வீட்டில் செல்வத்தை அதிகரிப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ்...!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவின் பண்டைய முனிவர்கள் குறிப்பிட்ட சில கொள்கைகளை வகுத்தனர். அதன் பின் மனித இனம் வாழ்க்கை முறையை மேம்படுத்தி வாழ்ந்து வந்தது. இந்த கொள்கைகளை சரியான முறையில் பின்பற்றி வந்தால், அதன் முழுமையான பலன்களைப் பெறுவதோடு, அமைதியான வாழ்க்கையையும் வாழ முடியும். மனித இனம் முழு பலன்களையும் பெற ஒரே வழி இயற்கை மற்றும் அண்ட சக்தி என்பதை ஞானிகள் பின்பு தான் அறிந்தனர். அப்படி வந்தது தான் வாஸ்து சாஸ்திரம்.

15 Vaastu Tips To Increase Wealth

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உலகமானது சூரியன், சந்திரன், பூமி, ஒன்பது கோள்கள், காந்த அலைகள் மற்றும் 5 கூறுகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனது. இந்த அனைத்து அண்ட சக்திகளும் சரியான இணக்கத்துடன் இருந்தால் தான், மனிதர்களால் வளமான வாழ்வை வாழ முடியும். அண்ட சக்திகள் சமநிலையில் இல்லாவிட்டால், அது மனித வாழ்வில் அனைத்து துறைகளிலும் துரதிர்ஷ்டத்தையே ஈர்க்கும்.

எனவே அதிர்ஷ்டத்தை தன் பக்கம் ஈர்த்து, வீட்டில் செல்வ வளம் பெரு உதவும் சில வாஸ்து டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி ஒருவர் நடந்து கொண்டால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

வீட்டின் வடக்குப் பகுதி குபேரர் குடியிருக்கும் திசையாகும். இந்த பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். மேலும் உங்கள் பண அலமாரி முழுவதும் செல்வம் சேர வேண்டுமானால், வீட்டின் வடக்கு-கிழக்கு பகுதியின் மேலே தண்ணீர் தொட்டியை அமைக்காதீர்கள். மேலும் வீட்டின் நுழைவாயிலில் ஏதேனும் ஒயர், கம்பம், குழி அல்லது பிற விஷயங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பணத்தை வைத்திருப்பதன் மூலம், பணம் அதிகம் சேர்வதோடு, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். முடிந்த வரை வீட்டின் வட-கிழக்கு பகுதியில் பூஜை அறையை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அவ்விடத்தில் நேர்மறை ஆற்றல் இன்னும் அதிகரித்து, செல்வமும் அதிகம் சேரும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

வீடு கோயில் போன்றது. அத்தகைய வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், வீட்டில் உள்ள அனைத்து குப்பைகளையும் அன்றாடம் வெளியேற்றிவிடுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

வீட்டில் மீன்களை வளர்ப்பதாலும், செல்வ வளம் பெருகும். எனவே முடிந்த அளவு சிறிய தொட்டியிலாவது மீன்களை வளர்த்து வாருங்கள். முக்கியமாக அவ்வப்போது தொட்டியில் உள்ள நீரை சுத்தம் செய்யுங்கள். மீன் தொடர்ச்சியாக நகரும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வமும் அதிகரிக்கும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

வீட்டுத் தரையை சுத்தம் செய்யும் போது, குப்பையை வீட்டின் வெளியே தள்ளாமல், உட்புறமாக தள்ளி அள்ளுங்கள். இதனால் வீட்டில் செலவுகள் குறையும். குப்பை கூடையை எப்போதும் மூடி வையுங்கள். இல்லாவிட்டால், வீட்டுச் செலவுகள் தான் அதிகரிக்கும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

தினமும் குறைந்தது 20 நிமிடமாவது படுக்கை அறை கதவை திறந்து வையுங்கள். இதனால் புத்துணர்ச்சியான ஆற்றல் வீட்டினுள் வந்து, மந்தமாக்கும் ஆற்றல் வெளியேற்றப்படும். வீட்டில் ஆற்றல் சீராக பாயாமல் இருந்தால், அதுவே செல்வ சேர்க்கைக்கு பெரும் இடையூறாக இருக்கும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

வீட்டு சுவற்றில் தொங்கவிடப்பட்டுள்ள கடிகாரங்கள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை பழுதாகிய நிலையில் இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அதுவே வீட்டில் செலவை அதிகரித்து, வரவைக் குறைக்கும்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

வீட்டின் முக்கிய பகுதியே நுழைவாயில் தான். அந்த நுழைவாயில் நீண்ட நடைபாதையின் முடிவில் இருந்தால், அந்த வழியில் பாயும் ஆற்றல் மிகவும் கடுமையானதாக இருக்கும். இதன் விளைவால் வீட்டில் செல்வம் சேர்வதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதன் தாக்கத்தை தாழ்வான இடத்திற்கு கீழே ஒரு ஆலை வைத்திருப்பதன் மூலம் தடுக்கலாம்.

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

வீடு நன்கு காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் சீராக பாய்ந்து, செல்வ சேர்க்கையை அதிகரிக்கும்.

டிப்ஸ் #10

டிப்ஸ் #10

தெய்வ சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை வீட்டில் வைக்கும் போது கவனமாக இருங்கள். அதுவும் வீட்டில் கணபதி சிலையை வைத்தால், அது தடைகளை உடைத்தெறிவதோடு, அழகாகவும் இருக்கும். ஆனால் இந்த சிலையை வட-கிழக்கு மூலையில் மட்டும் வைக்காதீர்கள்.

டிப்ஸ் #11

டிப்ஸ் #11

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை பணம் சேமித்து வைக்கும் இடத்தில், அப்பணத்தைப் பார்த்தவாறு வைப்பதன் மூலம், அதிலிருந்து விழும் பிம்பம் செல்வத்தை இன்னும் அதிகரிக்கும். மேலும் வீட்டில் எப்போதும் உடைந்த கண்ணாடியையோ, கடிகாரத்தையோ அல்லது இதர மின்சார பொருட்களையோ வைத்திருக்காதீர்கள்.

டிப்ஸ் #12

டிப்ஸ் #12

தென்மேற்கு மூலையை தான் குபேர மூலை என்று அழைப்பர். எனவே பணம் வைத்திருக்கும் பீரோவை வடக்கு பார்த்தவாறு தெற்கு மூலையில் வையுங்கள்.

டிப்ஸ் #13

டிப்ஸ் #13

எப்போதும் பண பீரோவை வடக்கு-கிழக்கு மூலையில் வைக்காதீர்கள். அது பண இழப்பை ஏற்படுத்தும். அதேப் போல் தெற்கு-கிழக்கு மற்றும் வடக்கு-மேற்கு மூலைகளிலும் வைக்காதீர்கள்.

டிப்ஸ் #14

டிப்ஸ் #14

எப்போதும் ஜன்னல் கதவை சுத்தமாக வைத்திருங்கள். அசுத்தமாக வைத்தால், அது வீட்டில் செல்வத்தை ஈர்க்காது.

டிப்ஸ் #15

டிப்ஸ் #15

வீட்டில் கட்டுப்பாடு இல்லாமல் பணம் செலவாகிறதா? அப்படியெனில் கழிவறையில் ஒரு செடியை வைத்து வளர்த்து வாருங்கள். இதனால் பணம் கையில் கரைவது தடுக்கப்படும். எப்படியெனில், செடியை கழிவறையில் வைக்கும் போது, அது நீரில் உள்ள ஆற்றலை உறிஞ்சி, மறுசுழற்சி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Vaastu Tips To Increase Wealth

Here are some vaastu tips to increase wealth. Read on to know...
Story first published: Friday, December 22, 2017, 11:30 [IST]
Subscribe Newsletter