இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி, இன்னும் நீங்க நம்பி ஏமார்ந்த விஷயம் நிறைய இருக்கு!

Posted By:
Subscribe to Boldsky

திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாட்டி, தாத்தா தொட்டதற்கு எல்லாம் ஒரு பழமொழி சொல்லி பாராட்டுவார்கள் அல்லது திட்டுவார்கள். சிலவன சுவாரஸ்யமாக இருக்கும், சிலவன எதுக்குடா வாயக்கொடுத்து மாட்டிக்கிட்டோம் என்பது போல இருக்கும்.

பழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவை எல்லாம் எழுதியப்படி தான் உரைக்கிறோமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி. ஆம், நாம் இன்று கேட்கும், பேசும் பழமொழிகள் பலவன வார்த்தைகள் மருவி பயன்படுத்திவரப்படுகின்றன.

அவற்றில் சிலவன பற்றி இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பழமொழி:- ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்.

உண்மை வாக்கியம்:- ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் நடத்தலாம்.

#2

#2

பழமொழி:- ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்.

உண்மை வாக்கியம்:- ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்.

#3

#3

பழமொழி:- மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.

உண்மை வாக்கியம்:- மங்கு திரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.

#4

#4

பழமொழி:- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

உண்மை வாக்கியம்:- சோழியன் குடுமி, சும்மாடு ஆகுமா?

#5

#5

பழமொழி:- களவும் கற்று மற

உண்மை வாக்கியம்:- களவும் கத்தும் மற.

#6

#6

பழமொழி:- ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

உண்மை வாக்கியம்:- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.

#7

#7

பழமொழி:- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

உண்மை வாக்கியம்:- அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

#8

#8

பழமொழி:- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

உண்மை வாக்கியம்:- நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.

#9

#9

பழமொழி:- குரைக்கிற நாய் கடிக்காது.

உண்மை வாக்கியம்:- குழைகிற நாய் கடிக்காது.

#10

#10

பழமொழி:- கல்லை கண்டால் நாயை காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம்.

உண்மை வாக்கியம்:- கல்லை கண்டால் நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லை காணோம்.

#11

#11

பழமொழி:- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

உண்மை வாக்கியம்:- கழு தைக்க தெரியுமாம், கற்பூர வாசனை.

#12

#12

பழமொழி:- ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.

உண்மை வாக்கியம்:- நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை, அழிவதும் பெண்ணாலே.

#13

#13

பழமொழி:- ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.

உண்மை வாக்கியம்:- ஆயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்.

#14

#14

பழமொழி:- ஆத்துல போட்டாலும், அளந்து போடணும்.

உண்மை வாக்கியம்:- அகத்தில் போட்டாலும், அறிந்து போடணும்.

#15

#15

பழமொழி:- அடிமேல், அடிவைத்தால் அம்மியும் நகரும்.

உண்மை வாக்கியம்:- அடிமேல், அடிவைத்தால், அம்மியும் தகரும்.

#16

#16

பழமொழி:- பழம் நழுவி பாலில் விழுந்தது போல.

உண்மை வாக்கியம்:- பழம் நழுவி பாகில் விழுந்தது போல.

#17

#17

பழமொழி:- வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.

உண்மை வாக்கியம்:- வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.

#18

#18

பழமொழி:- கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.

உண்மை வாக்கியம்:- கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்.

#19

#19

பழமொழி:- கப்பல் கவிழ்ந்தாலும், கன்னத்தில் கை வைக்காதே.

உண்மை வாக்கியம்:- கப்பலே கவிழ்ந்தாலும், கன்னக்கோலில் கை வைக்காதே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Known Tamil Proverbs and It's Unknown Original Version!

Known Tamil Proverbs and It's Unknown Original Version!