For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகள்!

By Maha
|

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஓர் அழகான மாநிலம் தான் ஜம்மு-காஷ்மீர். இந்தியாவிலேயே மிகவும் அற்புதமான இடம் என்றாலும் அது காஷ்மீர் தான். இதற்கு பனிகள் நிறைந்த மலைப்பகுதியான இமயமலைத் தொடரில் அமைந்திருப்பதும் ஓர் காரணம்.

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

மேலும் இம்மாதிரியான ஓர் அற்புதமான இடத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது எனலாம். இதன் அழகை வர்ணிக்கும் பலருக்கும், இந்த ஜம்மு-காஷ்மீர் குறித்த சில விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அழகிய ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு தலைநகரங்கள்

இரண்டு தலைநகரங்கள்

ஜம்மு-காஷ்மீருக்கு இரு வேறு தலைநகரங்கள் உள்ளன. அதில் கோடையில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இருக்கும்.

கல்வியறிவு

கல்வியறிவு

இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட அதிகமான அளவில் காஷ்மீரில் கல்வியறிவு கொண்டவர்களின் விகிதம் அதிகம் என்பது தெரியுமா!

ஆர்டிக்கிள் 370

ஆர்டிக்கிள் 370

ஆர்டிக்கிள் 370 என்னும் சிறப்புச் சட்டம் காஷ்மீரில் மட்டும் உள்ளது. அது என்னவெனில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இம்மாநிலத்தில் நிலங்களை வாங்க முடியாது.

குடியுரிமை ரத்து செய்யப்படும்

குடியுரிமை ரத்து செய்யப்படும்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால், அம்மாநிலத்தின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும். ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்தால், நிலம் வாங்க முடியும்.

பல்வேறு மத மக்கள்

பல்வேறு மத மக்கள்

இம்மாநிலத்தின் காஷ்மீர் பகுதியில் முஸ்லீம்களும், ஜம்மு பகுதியில் இந்துக்களும், லடாக் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் உள்ளனர்.

எல்லைகள்

எல்லைகள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் சீனா மற்றும் பாகிஸ்தானை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இருவேறு நாடுகளின் எல்லைகளைக் கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது ஜம்மு-காஷ்மீர் தான்.

புவியின் சொர்க்கம்

புவியின் சொர்க்கம்

மிக அழகிய பள்ளத்தாக்குகளையும், ஏரிகளையும் கொண்டுள்ளதால், காஷ்மீர் புவியின் சொர்க்கம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதில் இமயமலையில் இருந்து பாயும் மிகப்பெரிய ஜீலம் ஆறு காஷ்மீர் வழியாக பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிக்கொடி

தனிக்கொடி

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கு இல்லாத ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது. அது இம்மாநிலத்திற்கு என்று தனிக்கொடி இருப்பது.

சட்டமன்ற பதவிக்காலம்

சட்டமன்ற பதவிக்காலம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். ஆனால் ஜம்மு-காஷ்மீரிலோ சட்டமன்ற பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

சுய ஆட்சி

சுய ஆட்சி

இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சட்டப்பிரிவின் படி, இம்மாநிலம் சுய ஆட்சியைக் கொண்டுள்ளது. அதில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி இம்மாநிலத்தில் செல்லாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Facts About Jammu And Kashmir

Here are amazing facts about jammu and Kashmir that you must know. Know the Surprising Facts About The Heaven On Earth, Kashmir. Read on to know more...
Desktop Bottom Promotion