இறந்தவர்களுக்கு செய்யப்படும் சில வினோதமான சடங்குகள், கொண்டாட்டங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு தெரியுமா? ஹாலோவீன் (Halloween) என்பது ஆரம்பத்தில் இறப்பை கொண்டாடும் விழாவாக தான் இருந்தது. ஆனால், இதை இன்று உலகம் முழுக்க சந்தோசமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியான ஐ.டி கம்பெனிகளில் இது வருடாவருடம் தவறாமல் கொண்டாடி வருகிறார்கள்.

இது போல, இறப்பை உலகில் பல விசித்திரமான முறைகளில் கொண்டாடி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெக்ஸிகோ!

மெக்ஸிகோ!

இது ஒரு வண்ணமையமான முறையில் கொண்டாடப்படும் இறப்பு கொண்டாட்டம். இந்த நாள் இரவில், குடும்பங்கள் ஒன்றாக இனைந்து இறந்தவரின் கல்லறையை சுத்தம் செய்வார்கள். மண்டை ஓடு, மிட்டாய்கள், உடைகள் வைத்து அலங்காரம் செய்வார்கள்.

Image Source

மலேசியா!

மலேசியா!

மலேசியாவில் வாழ்ந்து வரும் மாஹ் மேரி எனப்படும் ஒரு பழங்குடியினர்நடனமாடி ஒருவரது இறப்பை கொண்டாடுகிறார்கள்.

Image Source

கொரியா!

கொரியா!

கொரியாவில் இது மூன்று நாட்கள் கொண்டாட்டமாக நடத்தப்படுகிறது. கொரியர்கள் அவர்களது இறப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஏறத்தாழ 30 மில்லியன் கொரியர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுடைய கல்லறையை சுத்தம் செய்து, அவர்களது உணவளித்து வணங்குகின்றனர்.

Image Source

இந்தியா!

இந்தியா!

இந்தியாவின் ஒருவர் இறந்த நாளில், அவருக்கு மட்டுமின்றி, அந்த குடும்பத்தில் ஏழு தலைமுறைக்கு முன்னர் இறந்தவர்கள் வரை ஆற்றில் திவசம் கொடுத்து பிறகு வீட்டிற்கு வந்து உணவு படையல் வைத்து வணங்கும் முறையை பின்பற்றி வருகின்றனர்.

ஜப்பான்!

ஜப்பான்!

இது 500 வருடங்கள் பழமையான பித்தமத சடங்கு முறை என கூறப்படுகிறது. குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒன்றாக கூடி, இறந்த நபரின் கல்லறையை சுத்தம் செய்து பிறகு, அவர்களது பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடுகின்றனர்.

Image Source

சீனா!

சீனா!

இது ஒரு நீண்ட கொண்டாட்டம். ஒரு மாதம் முழுக்க கொண்டாடுகின்றனர். லூனார் காலண்டரில் ஏழாவது மாதத்தில் பூமியில் ஆவிகள் உலாவும் என பாரம்பரியமாக அவர்கள் நம்புகின்றனர். இந்த நேரத்தில் ஆவிகளுக்கு பிடித்தவற்றை அவர்கள் படையலாக படைத்து வணங்குகின்றனர்.

Image Source

கம்போடியா!

கம்போடியா!

கேமர் எனும் கலாச்சாரத்தில் இது ஒரு முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது. மக்கள் அவர்களது உள்ளூர் கோவில்களுக்கு சென்று, இறந்தவர்களுக்காக வணங்குகின்றனர். அதன் பிறகு எருமை பந்தையம் மற்றும் குத்துசண்டை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

Image Source

பாலி!

பாலி!

பாலியில், இறந்த நாள் இரவில் தான், இறந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. எனவே, அவர்களை மகிழ்விக்க அவர்கள் கொண்டாடி, விருந்து வைத்து கவுரவம் செய்கின்றனர்.

Image Source

நேபாள்!

நேபாள்!

நேபாளத்தில் இந்த நாட்களில் மாடுகளை கவுரவிக்கின்றனர். இந்த நாட்களில் மாடுகளை தெருக்களில் அழைத்து சென்று, குழந்தைகளுக்கு மாடு போன்ற உடை உடுத்தி பரேட் போல செல்கின்றனர்.

Image Source

யூ.கே!

யூ.கே!

இதை மரணத்தை கொண்டாடும் விழாவாக கருத முடியாது. இது நவம்பர் ஐந்தாம் நாள் நிகழ்கிறது. பாராளுமன்றத்தை கொளுத்த நினைத்த நபரின் கொடும்பாவியை எரித்து ஊர்வலமாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Death Festivals are Celebrated Around the World!

How Death Festivals are Celebrated Around the World!
Subscribe Newsletter