திருபாய் அம்பானி பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

முயற்சி ஒன்றே பெரிய மூலதனம் என்பார்கள். அத்துடன் நம்மை ஊக்குவிக்கும் மக்களும் நம்மை சுற்றி இருந்தால் இந்த உலகையே கூட ஒற்றை விரலில் கட்டி இழுக்கலாம். சாதாரண பெட்ரோல் பங்கில் மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் தொடங்கி பல ஆயிர கோடிகளுக்கு அதிபதியாக உயரம் கண்டவர் திருபாய் அம்பானி.

இனி, திருபாய் அம்பானி பற்றி பலரும் அறியாத தகவல்கள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

திருபாய் அம்பானி குஜராத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி ஓர் பள்ளி ஆசிரியர். இவர் தனது பள்ளி படிப்பை பதினாறு வயதில் முடித்தார்.

முதல் வேலை

முதல் வேலை

இவரது முதல் வேலையை A.Besse & Co எனும் ஓர் பெட்ரோல் பங்கில் பார்த்தார். அப்போது அவர் வாங்கிய மாத சம்பளம் முன்னூறு ரூபாய் மட்டுமே ஆகும்.

ஜவுளி வியாபாரம்

ஜவுளி வியாபாரம்

1958-ல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அம்பானி ஜவுளி தொழில் இறங்கினார். இவரது உறவினர் சம்பக்லால் என்பவருடன் இணைந்து இந்த தொழிலை தொடங்கினார்.

33 சதுரடியில் ரிலையன்ஸ்

33 சதுரடியில் ரிலையன்ஸ்

இந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் வெறும் 33 சதுரடி அறையில் தொடங்கப்பட்டது ஆகும். ஓர் மேசை, மூன்று நாற்காலி, ஒரு தொலைபேசி தான் அன்றைய ரிலையன்ஸின் சொத்து.

பிரிவு

பிரிவு

1965-ல் உறவினருடன் ஏற்பட்ட தொழில் கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக பிரிந்தனர். பிறகு 1970-ல் தனியாக பத்து லட்சம் மதிப்பிலான வீட்டிற்கு தென் மும்பை பகுதியில் இருக்கும் அல்டமௌன்ட் சாலை பகுதியில் குடியேறினார் அம்பானி.

முதல் ஜவுளி நிறுவனம்

முதல் ஜவுளி நிறுவனம்

1977-ல் விமல் என்ற பெயரில் தனது முதல் ஜவுளி நிறுவனத்தை அகமதாபாத் நரோடா எனும் இடத்தில் தொடங்கினர்.

விளையாட்டரங்கில் கூட்டம்

விளையாட்டரங்கில் கூட்டம்

தனியார் நிறுவனம் ஓர் விளையாட்டு அரங்கில் தனது வருடாந்திர கூட்டத்தை நடத்தியது என்ற முதல் பெருமை பெற்றவை அம்பானி.இவர் குஜராத் மக்கள் பலரை தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார்.

3,50,000 பேர்

3,50,000 பேர்

1986-ல் ஏறத்தாழ மூன்றரை லட்சம் பங்குதாரர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டம் மும்பையில் நடந்தது.

பல்வேறு துறைகளில் கால் பதித்தார்

பல்வேறு துறைகளில் கால் பதித்தார்

பிறகு, பெட்ரோ கெமிக்கல், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, சில்லறை விற்பனை, மூலதனச் சந்தைகள் என பல துறைகளில் கால் பதித்தார் அம்பானி.

உடல்நலம்

உடல்நலம்

முன்னூறு ரூபாயில் தொடங்கி பல ஆயிரக் கோடிக்கு அதிபதி ஆனார் அம்பானி. 1986-ல் முதல் ஸ்ட்ரோக் ஏற்பட்ட போது இவருக்கு வலது கை பக்கவாதம் ஏற்பட்டது. பிறகு 2வது முறையாக 2002-ம் ஆண்டு ஸ்ட்ரோக் ஏற்பட்ட போது இரண்டு வாரம் கோமாவில் இருந்து இறந்துபோனார் அம்பானி.

இறுதி அஞ்சலி

இறுதி அஞ்சலி

இவரது இறுதி அஞ்சலியில், அரசியல், சினிமா நபர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொது மக்களும் பங்கேற்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Dhirubhai Ambani

Do you know about the Lesser Known Facts About Dhirubhai Ambani? read here.
Story first published: Wednesday, January 13, 2016, 11:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter