திரையில் சிறந்த காதல் ஜோடியாக திகழ்ந்த தமிழ் சினிமா பிரபலங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ரியல் வாழ்க்கை காதல் ஜோடியாக இருப்பது இயல்பு. ஆனால், அனைவராலும் ரீல் வாழ்க்கையில் சிறந்த காதல் ஜோடியாக பிரதிபலிக்க முடியாது. எண்ணற்ற நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தாலும் கூட ஒரு சில ஜோடிகளை காணும் போது தான், "ச்சே இவங்க நிஜமாவே ஜோடியாக இருந்தா நல்லா இருக்கும்-ல" என தோன்றும்.

அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து இன்றைய சிம்பு, சூர்யா வரை பெரும்பாலன் நடிகர்கள் ஒருசில நாயகிகளுடன் இணையும் போது மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு ஏற்படும். அவ்வாறு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்.ஜி,ஆர் - சரோஜா தேவி

எம்.ஜி,ஆர் - சரோஜா தேவி

1958 - 1967க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே ஏறத்தாழ 25 படங்களுக்கு மேல் இந்த ஜோடி நடித்துள்ளது. இதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி - பத்மினி

சிவாஜி - பத்மினி

இவர்கள் ரீல் வாழ்க்கையில் சிறந்த காதல் ஜோடி என்பதற்கு தில்லான மோகனாம்பாள் திரைப்படம் ஒன்றே போதுமான சான்றாகும். இவர்கள் மத்தியிலான காதல் காட்சிகள் எந்த பிழையும் இன்றி காட்சிகளாக அமையும்.

ஜெமினி கணேஷன் - சாவித்திரி

ஜெமினி கணேஷன் - சாவித்திரி

திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் கூட காதல் வாழ்க்கையில் இணைந்தவர்கள் தான் இந்த ஜோடி. இவர்கள் இருவரும் 1954ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். ஜெமினிக்கு சாவித்திரி இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி - ஸ்ரீப்ரியா

ரஜினி - ஸ்ரீப்ரியா

எவர் கிரீன் ஜோடி என்று கோலிவுட்டில் புகழப்பட்ட ஜோடி இவர்கள். இந்த ஜோடி 28படங்களில் நடித்துள்ளனர். பில்லா, அன்னை ஓர் ஆலயம், பொல்லாதவன், ஆடுபுலி ஆட்டம் போன்றவை இவர்களது நடிப்பில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற படங்கள் ஆகும்.

கமல் - ஸ்ரீதேவி

கமல் - ஸ்ரீதேவி

இவர்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில் நடிகர்களாக தங்கள் பயணத்தை தொடங்கியவர்கள். பதினாறு வயதினிலே படத்தில் தொடங்கி மூன்றாம் பிறை, வாழ்வே மாயம் என பல படங்கள் இவர்களது கூட்டணியில் வெற்றிபெற்றன. இவர்கள் மத்தியிலான கெமிஸ்ட்ரிக்கு ஈடாக வேறு யாரும் இன்றளவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கார்த்திக் - ரேவதி

கார்த்திக் - ரேவதி

கார்த்திக் - வேவதி தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தனர். இவர்கள் இருவருமே நகைச்சுவையிலும் சிறந்து கலக்குபவர்கள் என்பதால் இவர்களது காதல் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

பிரபு - குஷ்பூ

பிரபு - குஷ்பூ

கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் கூட நன்றாக இருக்கும் என தமிழக ரசிகர்கள் விரும்பினர். அந்தளவு காதல் கதாப்பதிரங்களில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய ஜோடி இவர்கள்.

விஜய் - சிம்ரன்

விஜய் - சிம்ரன்

90-களின் இறுதி மற்றும் 2000-தொடக்கத்தில் இந்த ஜோடி ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. துள்ளத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியில் பெரும் வெற்றியை பெற்றன.

அஜித் - ஷாலினி

அஜித் - ஷாலினி

ரீல் வாழ்க்கை, ரியல் வாழ்க்கை என இரண்டிலுமே செம்மையாக லவ்விய ஜோடி இவர்கள். அமர்க்களம் படத்தில் தொடங்கிய இவர்களது காதல் இன்றளவும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தொடங்கிய இவர்களது பயணம், காக்க காக்க படத்தின் போது காதலாக மலர்ந்தது. கடைசியாக இவர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்தனர். இன்றும் கூட இந்த ஜோடியை பொறாமையுடன் பார்ப்பவர்கள் ஏராளம்.

சிம்பு - த்ரிஷா

சிம்பு - த்ரிஷா

இவர்கள் நடித்த அலை என்ற படம் படுதோல்வி அடைந்த போதிலும் கூட, விண்ணைத்தாண்டி வருவாயா ஒன்று நூற்றாண்டுகள் வரை ரசிகர்களின் நெஞ்சில் நிற்கும் படமாக அமைந்தது. இதன் மூலமாக பெருமளவு ஈர்ப்படி ஏற்படுத்தியது இந்த ஜோடி.

ஸ்ரீகாந்த் - சினேகா

ஸ்ரீகாந்த் - சினேகா

ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த மற்றுமொரு ரீல் வாழ்க்கை காதல் ஜோடி இவர்கள். இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்ற புரளிகளும் கூட பரவின.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Onscreen Romantic Couples Of Tamil Cinema

These Celebrities are considered as Onscreen Romantic Couples Of Tamil Cinema. Take a look.
Story first published: Tuesday, January 12, 2016, 10:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter