இனச்சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

பிறப்பு என்றால் நிச்சயம் இறப்பும் இருக்கும். ஆனால் சில விலங்குகள் தன் துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும் போது உயிரைத் துறக்கும் என்பது தெரியுமா? ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகள், இனச்சேர்க்கையில் ஈடுபடும் போதே, உயிரைவிடுபவைகளாகும்.

சரி, இப்போது இனச்சேர்க்கையின் போதே உயிரை விடும் அந்த விலங்குகள் எவையென்று பார்ப்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சோந்தி வகைகள் (Furcifer Labordi Chameleons)

பச்சோந்தி வகைகள் (Furcifer Labordi Chameleons)

இந்த வகையான பச்சோந்திகள் இனச்சேர்க்கையின் போது இறந்துவிடுமாம். ஆராய்ச்சியாளர்களின் படி, இந்த பச்சோந்திகள் இனச்சேர்க்கைக்கு முயற்சிக்கும் போது ஒன்றை ஒன்று அழித்துக் கொள்ளாது. மாறாக இனச்சேர்க்கையின் போது, அதன் உடலினுள் சுரக்கப்படும் அதிகப்படியான ஹார்மோன்களால் இறந்துவிடுமாம்.

ஆண் ஆன்டிசினஸ் (The Male Antechinus)

ஆண் ஆன்டிசினஸ் (The Male Antechinus)

இந்த விலங்கு இடைவேளை இல்லா 14 மணிநேர உடலுறவு காலத்தில் இறந்துவிடுகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால், அதன் நோயெதிர்ப்பு மண்டலம் அழிக்கப்படுகிறது. இதனால் கல்லீரலில தொற்றுக்கள், இரத்தத்தில் மற்றும் குடலில் கிருமிகளின் பெருக்கத்தால், ஆண் ஆன்டிசினஸ் இனம் இறப்பை சந்திக்கிறது.

ஆண் ஆஸ்திரேலிய ரெட்பேக் சிலந்திகள் (Male Australian Redback Spiders)

ஆண் ஆஸ்திரேலிய ரெட்பேக் சிலந்திகள் (Male Australian Redback Spiders)

இந்த வகை சிலந்திகள் உறவு கொண்ட பின் தன் உயிரைவிடும். அதுவும் அவைகள் தெளிவாக பாலியல் தற்கொலை செய்து கொள்ளும்.

ஆண் லிட்டில் ரெட் கலூட்டா

ஆண் லிட்டில் ரெட் கலூட்டா

பழமையான புல்வெளியில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்த ஆண் லிட்டில் ரெட் கலூட்டாவும், உறவு கொள்ளும் போது உயிரைவிடும். வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகையைச் சார்ந்த இதன் ஆண் இனம், உறவு கொண்ட பின் இறந்துவிடும்.

ஆண் பிரேசிலிய ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ்

ஆண் பிரேசிலிய ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ்

ஆராய்ச்சியாளர்களின் படி, இந்த வகை விலங்கின் ஆண் இனம் உறவு கொண்ட பின்னும், பெண் இனம் பிரசவத்திற்கு பின்னும் இறந்துவிடுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Animals That Mate Themselves To Death

Did you know that there are certain animals that die during mating? Check out the list below…
Subscribe Newsletter