For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களது கவனத்திற்கு வராத 2015 ஆம் ஆண்டு உலகில் நடந்த சில விஷயங்கள்!

By Maha
|

உலகில் பல பகுதிகளில் நடக்கும் அனைத்து விஷயங்களும், அனைவருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக ஒருவரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால், அதற்கு வினோதமான செயல்களில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு உலகின் சில பகுதிகளில் சில வித்தியாசமான சாதனைகள் படைக்கப்பட்டது. அதே சமயம் சில விசித்திர தடைகளும் 2015 ஆம் ஆண்டு உலகின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டன.

இங்கு பலரது கவனத்திற்கு வராத உலகில் நடந்த சில வினோதமான செயல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூம்பா நடனம்

ஜூம்பா நடனம்

2015 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் உள்ள மண்டலுயோங் என்னும் நகரத்தில் சுமார் 12,975 பேர் ஜூம்பா வகுப்பில் கலந்து சாதனை படைத்துள்ளனர்.

பேக்கான்

பேக்கான்

மேட் ஸ்டோனி என்பவர் 2015 ஆம் ஆண்டு 5 நிமிடத்தில் 182 பேக்கான் துண்டுகளை உட்கொண்டு புதிய சாதனைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

பிறந்தநாள் கேக்

பிறந்தநாள் கேக்

அதே வருடத்தில் மேட் ஸ்டோனி 8 நிமிடத்தில் 14.5 lb (2.3 lb = 1.04326 கிகி) பிறந்தநாள் கேக் உட்கொண்டு சாதனை படைத்தார்.

பனிச்சிலை

பனிச்சிலை

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சவுதி அரேபியா மதகுருமார்கள் பனிச்சிலை கட்டுவதை இஸ்லாமியமற்றதாகக் கூறி தடை செய்தது.

போர் வீரர்களின் தலைவன்

போர் வீரர்களின் தலைவன்

ரோம் நகரத்தில் உள்ள கொலோசீயும் பகுதியில் போர் வீர்ர்களின் தலைவன் போன்று உடை அணிவது குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வீரர்களாக முதலைகள்

பாதுகாப்பு வீரர்களாக முதலைகள்

இந்தோனேசியாவில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு வீரர்களாக முதலைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Things About 2015

Here are some of the stranger achievements of 2015 that you may have missed.
Story first published: Tuesday, January 5, 2016, 15:41 [IST]
Desktop Bottom Promotion