Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த இடத்தில் குப்பைத்தொட்டி இருந்தால் ஒரு ரூபாய் கூட தங்காதாம்
Vastu Tips in Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் உங்கள் வீட்டின் வாஸ்துவை பாதிக்கும். சில பொருட்கள் தவறான இடத்தில் வைக்கப்பட்டால் அது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், துரதிர்ஷ்டமும் அதிகரிக்கும். அப்படி உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள்தான் குப்பைத்தொட்டி.
உங்கள் வீட்டில் குப்பைத்தொட்டி வைக்கப்படும் இடமானது, உங்கள் அதிர்ஷ்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் குப்பைத்தொட்டி சரியான திசையில் வைக்கப்படாவிட்டால், அது உங்கள் குடும்பத்தில் வறுமைக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும். வீட்டைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் என்பதற்காக, நாம் குப்பைத்தொட்டியை நினைத்த இடத்தில் வைத்துவிடுகிறோம், இது மிகவும் தவறான ஒன்றாகும். வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க உங்கள் வீட்டில் சில இடங்களில் குப்பைத்தொட்டியை வைக்கக்கூடாது. அவை எந்தெந்த இடங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் நுழைவாயில்
பெரும்பாலான வீடுகளில் மக்கள் இந்த தவறை செய்கிறார்கள், பொதுவாக மக்கள் குப்பைத் தொட்டியைப் பிரதான வாசலுக்கு மிக அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது ஒரு பெரும் தவறாகக் கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியாகவே லட்சுமி தேவியும், நேர்மறை ஆற்றலும் நம் வீட்டிற்குள் நுழைகின்றன. வீட்டின் நுழைவாயிலில் குப்பைத் தொட்டியை வைப்பது லட்சுமி தேவியை அதிருப்தியடையச் செய்வதுடன், வீட்டிற்குள் அதிர்ஷ்டம் நுழைவதையும் தடுத்துவிடும். எனவே இந்த இடத்தில் குப்பைத் தொட்டியை வைப்பதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தென்கிழக்கு திசை
வாஸ்து படி தென்கிழக்கு திசையானது நெருப்பு மற்றும் செல்வத்திற்குரிய திசையாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் குப்பைத்தொட்டி வைத்திதிருப்பது, வீட்டிற்கு வரும் பணவரவை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இது தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு நிதிசார் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இது வீட்டில் உள்ள பெண்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது. பொருளாதாரரீதியான சிக்கல்களைத் தவிர்க்க, குப்பைத்தொட்டியை இந்த இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது.
வடகிழக்கு திசை
வீட்டின் வடகிழக்கு மூலை ஈசானி மூலை என்று அழைக்கப்படுகிறது; இது தெய்வங்களின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது. ஒரு பூஜையறையையோ அல்லது கடவுளின் சிலையையோ வைப்பதற்கு வீட்டின் வடகிழக்கு மூலையே மிகவும் மங்களகரமானது என்று வாஸ்து சாஸ்திர கூறுகிறது. இந்த திசையில் குப்பைத் தொட்டியை வைப்பது உங்கள் வீட்டில் வறுமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த திசையில் குப்பைகளைச் சேமித்து வைப்பது மனக்குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், குழந்தைகளின் கல்வியில் தடைகளை உண்டாக்கும் என்றும், வீட்டின் ஐஸ்வர்யத்தையும், செழிப்பையும் தடுத்து நிறுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கிழக்கு திசை
இந்தத் திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது, உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகள் வருவதைத் தடுக்கிறது. மேலும், அது உங்களைத் தனிமையாகவும் மற்றவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவராகவும் உணர வைக்கும். இதனால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து, உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட வைக்கும்.
எந்த திசையில் வைப்பது நல்லது?
தென்மேற்கு
தென்மேற்கு திசை நிலைத்தன்மை மற்றும் பூமியின் ஆற்றலுடன் தொடர்புடையது. எனவே எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கு இதுவே சிறந்த திசையாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது வீட்டில் சமநிலையான சூழலைப் பராமரிக்கிறது.
தெற்கு
சுத்தம் செய்யும் பொருட்களை பராமரிக்கவும், கழிவுகளைச் சேகரிக்கவும் தெற்கு திசை சிறந்த திசையாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, குப்பைத்தொட்டி வைப்பதற்கான நடுநிலையான திசையாக தெற்கு திசை உள்ளது.
வடமேற்கு
பஞ்சபூதங்களில் காற்றின் இயக்கத்துடன் தொடர்புடைய இந்த திசை, எதிர்மறை ஆற்றலையும் கழிவுகளையும் சிரமமின்றி அகற்ற உதவுகிறது. இது தகவல் தொடர்பு மற்றும் உறவுகளை வளர்க்கும் ஒரு ஒளிமயமான சூழலைப் பராமரிக்கிறது. எனவே உங்கள் குப்பைத்தொட்டியை இந்த இடத்தில் வைப்பது நல்லது.



Click it and Unblock the Notifications

