கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு இந்தியாவுக்கு டிமிக்கி கொடுத்தவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒன்றா.. இரண்டா.., ஒன்பதாயிரம் கோடி வங்கிக் கடனை திருப்பிக் கட்டாமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டார் விஜய் மல்லையா. இது கண்டிக்க வேண்டியது மட்டுமின்றி தண்டிக்க வேண்டிய குற்றமும் என இன்டர்நெட் முழுக்க பல மீம்ஸ், கருத்துக்கள், ஸ்டேடஸ் பதிவுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

ஆனால், இந்தியாவுக்கோ, இந்தியர்களுக்கோ, இந்திய அரசு / நீதிமன்றத்திற்கோ இது புதியதல்ல. பல வருடங்களாக பல பேர் குற்றம் செய்துவிட்டு, பணமோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏன் உயிரிழப்புகள் நடந்த சம்பவங்களும் கூட அரங்கேற்றியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரன் ஆண்டர்சன்

வாரன் ஆண்டர்சன்

1984: காங்கிரஸ் ஆட்சி

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி தான் இந்த வாரன் ஆண்டர்சன். போபால் விஷவாயுக் கசிவில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கிய ஃபாக்டரியை நிறுவியது இந்த ஆண்டர்சன் தான். அந்த கொடூர சம்பவம் நடந்த நான்காம் நாள் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார்.

வாரன் ஆண்டர்சன்

வாரன் ஆண்டர்சன்

சில மணி நேரங்களில் ஜாமீன் வாங்கிக் கொண்டு இந்தியாவை விட்டு ஓட்டம்பிடித்த ஆண்டர்சன் அதற்கு பிறகு வரவேயில்லை. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால் தான் ஆண்டர்சன்-க்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)

1990: காங்கிரஸ் ஆட்சி

குவாட்ரோச்சி ஒரு இத்தாலிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஏறத்தாழ 64 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)

குவாட்ரோச்சி மீது சார்ஜ்ஷீட் 1999-ம் ஆண்டி பிறப்பிக்கப்பட்டது. மலேசியாவில் 2003-ம் ஆண்டும், அர்ஜென்டினாவில் 2007-ம் ஆண்டு குவாட்ரோச்சி கைது செய்ய முயன்று முடியாமல் போனது.

இத்தாலிய மாலுமிகள்

இத்தாலிய மாலுமிகள்

2012: காங்கிரஸ் ஆட்சி

இரண்டு இத்தாலிய மாலுமிகள் (Massimiliano Latorre and Salvatore Girone), கேரள மீனவர்களை 2012-ம் ஆண்டு கொன்றனர். மருத்துவ சிகிச்சைக்காக சுப்ரீம்கோர்ட் அந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை அவர்களது நாட்டில் இருக்க அனுமதி அளித்தது.

இத்தாலிய மாலுமிகள்

இத்தாலிய மாலுமிகள்

பிறகு அவர்கள் வருவார்கள் வருவார்கள் என கூறப்பட்டு, கடந்த மாதம் ஜனவரி 12, 2016 அன்று அவர்கள் இருவரும் இந்தியா திரும்ப வரமாட்டார்கள் என கூறப்பட்டது.

லலித் மோடி

லலித் மோடி

2012: காங்கிரஸ் ஆட்சி

கடந்த 2012-ம் ஆண்டு அமலாக்க இயக்குனரகம் லலித் மோடி மீது பி.சி.சி.ஐ ஒளிபரப்பு (ஐ.பி.எல் - 2009) உரிமத்தில் பணமோசடி செய்ததாக சார்ஜ் செய்தது. லலித் மோடி உடனே தப்பித்து லண்டன் சென்றுவிட்டார்.

லலித் மோடி

லலித் மோடி

பிறகு அமலாக்க இயக்குனரகம் இன்டர்போலிடம் பேசி லலித் மோடி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பதிவு செய்ய கூறியது. பிறகு மும்பை சிறப்பு நீதிமன்றம் லலித் மோடிக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரன்ட் விதித்தது. இதே வழக்கில் லலித் மோடிக்கு இன்டர்போல் 2015-ம் ஆண்டு ரெட் கார்னர் நோட்டீஸ்-ம் விதித்தது.

லலித் மோடி

லலித் மோடி

மேலும் கடந்த 2013-ம் ஆண்டு பி.சி.சி.ஐ லலித் மோடி மீது வாழ்நாள் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுபுறம் லலித் கூறி வருகிறார்.

நீதி!

நீதி!

பணக்காரர்கள், அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, சாமானிய மக்களுக்கு ஓர் நீதியென இருக்கும் சூழல் மாறும் வரை, இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of People Who Excelled At 'Art Of Leaving' India

List Of People Who Excelled At 'Art Of Leaving' India, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter