அந்த புழுக்களை வெளியே எடுத்துவிட்டார்.

கூட்டுப்புழுக்கள்

கூட்டுப்புழுக்கள்

5 வயது சிறுவனின் கண்ணிமையில் கடுமையான வலி ஏற்பட, அதை மருத்துவரிடம் காண்பிக்கும் போது, அச்சிறுவனின் கண்ணிமையில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் இந்த புழுக்கள் கண்ணிமைக்கு கீழே பொந்துகளை அமைத்திருந்தது. இருந்தாலும், மருத்துவர் அச்சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சையின் மூலம், புழுக்களை வெளியேற்றிவிட்டார்.

ஸ்குவிட் விந்தணு

ஸ்குவிட் விந்தணு

ஒரு பெண் ஸ்குவிட் என்னும் உயிரினத்தை உயிரோடு விழுங்கும் போது, அதன் விந்தணு வெளியேறியதால், அப்பெண்ணின் வாயில் 12 சிறிய வெள்ளை நிற ஸ்குவிட்டுகள் வளர்ந்திருப்பது தெரிய வந்து, பின் நீக்கப்பட்டது.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி

இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது மூக்கில் கடுமையான வலியை உணர்ந்தார். இதற்காக மருத்துவரை அணுகி பரிசோதிக்கும் போது, அப்பெண்ணின் மூக்கில் கரப்பான் பூச்சி உயிருடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சையின் மூலம், அந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெளியே எடுத்துவிட்டார்கள்.

ஈல்

ஈல்

ஒருவர் ஈல் ஸ்பா சிகிச்சையை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஒரு ஈல் சிறுநீர் வடிகுழாய் வழியே நுழைந்து உடலினுள் சென்று விட்டது. பின் உடனே அவர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, உடலினுள் இருந்த ஈல் மீனை மருத்துவரிடம் கூறி வெளியேற்றிவிட்டார். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், இந்த மீன் உயிருடன் இருந்தது தான்.

கண்களில் புழு

கண்களில் புழு

75 வயது முதியவர் ஒருவர், நீண்ட நாட்களாக தனது கண்ணில் அரிப்பை உணர்ந்தார். மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது, அவரது கண்ணில் 5 இன்ச் நாடாப்புழு புதைந்து வளர்ந்து வருவது தெரிய வந்தது. பின் மருத்துவர் அறுவை சிகிச்சையின் மூலம், அந்த புழுவை வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Cases of Animals Found Alive In People!

Finding animals being alive in humans is creepy and these cases just prove the same. Check out these scary cases of animals being found in humans and that too alive!
Story first published: Saturday, February 11, 2017, 11:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter