ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பார்த்து வாங்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பேருக்கு தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்துவிட்டது. இதற்கு இன்று பல புதிய புதிய நோய்கள் வருவது தான் காரணம். குறிப்பாக ஜங்க் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் தான் பல நோய்கள் உடலில் வருகின்றன.

இதற்காக பலரும் கடைகளில் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என்று விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். கடைகளில் விற்கப்படும் ஆர்கானிக் உணவுகள் அனைத்துமே உண்மையிலேயே ஆர்கானி உணவுகள் இல்லை.

“Organic” Foods From China That Are FULL Of Deadly Toxins

அதிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்கும். எனவே விலை குறைவாக உள்ளது என்று விலை மலிவான உணவுப் பொருட்களை வாங்காமல், சற்று உயர்தரமான உணவுப் பொருட்களை வாங்குங்கள். முக்கியமாக அந்த உணவுப் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாததாக இருக்க வேண்டும்.

சீன மக்கள் உணவுகளில் பல கெமிக்கல்கள் மற்றும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு எந்த உணவுப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது என கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை அந்த உணவுப் பொருட்களை வாங்கும் போது கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

அமெரிக்காவில் விற்கப்படும் சுமார் 80% டிலேபியா மீன்கள் மற்றும் 50% பன்னா மீன்கள் (Cod) சீனாவில் உள்ள மீன் பண்ணைகளில் இருந்து வருகிறது.

சிக்கன்

சிக்கன்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிக்கன்களில் ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்டெராய்டு ஊசிகளை சிக்கனுக்கு போட்டால், சிக்கனின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதோடு, நல்ல எடையுடனும் இருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

காளான்

காளான்

சுமார் 34% பதப்படுத்தப்பட்ட காளான்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே காளானை வாங்கும் போது கவனமாக இருங்கள்.

அரிசி

அரிசி

சீனாவில் ரெசின் மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு அரிசி தயாரிக்கப்பட்டு, உலகின் பல பகுதிகளுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆப்பிள்களில் கூட சீனர்கள் எதையேனும் கெமிக்கல்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.

பூண்டு

பூண்டு

அமெரிக்காவில் விற்கப்படும் சுமார் மூன்றில் ஒரு பங்கு பூண்டு சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

உப்பு

உப்பு

சீனா உப்புக்களையும் தயாரித்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்கிறது.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

சீனாவில் இருந்து வரும் சில பச்சை பட்டாணிகள், சோயா, பச்சை சாயம் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு பல பகுதிகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

மிளகு

மிளகு

சீன விற்பனையாளர் மண் செதில்களை மிளகு போன்று செய்து, விற்க முயன்றது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே மக்களே உணவுப் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

“Organic” Foods From China That Are FULL Of Deadly Toxins

In this post we are going to present you the foods that you need to avoid in case you buy Chinese food. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter