ஈபிள் டவரையே இரண்டு முறை விற்ற ஜகஜ்ஜால கில்லாடி பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

விக்டர் லாஸ்ட்டிங் பற்றி படிக்கும் போது தான் திருடர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் என எண்ண வைக்கிறது. இப்படியுமா ஒரு நபர் இருப்பார் என யோசிக்க வைக்கிறது. விக்டர் லாஸ்டிங் உலக அதிசயமான ஈபிள் டவரையே இரண்டு முறை விற்றுள்ளார்.

Meet The Man Who Sold The Eiffel Tower Twice

Image Source

இவரை போன்ற நபர்கள் உலகிற்கு அதிசயம் அல்ல. இவரை போலவே இந்தியாவிலும் ஒரு திருடன் இருந்தார். இந்தியாவின் தாஜ்மகால், பார்லிமென்ட் போன்றவற்றை விற்ற நட்வர்லால் தான் அந்நபர். நமது உலக வரலாற்றில் மக்களுக்காக போராடியவர்கள் மட்டுமின்றி, ஏமாற்றியவர்களுக்கும் அழிக்க முடியாத ஒரு இடம் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்ட் ட்ரிக்!

கார்ட் ட்ரிக்!

சிறுவயது முதலே விக்டர் லாஸ்டிங் ட்ரிக் செய்வதில் கில்லாடி தான். இவர் கார்ட் ட்ரிக் மூலம் தனது சிறுவயதில் பலரை ஏமாற்றியுள்ளார்.

விசாரணையில் வில்லத்தனம்!

விசாரணையில் வில்லத்தனம்!

போலீசிடம் பிடிப்பட்ட போது விசாரணையில் இவர் ஆஸ்திரியன் - ஹங்கேரியன் டவுன் பகுதியில் பிறந்து, வளர்ந்தவர் என குறிப்பிட்டிருந்தார். பிறகு விசாரித்த போது, இவர் கூறிய பள்ளியில் இவரது பெயரில் ஒருவர் படித்ததே இல்லை என தெரியவந்தது.

ஏழை விவசாயிகள்!

ஏழை விவசாயிகள்!

விக்டர் லாஸ்டிங்கின் பெற்றோர் ஒரு ஏழை விவசாயிகள். தனது வாழ்வில் சின்ன சின்ன தவறுகள் செய்து வந்த விக்டருக்கு திடீரென ஒரு பெரிய ஆசை வந்தது. அந்த ஆசை தான் இன்று அவரை பற்றி உலகம் முழுக்க பேச காரணம்.

ஈபிள் டவர்!

ஈபிள் டவர்!

ஐந்தடி ஏழு அங்குலமும், 140 பவுண்ட் எடை கொண்ட லாஸ்டிங். ஒரு கைதேர்ந்த ஏமாற்றுக் காரனாய் ஆனது இந்த சம்பவத்தில் தான். இவர் அரசாங்க ஆவணங்களை போலியாக தயாரிக்க துவங்கினார். ஈபிள் டவர் ஆவணத்தை கனகச்சிதமாக தயார் செய்தார்.

உலோக குப்பை தொழிலதிபர்!

உலோக குப்பை தொழிலதிபர்!

பழைய உலோகங்களை வாங்கி தொழில் செய்யும் ஒரு பிரபல தொழிலதிபரை வரவழைத்து. பாரிஸின் உயர்தர ஹோட்டலில் தங்க வைத்து, ஈபிள் டவரை விற்க வியாபாரம் பேசி, அரசாங்கம் மிகவும் இரகசியமாக இந்த செயலை செய்து வருகிறது என தந்திரமாக பேசி விற்றார்.

ருமேனிய பணப்பெட்டி!

ருமேனிய பணப்பெட்டி!

லாஸ்டிங் ஒருமுறை அமெரிக்க டாலர்களை அச்சடிக்கும் பணப்பெட்டியை தயாரித்து விற்றார். இதை பல அமெரிக்கர்கள் $30,000 டாலர்கள் கொடுத்து வாங்கினர். இதில் விசேஷம் என்னவெனில், இந்த பெட்டியை விற்பனை செய்ய இவர் பேப்பரில் விளம்பரம் கொடுத்தது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Man Who Sold The Eiffel Tower Twice

Meet The Man Who SOLD The Eiffel Tower TWICE
Story first published: Monday, October 17, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter