உலகில் மக்கள் இன்றளவும் முட்டாள்தனமாக நம்பிவரும் 12 பொய், புரட்டுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் இந்த பகுதியில் தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன நாம் கூறிவிட முடியாது. உலகின் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு விதமான மூட நம்பிக்கைகள் உண்மை என நம்பப்பட்டு வருகின்றன. ஏன் நாசா குறித்த பல மூட நம்பிக்கைகள் கூட இன்றளவும் மக்களால் நம்பப்பட்டு வருகின்றன.

Myths About Animals That We Still Believe!

ஆன்மீகம், அறிவியல் என பெரியளவில் மட்டுமல்ல, எலி, நாய் விலங்குகள் அளவிலும் கூட நாம் பல வருடங்களாக பல விஷயங்களை மூடத்தனமாக உண்மை என நம்பி வருகிறோம். அவை என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காளை!

காளை!

மூட நம்பிக்கை: காளைகள் சிவப்பு நிறத்தை கண்டால் ஆக்ரோஷமாகிவிடும்.

உண்மை: காளைகள் தங்களுக்கு முன்னர் நிகழும் அசைவுகள், நகரும் நிலைகள் வைத்து தான் ஒரு நபரை தாக்க முற்படும்.

பச்சோந்தி!

பச்சோந்தி!

மூட நம்பிக்கை: பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

உண்மை: பச்சோந்திகள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப தான் தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளுமே தவிர, இடங்களுக்கு ஏற்ப அல்ல.

திமிங்கலம்!

திமிங்கலம்!

மூட நம்பிக்கை: ஒரு திமிங்கலம் முழு கார் அளவு கொண்ட பொருட்களை கூட விழுங்கிவிடும்.

உண்மை: திமிங்கிலத்தால் அதிக பட்சம் ஆரஞ்சு பழம் அளவிலான பொருட்களை தான் விழுங்க முடியும்.

காண்டாமிருகம்!

காண்டாமிருகம்!

மூட நம்பிக்கை: காண்டாமிருகத்தின் மூக்கின் மேல் இருப்பது கொம்பு.

உண்மை: காண்டாமிருகத்தின் மூக்கின் மீது இருப்பது முகடு.

குளிர்காலம்!

குளிர்காலம்!

மூட நம்பிக்கை: குளிர்காலங்களில் அதிக குளிர் காரணத்தால் விலங்குகள் அதிக நேரம் உறங்குகின்றன.

உண்மை: குளிர் காலங்களில் அதிகளவில் உணவு கிடைக்காது என்பதால் தான் விலங்குகள் அதிகம் உறங்குகின்றன.

நாய்கள்!

நாய்கள்!

மூட நம்பிக்கை: நாய்களின் கண்களுக்கு கருப்பு, வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும்.

உண்மை: நாய்களால் மற்ற வண்ணங்களும் காண முடியும். மனிதர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த வண்ணங்கள் மட்டுமே அவைகளால் காணப்படும்.

தீக்கோழி!

தீக்கோழி!

மூட நம்பிக்கை: தீக்கோழிகள் பயம் / அச்ச உணர்வு வந்தால் தங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும்.

உண்மை: தீக்கோழிகள் அச்சம் வந்தால் உடனே அந்த இடத்தைவிட்டு ஓடிவிடும்.

தவளை!

தவளை!

மூட நம்பிக்கை: தவளைகளை தொட்டால் மருக்கள் வந்துவிடும்.

உண்மை: தவளைகளால் தொட்டால் மருக்கள் வராது. மருக்கள் வர அவை காரணமாக இருப்பதில்லை.

யானை!

யானை!

மூட நம்பிக்கை: யானை மாதிரி அதிரும்படி நடக்காதே என நாம் கூறுவோம். யானை நடந்து வந்தால் நிலம் அதிரும் என நாம் நம்புகிறோம்.

உண்மை: ஆனால், யானைகள் மிகவும் அமைதியாக, நிதானமாக தான் நடக்கும். அவை நடந்து வரும் போது நிலம் அதிராது. ஓடும்போது வேண்டுமானால் நிலம் அதிரும்.

மோல் (Mole) விலங்கு!

மோல் (Mole) விலங்கு!

மூட நம்பிக்கை: மோல் எனப்படும் விலங்கிற்கு கண்பார்வை இல்லை.

உண்மை: அவற்றுக்கு பார்வை திறன் இருக்கிறது. ஆனால், மிகவும் மோசமான கண்பார்வை திறன் கொண்டவை அவை.

எலி!

எலி!

மூட நம்பிக்கை: எலிகளுக்கு சீஸ் தான் மிகவும் பிடித்தமான உணவு.

உண்மை: சீஸ் எலிகளுக்கு பிடித்தமான உணவு அல்ல.

மீன்கள்!

மீன்கள்!

மூட நம்பிக்கை: மீன்கள் சத்தமிடாது, அமைதியானவை.

உண்மை: மீன்கள் சத்தமிடும். அதிகபட்சம் அவற்றின் சப்தம் ஒரு பிஸியாக இயங்கி வரும் விவசாய இடத்தில் இருந்து எழும் அளவிற்கான சப்தம் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Myths About Animals That We Still Believe!

Myths About Animals That We Still Believe
Subscribe Newsletter