வினோதமான முறையில் மரணத்தைத் தழுவிய மனிதர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கேலி, கிண்டல் என்பது அனைவரும் செய்யும் ஒன்று தான். ஆனால் சில சமயங்களில் அதுவே மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பது தெரியுமா? அனைத்து வேடிக்கையான நடவடிக்கைகளும் இறப்பிற்கு வழிவகுக்காவிட்டாலும், சில நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா?

அந்த வகையில் இங்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் இறப்பை சந்தித்த சிலரைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏதோ ஒன்று செய்ய முயற்சித்து, அதன் விளைவால் இறப்பை பரிசாகப் பெற்றவர்கள். சரி, இப்போது அவர்களைப் பற்றி காண்போமா...!

தமிழ் சினிமாவில் திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர், நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவுக்கு அதிகமாக பேஸ்ட்ரி சாப்பிட்டதால் மரணம்

அளவுக்கு அதிகமாக பேஸ்ட்ரி சாப்பிட்டதால் மரணம்

1771 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் ஸ்வீடன் நாட்டு அரசர் அடால்ப் பிரடெரிக் 14 கிண்ணங்கள் க்ரீம் நிறைந்த பேஸ்ட்ரியை உட்கொண்டு, அதனால் அவரது செரிமான மண்டலம் செயலிழந்து, அப்போதே மரணத்தைத் தழுவினார்.

Image Courtesy

நீளமான ஸ்கார்ப் கட்டி மரணம்

நீளமான ஸ்கார்ப் கட்டி மரணம்

நடன கலைஞரான இசதோரா டங்கன் அழகான மற்றும் நீளமான ஸ்கார்ப்கை கழுத்தைச் சுற்றி கட்டியிருந்தார். எதிர்பாராதவிதமாக ஸ்போர்ட்ஸ் காரில் அமர்ந்து செல்லும் போது, அந்த நீளமான ஸ்கார்ப் அந்த காரின் சக்கரத்தில் மாட்டி, கழுத்து நெரிக்கப்பட்டு மற்றும் கழுத்து உடைந்து மரணத்தை தழுவினார்.

Image Courtesy

செக்வேயில் இருந்து குதித்து மரணம்

செக்வேயில் இருந்து குதித்து மரணம்

ஜேம்ஸ் டபுள்யூ. ஹெசெல்டன் என்பவர் செக்வேயின் உரிமையாளர். இவர் ஒருமுறை தனது செக்வேயை பயன்படுத்தும் போது, எதிர்பாராதவிதமாக குன்றில் இருந்து குதித்து, மரணித்துவிட்டார்.

Image Courtesy

மிகுந்த சப்தத்துடன் பாட்டு கேட்டு மரணம்

மிகுந்த சப்தத்துடன் பாட்டு கேட்டு மரணம்

ஏசாயா ஓடினோவிற்கு நடந்து கொண்டே இசையை கேட்பது என்பது மிகவும் பிடித்த செயல். ஒருமுறை அவர் மிகுந்த சப்தத்தில் பாட்டு கேட்டு சாலையில் நடந்து கொண்டிருந்ததால், தன் தலைக்கு மேல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின் சப்தம் அவருக்கு கேட்காமல் போனதால் , அவரும் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானி மற்றும் பயணிகளுடன் மரணமடைய நேர்ந்தது.

Image Courtesy

ஈஃபிள் டவரில் இருந்து குதித்து மரணம்

ஈஃபிள் டவரில் இருந்து குதித்து மரணம்

1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, பிரன்ஸ் ரெய்சல்ட் என்னும் பிரெஞ்சு டைலர், அணியக்கூடியவாறான பாராசூட் உடையை தயாரித்து, அதை ஈஃபிள் டவரில் இருந்து குதித்து சோதிக்கும் போது, மரணத்தை தழுவினார்.

Image Courtesy

அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடி மரணம்

அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடி மரணம்

லீ சேயுங் என்பவர் வீடியோ கேமிற்கு அடிமையாகி, ஒரு நாள் தன் வேலையையும் விட்டுவிட்டு, காபி கடை ஒன்றில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் தொடர்ந்து 50 மணிநேரம் இடைவேளை இல்லாமல், கழிவறை செல்ல மற்றும் குட்டி தூக்கத்திற்கு மட்டும் இடைவேளை எடுத்துக் கொண்டு, மற்ற நேரங்களில் வீடியோ கேம் விளையாடினார். அப்போது திடீரென்று மாரடைப்பு வந்ததோடு, உடல் வறட்சி அடைந்ததால் மரணமடைந்தார்.

Image Courtesy

செக்ஸ் மற்றும் வயாகரா அதிகம் எடுத்ததால் மரணம்

செக்ஸ் மற்றும் வயாகரா அதிகம் எடுத்ததால் மரணம்

2 பெண்கள் 28 வயதைக் கொண்ட செர்ஜி என்பவரிடம் ஒரு நாள் முழுவதும் எங்களுடன் படுக்கையில் இருக்க முடியாது என்று கூறி 3000 டாலர் பந்தயம் கட்டினார்கள். அந்த பந்தயத்தை ஏற்றுக் கொண்டு 1 பாட்டில் வயாகராவை எடுத்துக் கொண்ட அவர், 12 மணிநேரம் கழித்து மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Bizarre Deaths

Here in this article, we are here to share the most stupidest way people have died. Find out more about these unusual deaths people have faced.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter