For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற 60,000 அரம்பையர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

அரம்பையர்கள் என்பவர்கள் மேலோகத்தில் / தேவலோகத்தில் சிவபெருமானின் உமையாள் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள் ஆவார்கள். இந்த அரம்பையர்கள் பாற்கடலை கடையும் போது தோன்றியவர்கள் எனவும் கூறப்படுகிறது. அரம்பை என்பவள் தான் இந்த அரம்பியர் கூட்டத்தின் தலைவியாக கூறப்படுகிறாள்.

அசாதாரணமான கோயில்களும் அதை சுற்றியிருக்கும் மர்மங்களும்!!

அரம்பையர்களை தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் கூற கூருகிறார்கள். பெரும்பாலும் இவர்களில் நாம் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்களை தான் நமது காவியங்களிலும், இலக்கியங்கள் மூலமும் அறிந்திருப்போம். ஆனால், இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகழ்பெற்ற அரம்பையர்கள்

புகழ்பெற்ற அரம்பையர்கள்

ரம்பை, ஊர்வசி, மேனகை மட்டுமின்றி தேவலோகத்தில் திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலரும் கூட புகழ்பெற்ற அரம்பையர்களாக திகழ்ந்தனர்.

அப்சரஸ் பெயர் காரணம்

அப்சரஸ் பெயர் காரணம்

அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. "அப்ஜம்" என்றால் தாமரை என்று பொருள், "சரஸ்" என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.

அப்சரஸ் பெயர் காரணம்

அப்சரஸ் பெயர் காரணம்

நீர்நிலையில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பியர்கள் என்பதால் இவர்கள் இந்த பெயர் பெற்றனர்.

தவம்

தவம்

தாங்கள் வசிக்க ஓர் லோகம் வேண்டும் எனவும், தாங்கள் என்றுமே இளமை வாய்ந்தவர்களாக தோற்றமளிக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்டி தவம் செய்தனர். அரம்பையர்களின் தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் வரத்தை அளித்து, அவர்களுக்காக அப்சரஸ் எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார்.

அரம்பையர்கள் குணங்கள்

அரம்பையர்கள் குணங்கள்

பார்வதிக்கு துணையாக, தோழியாக இருப்பது மட்டுமின்றி, சிவனுக்கு உரிய பூஜைகளும் செய்து வந்தனர். வசீகரமான வடிவும், அழகும் கொண்ட அரம்பையர்கள், யாழ் இசை மீட்டுவதில் பெரும் திறன் கொண்டவர்களாக திகழ்ந்தனர்.

அரம்பையர்கள் குணங்கள்

அரம்பையர்கள் குணங்கள்

பாடல்கள் படுவதிலும் திறன் வாய்ந்து விளங்கினர் அரம்பையர்கள். மேலும், நடனக் கலையிலும் வல்லமை படைத்தவர்களாக இந்த பேரழகிகள் இருந்தார்கள் என்றும் அறியப்படுகிறது.

வழிபடுதல்

வழிபடுதல்

தேவலோக கன்னிகளான அரம்பையர்களை வழிபட்டால், இளமையும், செல்வமும், இன்பமும் பெருகும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவர்களை வழிப்படும் முறை பழங்காலத்தில் இருந்து வந்துள்ளது. வட இந்தியாவில் இருக்கும் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களையும் சேர்த்து தான் வழிப்படுகின்றனர்.

தலங்கள்

தலங்கள்

திருப்பைஞ்ஞீலி - இவ்விடத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவியதால், இன்றளவும் திருப்பைஞ்ஞீலி வாழைக்கு தலவிருட்சமாக போற்றப்படுகிறது.

தலங்கள்

தலங்கள்

காசி - இங்கு மேனகை எனும் அரம்பை சிவபெருமானை வழிபட்டு தனது சாபத்தினை போக்கிக் கொண்டார்.

தலங்கள்

தலங்கள்

திருக்கழுக்குன்றம் - இங்கு திலோத்துமை எனும் அரம்பை சிவபெருமானை வழிபாடு செய்தார்.

தலங்கள்

தலங்கள்

மேலும், திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களில் அரம்பையர்கள் வழிபாடு செய்த தலங்களாக அறியப்படுகின்றன.

இலக்கியங்களில்

இலக்கியங்களில்

குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்

இலக்கியங்களில்

இலக்கியங்களில்

குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About Devaloga Arambaiyargal

Do You These Things About Devaloga Arambaiyargal? read here in tamil.
Desktop Bottom Promotion