For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017ல் உலகை கலக்கிய தமிழ் யூடியூப் சேனல்கள்!

2017ல் உலகை கலக்கிய தமிழ் யூடியூப் சேனல்கள்!

|
Best Tamil Youtube Channels 2017!

வரவர டிவி சேனல்களை பார்ப்பதைவிட யூடியூப் சேனல் பார்க்கலாம் போல என்று பலதரப்பட்ட மக்களும் கூற ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஒரே காரணம், சாட்டிலைட் சேனல்களை காட்டிலும் சிறந்த வகையில், சிறப்பான முறையில் கேளிக்கை நிகழ்சிகள் செய்பவர்கள் இந்த யூடியூப் சேனல் நடத்துபவர்கள்.

பெரும்பாலும் கலாய்க்க துவக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் கூட இப்போது சமூக பொறுப்புடன் பல வீடியோக்களை தயாரித்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரபல சாட்டிலைட் சேனல்கள் எல்லாம் கவர்ச்சி காட்டி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

"அம்மா" இறந்ததில் இருந்து யார் எப்படி இருக்கிறார்களோ தெரியாது, ஆனால் தமிழ் யூடியூப் சேனல்கள் ரொம்ப நல்லா இருக்காங்க. ஏனெனில், இவர்களுக்கு டாபிக் தீனிப் போடுவதே சில அரசியல் கட்சிகள் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

சரி! இந்த வருடம் 2017ல் யூடியூபை கலக்கிய சில தமிழ் சேனல்கள் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்ராஸ் செண்ட்ரல்!

மெட்ராஸ் செண்ட்ரல்!

மெட்ராஸ் என்றாலே மெட்ராஸ் செண்ட்ரல் யூடியூப் சேனலா? என கேள்வி கேட்கும் அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது மெட்ராஸ் செண்ட்ரல். இதற்கு முக்கிய காரணம் கோபி மற்றும் சுதாகர் தான். பரிதாபங்கள் என்ற தொகுப்பில் அவர்கள் வெளியிடம் வீடியோக்கள் அனைத்தும் யூடியூப் டிரென்ட் லிஸ்ட்டில் இடம் பெற்றுவிடுகிறது. மில்லியன் பார்வைகளை கடந்து, இரண்டு மில்லியன், மூன்று மில்லியன் என்ற பார்வைகளை கடந்துக் கொண்டிருக்கிறது இவர்கள் வெளியிடும் வீடியோக்கள்.

ஒரிஜினல்!

ஒரிஜினல்!

ஒரிஜினல் என கூறப்படும் இணையத்தள சீரியல்களில் களம் புகுந்தது மெட்ராஸ் செண்ட்ரல் இந்த வருடம். அவர்கள் துவக்கிய லிவ்-இன், ஆப் பாயில் என்ற இரண்டு ஒரிஜினல் சீரியல்களும் சூப்பர் ஹிட். இதை பார்த்து, கௌதம் வாசுதேவ் மேனன், தனது ஒன்றாக யூடியூப் சேனலில் சுதாகரை வைத்து ஒரு ஒரிஜினல் சீரியல் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மெட்ராஸ் செண்ட்ரலுக்கு இந்த வருடம் மறுக்க முடியாத ஆண்டாக இருக்க ஒரு காரணம் இருக்கிறது. இந்த வருடம் தான் இவர்கள் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்றனர்.

எரும சாணி!

எரும சாணி!

தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் ஓஹோ புகழ், வளர்ச்சி அடைவதை நாம் நிறைய முறை பார்த்திருப்போம். அந்த வகையில் ஒரே விடியோவில் ஓஹோவென யூடியூபில் ஹிட் ஆனவர்கள் விஜய் மற்றும் ஹரிஜா. இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட எருமை சாணி வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என அனைத்து சமூக தளங்களிலும் வைரலனது.

அதிலும், விஜய் கூறும் அந்த ஆண்டி என்ற வார்த்தை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறியது.

நிச்சயம்!

நிச்சயம்!

இந்த வருடத்தை எருமை சாணி யூடியூப் சேனலை சேந்தவர்களாலும் மறக்க முடியாமல் அமைந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒருசில வீடியோக்களின் மூலம் தமிழ் நாட்டின் இளைஞர்கள் மனதில் சினிமா நடிகை அளவிற்கு நாற்காலி போட்டு உட்கார்ந்தவர் ஹரிஜா. சரி எப்படியும் அடுத்தது இலக்கு சினிமா என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவர் நிச்சயம் செய்துக் கொண்டு திருமண வாழ்வில் நுழைய திட்டமிட்டுவிட்டார். இதனால் ஹரிஜா ரசிகர்களை காட்டிலும், விஜய் ரசிகர்கள் தான் பெரும் சோகத்திற்கு ஆளாகினர்.

ஜம்ப் கட்ஸ்!

ஜம்ப் கட்ஸ்!

