Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்திய ரூபாய் தாள்கள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 உண்மைகள்!
5,000 , 10,000 இந்தியா ரூபாய் எப்போது அச்சானது என உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அறிந்திராத இந்திய ரூபாய் பற்றிய உண்மைகள்.
நம் நாடு, நம் நாட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது நமது உரிமை மற்றும் கடமை. அந்த வகையில் நாம் தினமும் செலவு செய்யும், சம்பாதிக்கும் இந்திய ரூபாய் பற்றிய உண்மைகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் தானே?
அதுவும் நேற்று இரவில் பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா?

உண்மை #1
1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.
Image Source

உண்மை #2
சுதந்திரத்திற்கு பிறகு, பாகிஸ்தான், இந்திய ரூபாய்களை பாகிஸ்தான் அரசு என்ற ஸ்டாம்ப் அச்சு பதித்து பயன்படுத்தியது.
Image Source

உண்மை #3
நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு ரூபாய் இந்திய ரூபாய் தாளில் செகரட்டரியின் கையொப்பம் இடம் பெற்றிருந்தது.

உண்மை #4
நேபாளத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்மை #5
ஒருமுறை, பழைய ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் போன்ற நாணயங்கள் வங்காள தேசத்தில் ஷேவிங் செய்யும் பிளேடுகள் தயாரிக்க கொள்ளையடித்து செல்லப்பட்டது.

உண்மை #6
பத்து ரூபாய் நாணயத்தை தயாரிக்க 6.10 ரூபாய் செலவாகிறது.

உண்மை #7
முன்னர் ஒருமுறை பற்றாக்குறை காரணத்தால், ஆர்.பி.ஐ நாணயங்களை வெளிநாடுகளில் அச்சு செய்தது.

உண்மை #8
இந்த குறிகளி வைத்து இந்தியாவின் எந்த இடத்தில் அந்த நாணயங்கள் அச்சிடப்பட்டன என கண்டறியலாம்.
மும்பை - டைமண்ட்
கொல்கத்தா - மார்க் ஏதும் இருக்காது
ஐதராபாத் - ஸ்டார்
நொய்டா - புள்ளி

உண்மை #9
1917-ல் ஒரு இந்திய ரூபாயின் அமெரிக்க மதிப்பு 13 அமெரிக்க டாலர்கள்.

உண்மை #10
எல்லா இந்திய ரூபாய் தாள்களிலும் இந்தியாவின் ஏதாவது ஒரு இடம் அல்லது இந்தியாவை குறிக்கும் ஒரு விஷயம் இருக்கும். 20 ரூபாய் தாள்களிலும் மட்டும் தான் அந்தமான் தீவுகளின் இடம் அச்சிடப் பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications