மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எலும்பு, இரத்தம், தசையை தோலால் மூடிய மனித உடலினுள் பல மாயங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. மனித உடலைப் பற்றி ஆராய்ந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சரியங்களைக் கண்டுபிடிக்கலாம். அந்த அளவில் மனித உடலானது ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக உள்ளது. இன்றும் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலை ஆராய்ந்து விடை தெரியாமல் தான் குழப்பத்தில் உள்ளனர்.

Facts You Didn't Know About How Amazing Your Body Is

முக்கியமாக மனித உடலின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளது. இக்கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட மனித உடல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த சில ஆச்சரியத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கர்ப்பிணிகள் சிலரது கனவில் பூந்தொட்டி, செடிகள், தவளை, புழுக்கள் போன்றவை வருமாம். இப்படி வருவது ஏன் என்பது கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக அளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

#2

#2

தூக்கத்தில் ஒருவருக்கு கெட்ட கனவு வருவது ஏன் தெரியுமா? உறங்கும் அறை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதும் ஒரு காரணமாம்.

#3

#3

இரத்தத்தில் உள்ள ஒரு சிவப்பணு, ஒரு நிமிடத்தில் உடல் முழுவதும் சுற்றிவிடும் என்பது தெரியுமா?

#4

#4

நம் உடலில் உள்ள இரும்புச்சத்தைக் கொண்டு, சுமார் 8 செ,மீ நீளமுள்ள ஆணி செய்ய முடியுமாம்.

#5

#5

மனித எலும்புகள் கான்கிரீட்டை விட மிகவும் வலிமை வாய்ந்தவை.

#6

#6

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு காற்றை சுவாசிக்கிறோம் என்று தெரியுமா? மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் காற்றை சுவாசிக்கிறான்.

#7

#7

மனித குரங்கின் உடலில் அதிக முடி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் நம் உடலிலும் அதே அளவு முடி உள்ளது என்பது தெரியுமா? ஆனால் நம்முடைய முடி மெல்லியது மற்றும் குட்டையானது. இது தான் வித்தியாசம்.

#8

#8

குடல்வால் பயனில்லாத உறுப்பு என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சமீபத்திய ஆய்வில், உண்ணும் உணவை செரிக்கத் தேவையான பாக்டீயாவை குடல்வாலில் தான் உள்ளது என்பது தெரிய வந்தது.

#9

#9

பெண்கள் ஆண்களை விட 2 மடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள். அதேப் போல் ஆண்களை விட பெண்களுக்கு தான் வாசனை அறியும் திறனும் அதிகம்.

#10

#10

குடலில் மெல்லிய இரும்பு தகட்டை கரைக்கக்கூடிய சக்தி கொண்ட நொதிகள் சுரக்கின்றன. இந்த நொதிகள் தான் நாம் உண்ணும் இறைச்சியை செரிமானம் செய்கிறது.

#11

#11

மூளை சம்பந்தமான ஒரு வித்தியாசமான நோய் தான் வேற்றுகிரகவாசியின் நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கை தானாக அனிச்சையாக நகர்ந்து கொண்டிருக்கும்.

#12

#12

'ஐலேஸ் மைட்ஸ்' என்னும் நுண்ணுயிரி கண் இமைகளில் உயிர் வாழ்கிறது. நுண்ணோக்கியின் உதவியுடன் பார்த்தால் இதைக் கண்டு பிடிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts You Didn't Know About How Amazing Your Body Is

Human body is full of surprises and incredible processes that make up a person. Here are some surprising facts about human body. Read on...
Story first published: Sunday, December 17, 2017, 11:00 [IST]