சனிப்பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு நன்மையா? தீமையா? - சனிபெயர்ச்சி பலன்கள்!

Written By:
Subscribe to Boldsky

இன்று 19. 12. 2017 செவ்வாய்க்கிழமை, சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பிராத்தனைகள் போன்றவை நடைபெறுகின்றன. சனிபகவான் தீங்கு தான் செய்வார் என்று பயப்பட தேவையில்லை.. ஒவ்வொருவருடைய பாவ புண்ணியங்களின் அடிப்படிடையில் தான் அவர்களது வாழ்க்கை அமையும். சனிபகவானுக்கு, சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வைத்து, வழிபடுவது சிறப்பு. இந்த பகுதியில் 19.12.17 முதல் 26.12.2020 வரையிலான பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

ரிஷபம்

ரிஷபம்

எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.

மிதுனம்

மிதுனம்

கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். இந்த சனிபெயர்ச்சி அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

கடகம்

கடகம்

விபரீத ராஜயோகத்தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் கை கூடி வரும். உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள். பழைய கடன் முடிவுக்கு வரும். கௌரவம் கூடும். தொழிலில் அதிரடி லாபம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றம் தரும்.

சிம்மம்

சிம்மம்

உங்களுக்கு இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். முடங்கி கிடந்த வேலைகள் இனி தானாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். வாகன யோகம் உண்டு. வரவு அதிகரிக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். இந்த சனிப்பெயர்ச்சியில் குழப்பங்கள் குறையும், செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும் போது அதிக கவனம் தேவை. போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள்.

முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். தங்க நகைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு வாழ்க்கை பாடமாக அமையும்.

துலாம்

துலாம்

நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும். சாதனைகளை செய்யும் காலம் இது.. பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை அமையும் யோகம் உண்டு. சோம்பல், விரக்தி நீங்கும். இந்த சனி பெயர்ச்சி குடிசையில் இருப்பவர்களையும், கோபரத்திற்கு உயர்த்தும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான் இனி பாதச் சனியாக அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல்படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீண் பயம் விலகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவர் உற்சாகம் அடைவார். கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். ஜாமின் கொடுக்க வேண்டாம். சாலைகளில் செல்லும் போது கவனம் தேவை. இந்த சனிப்பெயர்ச்சி உங்களது அந்தஸ்தை அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். பதவி உயர்வு கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக இருக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம்

மகரம்

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார். கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.

வழக்கு சாதகமாகும். நோய் விலகும். மாணவ, மாணவியருக்கு, படிப்பில் அதீத கவனம் தேவை. இந்த சனிபெயர்ச்சி பழைய பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும்.

கும்பம்

கும்பம்

இனி சனிபகவான் உங்களுக்கு, லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது. சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வசதி வாய்ப்புகளை தருவதாக அமையும்.

மீனம்

மீனம்

நன்மைகள் அதிகம் நடக்கும். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தள்ளிப் போன காரியங்கள் விரைவாக நடக்கும். புதிதாக தெரிந்தவர்களிடம் உங்களது சொந்த விஷயங்களை பகிர வேண்டாம். இதனால் பிரச்சனை தான் உண்டாகும். வேலையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களது வாழ்க்கையை ஒளி ஏற்றுவதாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is this Sani Peyarchi Good for Your Zodiac Sign

Is this Sani Peyarchi Good for Your Zodiac Sign
Story first published: Tuesday, December 19, 2017, 16:01 [IST]