இறந்த குழந்தை, இறுதி சடங்கிற்கு ஒரு நிமிடத்திற்கு முன் உயிர் பெற்ற அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky

நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தான் ஒவ்வொரு பெற்றோரது கனவாகவும் இருக்கும். ஒருவேளை பிரசவித்த கர்ப்பிணி, குழந்தையை குறைப்பிரசவத்தில் பெற்றெடுத்தால், அது அப்பெண் மற்றும் குழந்தையின் தந்தைக்கு பெரும் மன அழுத்தத்தைத் தரும்.

Baby Was Declared Dead, But Was Alive Minutes Before Funeral

இந்த வழக்கில் குறைப்பிரசவத்தில் பிறந்த புதிய குழந்தை இறந்துவிட்டதாக, பிரசவம் பார்த்த செவிலியர்கள் கூறிவிட்டனர். அதுவும் மருத்துவர் இல்லாத நேரத்தில் குழந்தை பிறந்ததோடு, மருத்துவர் பரிசோதித்து சொல்லாமலேயே அம்மாதிரியான முடிவை தெரிவித்துவிட்டனர்.

அதிர்ஷ்டவசமாக அக்குழந்தைக்கு இறுதி சடங்கை செய்ய ஆரம்பிக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் சரியாக கவனித்ததால், குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இந்த கதையை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

ராஜஸ்தானின் புண்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலி அதிகமானதன் காரணமாக, மகப்பேறு மருத்துவர் இல்லாமலேயே வெறும் செவிலியர்களின் உதவியுடன் குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது.

22-24 வார குழந்தை

22-24 வார குழந்தை

இந்த குழந்தை கருவுற்று 22-24 வாரங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் அந்த குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறக்கும் போது, அதன் எடை 350-400 கிராம் தான் இருக்கும்.

குழந்தை இறந்துவிட்டதாக கூறிய செவிலியர்

குழந்தை இறந்துவிட்டதாக கூறிய செவிலியர்

பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்துவிட்டனர். அதுவும் அவர்கள் குழந்தை பிறந்த பின், அதற்கு செய்ய வேண்டிய முறைய சோதனைகள் ஏதும் செய்யாமல், குழந்தை அசையவில்லை மற்றும் மூச்சு விடவும் இல்லை என்பதை மட்டும் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதாக முடிவெடுத்துவிட்டனர்.

குடும்ப உறுப்பினர்களிடம் இறந்த குழந்தை ஒப்படைப்பு

குடும்ப உறுப்பினர்களிடம் இறந்த குழந்தை ஒப்படைப்பு

செவிலியர்கள் குடும்ப உறுப்பினர்களிடம், குழந்தையிடம் எவ்விட அசைவும் இல்லை, எனவே குழந்தை இறந்துவிட்டது, மேற்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள் என்று கூறி இறந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டனர்.

குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம்

குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம்

இறந்துவிட்ட குழந்தைக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், குடும்ப உறுப்பினர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் மூச்சுவிடுவதைப் பார்த்து, குழந்தை உயிருடன் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். ஒரு பக்கம் இச்சம்பவம் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் தவறாக கூறிய செவிலியர்களின் மீது அளவில்லாத கோபத்துடன் இருந்தனர்.

மருத்துவமனை மீது வழக்கு

மருத்துவமனை மீது வழக்கு

குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, நீதி வேண்டுமென்று போராடினர். பின் பொறுப்பின்றி நடந்து கொண்ட செவிலியர்களின் செயலால், மருத்துவமனை மீது வழக்கு பதியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Baby Was Declared Dead, But Was Alive Minutes Before Funeral

This is the story of a baby who was declared dead, but was alive when they were taking the baby for funeral. Check out this bizarre story…
Story first published: Saturday, April 8, 2017, 17:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter