நடக்கும் மீன், பாண்டா எறும்பு... இதுவரை பார்த்திராத விசித்திர விலங்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் கண்ணுக்கு முன்னால் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.ஆனால் இதே உலகத்தில் இதுவரை நாம் பார்க்காத இதுவரை இப்படியெல்லாம் கூட இருக்குமா என்று யோசித்திருக்க கூட மாட்டோம் அப்படிப்பட்ட விசித்திரமான விலங்குகளின் பட்டியல் தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீந்தாத மீன் :

நீந்தாத மீன் :

கலாபகோஸ் என்ற தீவில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சிகப்பு நிற வாய் தான் இதனுடைய அடையாளம். இதற்கு நீச்சல் தெரியாது. இந்த மீன் நடக்க மட்டுமே செய்யும். கடலின் ஆழத்தில் மட்டுமே இது இருக்கும்.

Image Courtesy

 பாண்டா எறும்பு :

பாண்டா எறும்பு :

பாண்டாக்கரடி பார்த்திருப்பீர்கள், பாண்டா பூச்சி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! சாதரண எறும்பை விட சற்று நீளமான பூச்சி இது. சிலியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்தின் முதுகில் நிறைய முடிகள் இருக்கும்.

இதிலிருக்கும் ஜீன்களால் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் முடி இருப்பதால் இதற்கு பாண்டா பூச்சி என்று பெயர்.

Image Courtesy

வரிகள் இல்லாத வரிக்குதிரை :

வரிகள் இல்லாத வரிக்குதிரை :

வரிக்குதிரை என்றாலே அதன் உடலில் இருக்கு கருப்பு வெள்ளை நிற வரிகள் தான் நினைவுக்கு வரும். ஆப்ரிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினம் கால் பகுதியில் மட்டும் வரிக்குதிரை போன்ற வரிகள் இருக்கும். அதன் செயல்பாடுகள் எல்லா ஒட்டகச்சிவிங்கியைப் போல இருக்கும்.

Image Courtesy

கடல் பன்றி :

கடல் பன்றி :

இந்த விலங்கினம் கடலின் ஆழத்தில் மட்டுமே இருக்கும். சுமார் கடலிலிருந்து 1000 மீட்டர் ஆழத்தில் இருக்கும். அங்கே வளர்ந்திருக்கும் செடிகளையே இவை உணவாகக் கொள்ளும்.

Image Courtesy

மஞ்சள் முள் :

மஞ்சள் முள் :

ஆப்ரிகாவில் உள்ள மடாகஸ்கரில் இந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளங்கையில் அடங்கிடும் மிகச்சிறிய உருவமான இதனை அதனின் வித்யாசமான ஓசையை வைத்து தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். பாம்பின் ஒலியைப் போலவும் சில பூச்சிகள் கத்துவது போலவும் இவற்றின் ஓசை இருக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

List of Rare animals

List of Rare animals
Story first published: Saturday, August 19, 2017, 15:44 [IST]
Subscribe Newsletter