தங்கள் பெயரில் கிரகங்கள் கொண்டுள்ள 7 இந்தியர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பலராலும் இதை நம்ப முடியாமல் போகலாம், ஆனால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். இந்தியர்களின் பெயரிலும் சில கிரகங்கள் நமது பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களில் பலர் பள்ளி செல்லும் வயதிலேயே உலக அளவில் சாதனை புரிந்தவர்கள், பெரும் சாதனையாளர்களை திரும்பி பார்க்க வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பற்றி பொய்யாக பரப்பப்பட்டு இன்றுவரை உண்மையென நம்பப்படும் 10 விஷயங்கள்!!!

நாம் அனைவரும் கடந்து வந்த பாதை தான் ஆனால், ஏதோ ஒரு தருணத்தில் இவர்கள் கண்ட அந்த செயல் ஏற்படுத்திய பெரும் தாக்கம் தான் சில கிரகங்களுக்கு இவர்களது பெயரிடப்பட்டுள்ளதன் காரணம். இனி, எந்தெந்த காரியங்களுக்காக இவர்களது பெயர் கிரகங்களுக்கு சூட்டப்பட்டது என காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹம்சா பத்மனாபன்

ஹம்சா பத்மனாபன்

இவரது பதினாறுவது வயதில் சிறிய கிரகமான 21575-க்கு "ஹம்சா" என பெயரிடப்பட்டது. இவர் ஃபெர்குசன் கல்லூரியில் பி.எஸ்.சி படித்துக் கொண்டிருக்கும் போது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் லிங்கன் ஆய்வகத்தில் இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பிரசண்டேசன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்சா பத்மனாபன்

ஹம்சா பத்மனாபன்

இப்போது 21 வயதாகும் ஹம்சா பத்மனாபன், புனே பல்கலைகழகத்தில் இயற்பியல் முதுகலை பட்டம் படித்து வருகிறார். இதற்கு பிறகு இவர் முனைவர் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளார்.

சைனுதீன் பட்டாழி (Sainudeen Pattazhy)

சைனுதீன் பட்டாழி (Sainudeen Pattazhy)

சைனுதீன் பட்டாழி கேரளத்தை சேர்ந்த ஓர் விலங்கியல் பேராசிரியர் ஆவார். சிரிய கிரகமான 5172 No CD4-க்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் மொபைல் போன் டவர்களால் ஏற்படும் உடல்நலத் தாக்கங்கள் இயற்கை சுற்றுசூழல் மற்றும் மரங்கள் சார்த ஆராய்ச்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு ஜெயப்பிரகாஷ்

விஷ்ணு ஜெயப்பிரகாஷ்

கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் 12வது படித்து வந்த மாணவர் தான் இந்த விஷ்ணு ஜெயப்பிரகாஷ். இவர், மிக மலிவான மாட்டு சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் எரிபொருள் குறித்து செயல் விளக்கம் அளித்துள்ளார். 25620 எனும் சிறிய கிரகத்திற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய விவசாய கிராமங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் உண்டாக்கி தர திட்டமிட்டுள்ளார்.

அனீஸ் முகர்ஜி

அனீஸ் முகர்ஜி

அனீஸ் முகர்ஜி மற்றும் தபார்கியா சர்க்கார் 16 வயதில் பாட்டில்களால் ஏற்படும் பெரும் சேதங்களை கவனித்தனர். இவர்கள் இருவரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய எளிதாக அழியக்கூடிய ஊசி மற்றும் உறுதியான பாட்டில் மூடிகளை டிசைன் செய்தனர்.

அனீஸ் முகர்ஜி

அனீஸ் முகர்ஜி

இதற்காக 2000 AH52 எனும் கிரகத்தின் பெயர் 25629 முகர்ஜி எனவும், 2000 AT53 எனும் கிரகதின் பெயர் 25630 சர்க்கார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அக்ஷட் சிங்கள் (Akshat Singhal)

அக்ஷட் சிங்கள் (Akshat Singhal)

அக்ஷட் கணினியில் குறிப்பிட்ட கோப்புகள் கலைந்து காணப்படுவதைக் கண்டு மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார். அதனால், இவர் தானாக பிரிவுகளுக்கு ஏற்ப கோப்புகள் பிரித்து ஒழுங்கு / வரிசைப்படுதப்படும் முறையை மேம்படுத்தினார். இதற்காக ஒரு கிரகத்திற்கு 12599 சிங்கள் எனும் பெயர் சூட்டப்பட்டது.

விஸ்வநாதன் ஆனந்த

விஸ்வநாதன் ஆனந்த

மார்ஸ் மற்றும் ஜுபிட்டர் மத்தியில் உள்ள சுற்றுப்பாதையில் ஒரு சிறிய கிரகம் கண்டறியப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த கென்சோ சுஸுக்கி என்பவர் இதைக் கண்டறிந்தார். எப்போதும் கண்டரிந்தவரின் பெயர் தான் சூட்டப்படும்.

விஸ்வநாதன் ஆனந்த

விஸ்வநாதன் ஆனந்த

ஆனால், பல ஆண்டுகள் கழித்தும் பெயர் சூட்டப்படாமல் இருந்தததால், கமிட்டியை சேர்ந்தவர்கள் பெயர் சூட்ட கூறப்பட்டது. கமிட்டியில் இருந்து மைக்கல் ருடன்கோ விஸ்வநாதன் ஆனந்தின் ரசிகர் என்பதால் "விஷியானந்" என அந்த கிரகத்திற்கு பெயர் சூட்டினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Indians Who Have Planets Named After Them

Seven Indians Who Have Planets Named After Them, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter