For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் விசித்திர பொது கழிவறைகள் பற்றிய வினோத உண்மைகள்!

இங்கு உலக நாடுகளின் விசித்திர பொது கழிவறைகள் பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது

|

கழிவறையில் என்ன விசித்திரம், வியப்பூட்டும் வகையில் என கேட்கிறீர்களா? இருக்கிறது, நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான கழிவறை அமைப்பு, பயன்படுத்தும் முறை இருப்பது இல்லை.

பல நாடுகள், பல வகையில் அவர்களுக்கு ஏற்ப வடிவங்களில் கழிவறை முறை பின்பற்றி வருகின்றனர். இவற்றில் சில பொது கழிவறை முறைகள் விசித்திரமாகவும், அச்சம்படும் வகையிலும் கூட அமைந்திருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டைய ரோமாபுரி!

பண்டைய ரோமாபுரி!

சற்று முகம் சுளிக்கும் படி தான் இருக்கும். ஆம், பண்டைய காலத்து ரோமாபுரியில் ஒரே பஞ்சை மலம் கழித்த பிறகு அனைவரும் பயன்படுத்தி வந்த வழக்கம் இருந்ததாம்.

Image Source

ஜெர்மனி!

ஜெர்மனி!

கழிவறை சார்ந்து அதிக கவனம் செலுத்தும் நாடாக இருக்கிறது ஜெர்மனி. இந்நாட்டில் பொது கழிவறைகள் மிக ஸ்டைலாக உருவாக்கப்பட்டுள்ளன.

Image Source

லாவோஸ்!

லாவோஸ்!

இங்கு வாழும் மக்கள் பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரவர் சொந்த டாய்லெட் பேப்பர் எடுத்து செல்ல வேண்டும்.

Image Source

நியூசிலாந்து!

நியூசிலாந்து!

நியூசிலாந்தில் பொது கழிவறைகள் தனித்துவமான கான்சப்ட் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவர்கள் அதிகம் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை கொண்டு தான் கட்டுகின்றனர். இது பாராட்டுக்குரியது.

Image Source

ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் பொது கழிவறை பயன்படுத்தும் போது, திடீரென பாம்பு வந்துவிட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆண்டு இது இயல்பாக நடக்கும் செயல் தானாம்.

Image Source

அயர்லாந்து!

அயர்லாந்து!

அயர்லாந்தில் அவர் நாட்டு போது கழிவறைகளை அவர்களே பயன்படுத்துவது இல்லையாம். 76% பேர் கழிவறை சீட்டை தொடுவதற்கே அச்சம் கொள்கிறார்களாம். 62% பேர் பயன்படுத்த ஒருபோதும் தயாராக இல்லை என கூறுகின்றனர்.

Image Source

கிராமப்புற சீனா!

கிராமப்புற சீனா!

கிராமப்புற சீனாவில் இருக்கும் பெரும்பாலான பொது கழிவறைகள் இருபாலினர் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. அதாவது, ஆண், பெண் என தனித்தனியாக இருக்காது.

Image Source

ஸ்வீடன்!

ஸ்வீடன்!

ஸ்வீடனில் நீங்கள் பொது கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றால் தேவையான சில்லறை சரியாக எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில், அங்கு சிறுநீர், மலம் கழிப்பதற்கு தனித்தனி அளவில் பணம் வசூலிக்கப்படுகிறது.

Image Source

ஜப்பான்!

ஜப்பான்!

இதில், நீங்கள் சரியான முறையில் தான் அமர்ந்து கழிவறை பயன்படுத்துகிறீர்களா என்பதை கண்டறியவே தனி மூளை வேண்டும் போல.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Toilet Facts To Know From Around The World

These toilet facts from around the world are quite bizarre and these some of these facts will may simply disgust you! Check them out…
Story first published: Monday, April 3, 2017, 17:09 [IST]
Desktop Bottom Promotion