Latest Updates
-
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம் -
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க..
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க
நம் உடலின் மிகவும் முக்கியமான உடலுறுப்புகளில் ஒன்று நமது சிறுநீரகம். சிறுநீரகம் பாதிப்படைந்தால் அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் 24 மணி நேரமும் அமைதியாகச் செயல்படுகின்றன. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, நச்சுகள் உடலில் நீண்ட நேரம் தேங்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 674 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டி, உடலில் திரவத்தின் அளவை சமநிலைப்படுத்தி, இரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. நல்ல செய்தி என்னவெனில், சில அன்றாட உணவுகள் இயற்கையான முறையில் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

இந்த உணவுகள் உடனடியாக உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதில்லை, ஆனால் அவற்றைத் தொடர்ச்சியாக உண்ணும்போது, காலப்போக்கில் சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவும். சிறுநீரகங்கள் உடலிலுள்ள நச்சுக்களை சிறப்பாக வெளியேற்ற உதவும் சிறந்த உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுரைக்காய்
சுரைக்காய் எடைகுறைப்பிற்கு மட்டும் உதவும் ஒரு காய்கறி உள்ள. இதில் நீர்ச்சத்தும் பொட்டாசியமும் நிறைந்துள்ளன, இது சிறுநீரகங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மற்ற பானங்களைப் போலல்லாமல், சுரைக்காய் சாறு இரத்தத்தில் சர்க்கரை அல்லது சோடியம் அளவை அதிகரிக்காமல் உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கிறது. சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாதபோது அவை சிறப்பாகச் செயல்படுகின்றன. சுரைக்காய் சிறுநீர் ஓட்டத்தை மெதுவாகவும் சீராகவும் ஊக்குவிக்கிறது, இது உடலில் நச்சுகள் சேர்வதைக் குறைக்க உதவுகிறது. சுரைக்காயை நீங்கள் எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு
பூண்டு பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் மறைமுகமாக இது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இது உடலில் அழற்சியைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுநீரகத்தைப் பாதிக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும். மேலும், இது உப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் உப்பின் அளவு குறைவாக இருந்தால், சிறுநீரக வடிகட்டிகளுக்கு அழுத்தம் குறைவாக இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள சேர்மங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியத்தை வைத்திருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஆப்பிள்
ஆப்பிள்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதன் மூலம் சிறுநீரகங்களுக்கு உதவுகின்றன. அவற்றில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான அமைப்பில் உள்ள கழிவுகளைப் பிணைத்து, மலத்தின் வழியாக அவற்றை எளிதாக வெளியேற்றுகிறது. இதனால், இரத்தத்திலிருந்து சிறுநீரகங்கள் வடிகட்ட வேண்டிய நச்சுக்களின் அளவு பெருமளவு குறைகிறது. இதுமட்டுமின்றி ஆப்பிள்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவின் திடீர் உயர்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சீரான சர்க்கரை அளவுகள், சிறுநீரகத்தின் சிறிய இரத்த நாளங்களை நீண்டகால சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. தோலுடன் ஆப்பிள்களைச் சாப்பிடுவது அதிகபட்ச நன்மைகளை வழங்கும்.
மல்லி விதை
கொத்தமல்லி விதைகள் சிறுநீர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தையும் திறம்பட வெளியேற்றுகின்றன. இது உடலில் நீர் தேங்குவதைக் குறைத்து, சிறுநீரகங்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. கொத்தமல்லி விதைகளை இரவில் ஊறவைத்து, காலையில் அந்த நீரைக் குடிப்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும். இது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல், சுத்திகரிப்பை எளிதாக்குகிறது.
காலிஃபிளவர்
ஒவ்வொரு காய்கறியிலும் ஒரு ஆரோக்கிய நன்மை இருக்கும், ஆனால் பெரும்பாலான காய்கறிகளில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது பலவீனமான சிறுநீரகங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் காலிஃபிளவர் தனித்துவமானது, ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது கல்லீரலின் நச்சு நீக்கும் பாதைகளுக்கும் உதவுகிறது, இது உடலிலுள்ள நச்சுக்களைக் குறைப்பதன் மூலம் மறைமுகமாக சிறுநீரகங்களுக்கு உதவுகிறது. காலிஃபிளவரை ஆவியில் வேகவைத்து அல்லது லேசாக வதக்கி சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

