Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ஃபேஸ்புக் மூலம் பிரபலமடைந்த 9 சாமானிய மனிதர்கள்!
ஃபேஸ்புக் என்பது இவ்வளவு பெரிதாகும் என மார்க்கே முதலில் எண்ணியதில்லை. ஆனால், இது இன்று பல சாமானிய மக்களை சூப்பர்ஸ்டார் ஆக்கிக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு வழங்கும் மேடையாக உருவாகி வருகிறது.
மீம்ஸ் போடுறது எல்லாம் ஒரு வேலையா? டப்ஷ்மேஷ் பண்றது எல்லாம் ஒரு பொழப்பா? என கேள்வி கேட்கும் நபரா நீங்கள்? இவை தான் இன்று பல பேரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பிரபலமாக்கி வருகிறது.

ஃபேஸ்புக் லெஜெண்ட்ஸ் என சிலரை ஃபேஸ்புக்கில் குறிப்பிடும் வழக்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால் இந்த ஃபேஸ்புக் சூப்பர்ஸ்டார்களை பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம்...

மிர்னலினி ரவி!
எலக்ட்ரானிக் மற்றும் கமியூனிக்கேஷன் என்ஜினியரிங் பயின்றுள்ள மிர்னலினி ரவி, இவரது கியூட் டப்ஷ்மேஷ் வீடியோ மூலம் பெருமளவு சமூக தளங்களில் பிரபலமடைந்தார்.
மிர்னலினி ரவி!

மண்ணை சாதிக்!
சுய தொழில் செய்து வரும் மண்ணை சாதிக். முதலில் ஒரு புரட்சி வேங்கையாக வெடிக்கிறேன் என கிளம்பி. இப்போது முழு நேர கேளிக்கை நட்சத்திரம் ஆகிவிட்டார்.
மண்ணை சாதிக்!

பிரகின்ஸ்டா!
பிரகதி எனும் இந்த சுட்டி பெண் கொள்ளை அழகு. வைகைப்புயல் வைவேலுவை டப்ஷேம்ஷ் செய்வதில் ஜகஜால கில்லாடி இவர்.
பிரகின்ஸ்டா!

கல்பனா பால்ஸ்!
தமிழ் திரைப்பட பாடல்களை தனக்கான தனி பாணியில் பாடியே ஃபேஸ்புக்கில் பெரும் புகழ் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
கல்பனா பால்ஸ்!

தீபக் பரமேஷ்!
இவர் ஒரு விஸ்காம் மாணவர். உலகநாயகன் கமல் போல டப்ஷ்மேஷ் செய்து முகநூலில் புகழடைந்தார். இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
தீபக் பரமேஷ்!

தார்மிக் லீ!
இவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர். எம்.பி.எ பட்டதாரி. சிரிப்பூட்டும் வகையில் தற்போதைய நிலவரத்தில் டிரென்ட் அடிக்கும் செய்திகளை டப்ஷ்மேஷ் செய்து கலக்கும் நபர்.
தார்மிக் லீ!

ராஜ் எம்.ஆர்.கே!
ரஜினி போலவே டப்ஷ்மேஷ் செய்யும் இவர் ஒரு என்ஜினியரிங் படித்தவர். முக சாயலும், ஹேர் ஸ்டைலும் கிட்டத்தட்ட ரஜினி போலவே இருப்பதால், இவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
ராஜ் எம்.ஆர்.கே!

ஷாரு!
திடீரென முளைத்து பல ஃபேன் பக்கங்கள் உருவாக காரணமானார். ஏழெட்டு வீடியோக்கள் தான் வெளியிட்டார். எதிர்பாராத வரவேற்ப்பால் ஒதுங்கி விட்டாரோ எனவோ.
ஷாரு!

தமிழச்சி!
இவர் புரட்சி பேசும் நபர். அடிக்கடி வில்லங்கமாக பேசி பரப்பரப்பை ஏற்படுத்துபவர். சமீபத்தில் சுவாதி கொலை மற்றும் தமிழக முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதால் இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.
தமிழச்சி!



Click it and Unblock the Notifications
