For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி எல்லாமா அந்த காலத்துல வைத்தியம் பார்த்தாங்க... அடக்கடவுளே!

இப்படி எல்லாமா அந்த காலத்துல வைத்தியம் பார்த்தாங்க... அடக்கடவுளே!

|

பெரும்பாலான மக்களுக்கு மருத்துவர்களிடம் செல்வதென்றால் அச்சம் இருக்கும். அதற்கான முக்கிய காரணம் மருந்துகளும், ஊசியும் தான். அதிலும், பல் மருத்துவரிடம் செல்வதெனில் பயம் மட்டுமல்ல, வலியும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

இன்று பல நவீன யுக்திகள், கருவிகள் வந்துவிட்டன. பல்லை பிடுங்கும் போது வலி தெரியாமல் இருக்க மருந்துகள் எல்லாம் தரப்படுகிறது. அப்படி இருப்பினும் கூட, பல் பிடுங்கிய பிறகு ஓரிரு நாட்கள் எந்த உணவையும் மென்று சாப்பிட முடியாத நேரிடும்.

மாடர்ன் மருத்துவமே இத்தைகைய வலியை தருகிறது எனில், அந்த காலத்தில் எப்படி பல்லை பிடிங்கியிருப்பார்கள். அப்போது எத்தனை நாட்களுக்கு அந்த வலி இருந்திருக்கும் என்பதை இந்த படங்களை பார்த்தே நீங்கள் முடிவு செய்திவிடலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விடுவோமா?

விடுவோமா?

சிர்கா (Circa) 1910ல் பல் மருத்துவர் ஒருவர் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும் என்றால் அவருக்கு இரண்டு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது. இதை பார்த்தல் பல் பிடுங்குவது போலவா இருக்கிறது? ஏதோ தீவிரவாதியை பிடித்து வைத்துக் கொண்டு, உண்மையை சொல்ல கூறி சித்திரவதை செய்வது போன்றல்லவா இருக்கிறது.

Image Credit: Transcendental Graphics

கத்திய விட்டு ஆட்டுறாங்க...

கத்திய விட்டு ஆட்டுறாங்க...

இது 19ம் நூற்றாண்டில் (1897ல்)... ஓர் ஆங்கிலேய தாய், தனது மகனின் சொத்தை பல்லை பிடுங்க அப்போது பயன்பாட்டில் இருந்த கருவியை கொண்டு ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார். ஆனால், பார்ப்பதற்கு ஏதோ கொலை சம்பவம் நடந்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது.

Image Credit: Bettmann

புத்தகத்தில்...

புத்தகத்தில்...

1906ல் பல் மருத்துவ புத்தகத்தில் ஆர்த்தோடோண்டிங் (Orthodontic) சிகிச்சை குறித்து அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்கள். வாயின் இரண்டு பக்கத்திலும் கிடுக்குப்பிடி போட்டு, அடைக்க முடியாத நிலைக்கு கொண்டு வந்த, அதன் பிறகு மருத்துவம் செய்து வந்த முறையை இது காட்டுகிறது.

Image Credit: Public Domain

விடா முயற்சி...

விடா முயற்சி...

பல்வேறு மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையில்... ஒரு மனிதர், மற்றொரு நபரின் பல்லை, தனது உதவியாளிரின் துணையோடு இழுத்து பிடுங்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் 1872ல் எடுக்கப்பட்டதாகும்.

Image Credit: F.G. Weller/Library of Congress/

உலகப்போர்!

உலகப்போர்!

1915ல் முதலாம் உலக போரின் போது, இராணுவ வீரர் ஒருவருக்கு பல் மருத்துவம் அளித்துக் கொண்டிருக்கிறார். இராணுவ மருத்துவர் ஒருவர். இது லண்டனில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

Image Credit: Wellcome Library, London

இந்தியா

இந்தியா

1957ல் அப்போதைய இந்தியாவின் மருத்துவ முறையில் இயற்கை பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் மருத்துவம் காண வந்த நபர் ஒருவரின் பல்லை பிடுங்கிக் கொண்டிருக்கும் கார்சி. அவரது உதவியாளர், அவர் அசையாமல் இருக்க உதவிக் கொண்டிருக்கிறார்.

Image Credit: KEYSTONE-FRANCE/Gamma-Rapho

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவின் கடற்கரை பகுதி பாதுகாப்பு படையை சேர்ந்த மருத்துவ சேவை செய்யும் நபர்கள். அலாஸ்காவை சேர்ந்த ஒரு கிராமத்தில் உள்ளூர் பெண்மணி ஒருவருக்கு பல் பிடுங்க மருத்துவம் செய்யும் போது எடுக்கப்பட்ட படம் இது.

தப்பா நினைக்காதீங்க... அவரு மருத்துவம் தான் பார்த்துட்டு இருக்காரு.

Image Credit: Hulton Archive

மெஷின்!

மெஷின்!

1952ல் பல் மருத்துவம் செய்ய, பல் பிடுங்க கண்டுபிடிக்கப்பட்ட மெஷின் இது. இதில், பல் பிரச்சனை இருக்கும் நபரை படுக்க வைத்து, அவரது தலை அசையாமல் இருக்கும் படி கட்டி, பல்லை பிடுங்கி வந்துள்ளனர்.

Image Credit: Found Image Holdings/Corbis

பெர்ஷியா!

பெர்ஷியா!

பெர்ஷியாவில் பல் மருத்துவம் செய்யும் நபர் ஒருவர். தன்னிடம் பல் பிரச்சனையுடன் வந்த நோயாளியை குத்தவைத்து உட்கார செய்து, அவரது பல்லை பிடுங்கிக் கொண்டிருக்கிறார். இது எந்த காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதுஅறியப்படவிள்ளில்.

Image Credit: Wellcome Library, London

பெண்மணி...

பெண்மணி...

பல் தொற்று இருந்த காரணத்திற்காக வலது புறத்தில் பல பற்கள் இந்த பெண்மணிக்கு பிடுங்கப்பட்டது. ஆனால், அந்த தோற்று அவரது ஈறுகளில் வலுவாக பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த புகைப்படம் 1912 எடுக்கப்பட்டதாகும்.

Image Credit: Internet Archive Book Images/Flickr

1817ல்

1817ல்

பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் பல் பிடுங்க வந்த நோயாளிக்கு எப்படி பல்லை பிடுங்குகிறார் என்பதை காட்டும் 1817 ஆண்டை சேர்ந்த ஓவியம் இது. ஓர் மேடையில், பலர் முன்னிலையில் பல் பிடுங்குவது எப்படி என்பதை இவர் விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த ஓவியம். சான்ஸ் எனும் நபர் இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார்.

Image Credit: Wellcome Library, London

1905

1905

பல் பிடுங்கும் போது நோயாளிக்கு மட்டுமல்ல, அந்த மருத்துவருக்கும் கூட வலிக்க தான் செய்யும். இப்போது போல மிக எளிதாக பிடுங்க முடியாது. தவறாக பிடுங்கிவிட்டால் நோயாளியின் நிலை மோசமாகிவிடும். பிறகு அவரிடம் யாரும் வர மாட்டார்கள். அதுமட்டுமின்றி, எவ்வளவு பெரிய பேரழகியாக இருந்தாலும்... வாய் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதிலும், சொத்தை பல் பிடுங்குவது என்பது சொல்லிமாளாத காரியம்.

Image Credit: Kirn Vintage Stock/Corbis

சீனா

சீனா

இது சீனாவில்.. 1890களில்... ஒரு சீன பல் மருத்துவர் சொத்தை பல்லுடன் வந்த நபர் ஒருவரின் பல்லை தனது உதவியாளர்களின் துணையோடு பிடுங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது இந்த புகைப்படம்.

Image Credit: Bettmann

சூடு வைத்து...

சூடு வைத்து...

சொத்தை பல்லுடன் தன்னிடம் வந்த நபருக்கு, பல் பிடுங்கும் இடத்தில், வேறு கிடுக்கி மூலம் சூடு வைத்து, அதன் அருகில் இருக்கும் பல்லை பிடுங்கிக் கொண்டிருக்கிறார் ஆங்கில பல் மருத்துவர். இது 1810ல் வரையப்பட்ட ஓவியமாகும்.

Image Credit: National Library of Medicine

கூட்டமாக..

கூட்டமாக..

இரண்டாம் உலகப் போரின் போது, பல் புரச்சனை இருந்த இராணுவ வீரர்களுக்கு ஒன்றாக பல் பிடுங்கும் சிகிச்சை அளித்துள்ளனர். அதில், வரிசையாக பல் பிடுங்கப்படும் போது எடுக்கப்பட்ட படம். பல்லை பிடுங்கிய நபர்களுக்கு தலையில் ஒரு கட்டுப் போட்டுள்ளனர். அருகே, மற்ற போர் வீரர்கள் மருத்துவர்களுக்கு உதவி செய்து வருவதை படத்தில் காண முடியும்.

Image Credit: Michael Kassube/Wikimedia Commons

கையாலேயே..

கையாலேயே..

தனது கையாலேயே பல்லை பிடுங்கும் நபர். வலி தாளாமல் பல் பிடுங்க வந்த நோயாளி கத்தி, கதறுகிறார். இந்த ஓவியம் எப்போது வரையப்பட்டது என்பதற்கான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

Image Credit: Henry William/Wellcome Library, London

விற்பனை

விற்பனை

ஒரு வணிகர், அம்ஸ்ரடாம் பகுதியில் 1955ல் செகண்ட் ஹேன்ட் பற்களை சந்தியில் விற்றுக் கொண்டிருப்பதை இந்த படத்தில் காணலாம். இது மருத்துவர்களிடம் சென்று மாற்று பல் சிகிச்சை செய்துக் கொள்ள முடியாத நபர்களுக்கானது என கூறப்படுகிறது.

Image Credit: Vagn Hansen/BIPs/

சலூன் கடை அல்ல..

சலூன் கடை அல்ல..

நேராக பலரும் நாற்காலியில் அமர்ந்திருப்பதை கண்டு சலூன் கடை என நினைத்திட வேண்டாம். இது அமெரிக்க பல்மருத்துவர்கள் மையம். இங்கே பல் மருத்துவம் மேற்கொள்ள, சொத்தை பற்களை பிடுங்க நோயாளிகள் வந்து செல்லும் போது எடுத்தப்படம். தேதி தகவல் இல்லாளி.

Image Credit: U.S. Signal Corp

என்னடா இது?

என்னடா இது?

இதுவொன்றும் நரகத்தில் வழங்கப்படும் கருட புராண தண்டனை கிடையாது. 12ம் நூற்றாண்டில் பல் மருத்துவர் எப்படி பல்லை பிடுகினார் என்பதை காட்டும் ஒரு காமிக் ஓவியம் அவ்வளவு தான்.

Image Credit: Image Credit: PHAS/UIG

ஆப்ரிக்கா

ஆப்ரிக்கா

ஆப்ரிக்காவில் பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் சொத்தை பல்லுடன் வந்த நோயாளிக்கு எப்படி பல்லை பிடுங்குகிறார் என்று பாருங்கள். ஒரு மரக் குச்சியை வைத்துக் கொண்டு, வாயில் சிகரட் பிடித்துக் கண்டு வைத்தியம் செய்து வருகிறார். இது எப்போது

Image Credit: Image Credit: Wellcome Library, London

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Creepy Pictures From The Early History Of Dentistry!

Creepy Pictures From The Early History Of Dentistry!
Story first published: Friday, December 22, 2017, 10:54 [IST]
Desktop Bottom Promotion