சிங்கம் சிங்கிளா தான் வரும் என்ற பஞ்ச டயலாக் இந்த நபருக்கு நூறு சதவிதம் பொருந்தும். ஜம்ப் கட்ஸ் ஹரி, தானே ஒற்றை ஆளாக அத்தனை பாத்திரங்களும் செய்து கலகலக்க வைக்கும் நபர். மெட்ராஸ் செண்ட்ரலுக்கு அடுத்த யூடியூபில் போட்டவுடன் மில்லியன் பார்வைகள் தாண்டும் சேனலாக விளங்குகிறது ஜம்ப் கட்ஸ்.

பார்க்க எளிமையாக இருந்தாலும், ஜம்ப் கட்ஸ் சேனல் தயாரிக்கும் ஒவ்வொரு வீடியோவுக்கு பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. மற்ற வீடியோக்களை விட, இவர்கள் செய்யும் வீடியோக்கள் நடிப்பதும் சிரமம், அதை எடுத்து எடிட் செய்வதும் சிரமம். ஆனால், அதை மிக அசால்ட்டாக செய்து முடித்து அசத்துகிறார்கள் ஜம்ப் கட்ஸ் டீம். (இவர் டீம் மொத்தம் இரண்டே பேர், அதில் ஹரியும் ஒருவர்!!!)

புட் சட்னி!

புட் சட்னி!

புட் சட்னியின் வளர்ச்சிக்கு பெரும் காரணம் ராஜ் மோகன் அவர்கள் தான். தனது கம்பீர குரல், வீரமிகுந்த வார்த்தைகளால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெற்றவர். இவரது பேச்சை கேட்கும் போதே தெரியும், இவர் நிச்சயம் பள்ளி, கல்லூரி காலங்களில் நிறைய மேடைகள் கண்டிருப்பார் என. இவரது பேச்சில் தமிழுக்கு கொஞ்சம் அழகு கூடிப் போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூக அக்கறை!

சமூக அக்கறை!

சமூக அக்கறை கொண்ட சேனல்களில் புட் சட்னிக்கு தனி பங்குண்டு. அதில், ராஜ் மோகனுக்கு பெரும் பங்குண்டு. கபாலி ரஜினியில் துவங்கி, காவேரி, பணமதிப்பிழப்பு என அனிதா வரை ராஜ் மோகன் பேசி வெளியான அனைத்து வீடியோக்களும் தன்னிகரற்றவை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

புட் சட்னியிடம் இருந்து, ராஜ் மோகனிடம் இருந்தும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற சமூக அக்கறை கொண்ட வீடியோக்கள் தான்.

ஸ்மைல் சேட்டை!

ஸ்மைல் சேட்டை!

ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு நபர் அந்த சேனலை தாங்கிப் பிடிக்கும் ஸ்டாராக இருப்பார்கள். ஆனால், ஸ்மைல் சேட்டையில் மட்டுமே, அதில் பங்குபெறும் அனைவரும் ஸ்டாராக இருப்பார்கள். விக்னேஷ் காந்த், கார்த்திக், அன்பு மற்றும் புதியதாக இந்த வருடம் டம்பஸ்ட் ரிவ்யூ மூலமாக இணைந்த அந்த ஓவர் ஆக்டிங் நபர் (சாரி பாஸ் உங்க பெயர் தெரியல). அவரை ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும், அவரை போல எக்ஸ்பிரஷன் காண்பிக்க ஸ்மைல் சேட்டையில் வெரி ஆட்கள் இல்லை என்று கூறலாம். ஏன், தமிழ் யூடியூப் சேனல்களிலும் கூட அப்படி ஆள் இல்லை என்பது தான் உண்மை.

மனிதர் எந்த பாத்திரம் எடுத்தாலும், அதுவாக முற்றிலும் மாறிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார். நிச்சயம் எதிர்காலத்தில் இவருக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பிளாக் ஷீப்!

பிளாக் ஷீப்!

ஸ்மைல் சேட்டையின் அங்கம் தான் பிளாக் ஷீப். ஸ்மைல் சேட்டை செய்த பெரிய தவறு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு சேனல்கள் ஆரம்பித்தது தான். ஆகையால், தான் இவர்களது சப்ஸ்கரைபர் எண்ணிக்கை மில்லியனை தொட தாமதமாகிக் கொண்டே போகிறது.

மெட்ராஸ் செண்ட்ரலுக்கு ஒரு பரிதாபங்கள் போல ஸ்மைல் சேட்டையின் பிளாக் ஷீப்புக்கு "டிப்ஸ் ஆப்..." என்ற டாபிக் கிடைத்துள்ளது. இதை வைத்து பார்வையாளர்கள் ரசிக்கும் படி பல வீடியோக்கள் செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Tamil Youtube Channels 2017!

Best Tamil Youtube Channels 2017!
Story first published: Thursday, December 21, 2017, 16:19 [IST]
Desktop Bottom Promotion