'இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் குறித்து உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கிரிக்கெட்டில் எப்படி சச்சின் டெண்டுல்கரோ, அதேப் போல் இசை என்றால் அது ஏ.ஆர். ரகுமான் தான். இவர் மிகவும் எளிமையானவர் மற்றும் பொறுமைசாலி. ஏ.ஆர். ரகுமானை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமானால், அது மேதையாக தான் இருக்க வேண்டும். இத்தகையவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தார்.

ஏ.ஆர். ரகுமானின் இசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இசைக் கடலில் மூழ்க வைக்கும். இசையை பிடிக்காதவர்கள் ஏ. ஆர். ரகுமானின் இசையைக் கேட்டாலே அடிமையாகிவிடுவார்கள். அந்த அளவில் இவரது இசை மனதில் நல்ல தாக்கத்தை உண்டாக்கும். இவர் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த ஓர் இசைப்புயல்.

இன்று தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் குறித்து உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

மற்ற மாமேதைகளைப் போல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் பள்ளிப் பருவத்தில் பிரச்சனைகளை சந்தித்தவர் தான். அதுவும் தனது 15 ஆவது வயதில், பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தினால், குறுகிய வருகையின் காரணமாக அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாராம்.

ரகுமான் ஓர் இந்து

ரகுமான் ஓர் இந்து

ஏ.ஆர். ரகுமான் பிறப்பில் ஓர் இந்து. இவரது இயற்பெயர் திலீப்குமார். தன் தங்கையின் உயிரைப் பறிக்கும் படியான நோயில் இருந்து இஸ்லாமியர் ஒருவர் முற்றிலும் குணமடையச் செய்ததால், இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.

சிறுவயதில் இசைத்துறையில் நுழைந்த ரகுமான்

சிறுவயதில் இசைத்துறையில் நுழைந்த ரகுமான்

ஏ.ஆர். ரகுமான் தனது 20 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்தார். இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.

ரோஜா ஓர் திருப்புமுனை

ரோஜா ஓர் திருப்புமுனை

1992 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் படமான ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தது, அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரோஜா படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானதோடு, தனது முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றார்.

ரகுமானின் பிறந்தநாள்

ரகுமானின் பிறந்தநாள்

ஏ.ஆர். ரகுமானின் பிறந்தநாளும், அவரது மகன் அமீனின் பிறந்தநாளும் ஒரே நாள்.

தூர்தர்ஷன்

தூர்தர்ஷன்

1980 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் டிவி நடத்திய குழந்தைகளுக்கான 'ஒன்டர் பலூன்' என்னும் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீபோர்டுகளை வாசித்து, அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

நெருங்கிய நண்பர்

நெருங்கிய நண்பர்

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு நண்பர் கூட்டம் அதிகம் இல்லை. இருப்பினும் இவரது மிகவும் நெருங்கிய நண்பர் மணிரத்தினம் அவர்கள் தானாம்.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு மிகவும் சிறப்பாக இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். அதுவும் அந்த விருதைப் பெற்றப் பின், அந்த ஆஸ்கர் விருது மேடையில் தன் தாய்மொழியான தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அவர் அடிக்கடி உச்சரிப்பதை சொல்லி, நான் தமிழன் என்பதை பெருமையுடன் வெளிக்காட்டினார். ஆசியாவிலேயே ஒரே வருடத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற முதல் மனிதர் இவரேயாவார்.

விருதுகள்

விருதுகள்

முதன் முதலாக கோல்டன் குளோப் விருது மற்றும் பாஃப்டா விருது பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர். ரகுமான் ஆவார். மேலும் இவர் 4 தேசிய விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 பிலிம்பேர் சவுத் விருதுகளையும் பெற்றுள்ளார்.

பத்ம பூஷன்

பத்ம பூஷன்

இந்தியாவிற்கு அதிக அளவில் பெருமைத் தேடித் தந்ததால், இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Things You Didn’t Know About A. R. Rahman

If there is one word that can be used to describe A. R. Rahman, it has to be genius. He is to music what Sachin Tendulkar is to cricket. Here are 10 lesser known facts about this legendary musical maestro.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter