உணவு என்று நினைத்து 915 நாணயங்களை விழுங்கிய ஆமை!

Posted By:
Subscribe to Boldsky

மக்கள் தொகை அதிகரித்து, மனிதர்கள் வாழ்வதற்கு இடங்கள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், மிருகங்களின் இனம் அழிந்து கொண்டே வருகிறது. மேலும் மரங்களை வெட்டுவது, கடலில் எண்ணெய் சிந்தியது போன்றவற்றால் பல மிருகங்கள் அழிந்து வருகின்றன.

இப்போது நாம் பார்க்கப்போவது ஓர் பெண் ஆமையின் கதையைப் பற்றி தான். இந்த ஆமையின் பெயர் 'ஓம் சின்'. இந்த ஆமை சுமார் 915 நாணயங்களை தனக்கான உணவு என்று நினைத்து உட்கொண்டு, பல நாட்களால் அவஸ்தைப்பட்டு வந்தது. இந்த சோகக் கதையைத் தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நகர முடியாமல் தவிப்பு

நகர முடியாமல் தவிப்பு

ஓம் சின் என்னும் ஆமை பல நாட்களாக நகர முடியாமல் வலியால் அவஸ்தைப்பட்டு வந்தது. இதை வளர்த்து வந்தவர், எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் ஆமை திடீரென்று அமைதியாக அசௌகரியத்துடன் இருந்ததை புரிந்து கொண்டு, அதை மருத்துவரிடம் கொண்டு சென்றார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

ஆமையின் அசாதாரண நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பதை சோதித்த மருத்துவர், ஆமையின் வயிற்றில் ஏதோ இருப்பதை அறிந்து, உடனே இந்த ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

7 மணிநேர அறுவை சிகிச்சை

7 மணிநேர அறுவை சிகிச்சை

இந்த ஆமைக்கு 7 மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சிகிச்சையின் முடிவில் ஆமையின் வயிற்றில் இருந்து சுமார் 5 கிலோ எடையுடைய நாணங்கள் எடுக்கப்பட்டன.

வயிற்றில் விரிசல்

வயிற்றில் விரிசல்

ஆமையின் வயிற்றில் உள்ள நாணங்களின் எடையால், ஆமையின் வயிற்றுப் பகுதியில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் தான் ஆமை நகர முடியாமல் தவித்தது.

எங்கிருந்து இவ்வளவு நாணயங்கள் ஆமைக்கு கிடைத்தது?

எங்கிருந்து இவ்வளவு நாணயங்கள் ஆமைக்கு கிடைத்தது?

தாய்லாந்து மக்களின் நம்பிக்கையின் படி, ஆமையின் மீது நாணயங்களை போடுவதன் மூலம், அதிர்ஷ்டம் கொட்டுமாம். அப்படி நாணயங்களை ஆமையின் மீது போட்டதால், ஆமை அந்த நாணயங்களை உணவாக கருதி உட்கொண்டுள்ளது.

வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

எப்படியோ ஆமையின் வயிற்றில் இருந்து 5 கிலோ எடை கொண்ட சுமார் 915 நாணங்களை வெளியேற்றப் பட்டுவிட்டது. இந்த ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களோ, இதுவரை இம்மாதிரியான ஒரு வழக்கை எதிர்கொண்டது இல்லை என்று கூறினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Turtle Consumed 915 Coins Thinking It To Be Food!!

A turtle consumed coins thinking that it was food! Check out on his heartbreaking story.
Story first published: Saturday, March 11, 2017, 13:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter