பெயர், புகழ், செல்வம் மேம்பட, திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

யாருக்கு தான் போராட்டமில்லாத மற்றும் துன்பமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருக்காது. நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழ தான் விரும்புவோம். ஆனால் பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும்.

From Monday To Sunday, Do These 7 Things Each Day For Name, Fame And Wealth!

மேலும் நாம் பிறந்த நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில் சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும். ஆனால் நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் போன்றவை மேம்பட ஒருசில ரகசியங்களைக் கூறுகிறது.

இங்கு பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட ஒருவர் திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய சில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஞாயிறு

ஞாயிறு

ஞாயிற்று கிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இப்படி ஒருவர் ஞாயிற்று கிழமையன்று செய்தால், அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.

திங்கள்

திங்கள்

வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை, எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது.

செவ்வாய்

செவ்வாய்

இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும்.

புதன்

புதன்

புதன் கிழமைகளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மத ரீதியில், புதன்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வியாழன்

வியாழன்

வியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இவற்றை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம், அன்றைய நாளில் நல்லதே நடக்கும்.

வெள்ளி

வெள்ளி

வெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.

சனி

சனி

இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் இஞ்சியில் ஒரு துண்டை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது தெரியுமா? எனவே சனிக்கிழமைகளில் இச்செயலை செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

From Monday To Sunday, Do These 7 Things Each Day For Name, Fame And Wealth!

Mentioned below are the 7 secret things, which must be done on each day of the week, if you wish to invite good luck, name, fame and wealth in your lives.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter