For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த முறை ட்விட்டர் யூஸ் பண்ணும் போது, இத தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணுங்க!

|

ட்விட்டர், முகநூலை போலவே இதுவும் ஓர் சமூக ஊடகம். அரசியல்வாதிகளில் இருந்து திரை நடிகர்கள் வரை பிரபலங்கள் பலரும் முகநூலை விட ட்விட்டரை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது, தன்னை பின் தொடரும் நபர்களுடன் நேரடியாக தொடர்புக் கொள்ள ஏதுவாக இருக்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக ட்விட்டரின் டிரென்ட்டிங் முறையால் உலக நெட்டிஷன்கள் ட்விட்டர் பக்கமாக மெல்ல, மெல்ல தலை திருப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!

இதற்கு சான்றாக தமிழ் சினிமா ரசிகர்களை கூட வைத்துக் கொள்ளலாம். அடிக்கடி காரணமே இல்லாத ஹேஸ்டேக்கை கிண்டல் கேலி செய்து தேசிய அளவில் டிரென்ட் செய்து ட்விட்டருக்கே தலைசுற்ற வைப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஒவ்வொரு நிமிடமும் 3.5 லட்சம் ட்வீட்ஸ் அனுப்பபடுகின்றன. ட்விட்டர் 310 மில்லியன் ஆக்டிவ் பயனாளிகளை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #2

உண்மை #2

ட்விட்டர்-க்கு ஆரம்பத்தில் FriendsTalker என்ற பெயர் வைக்கலாம் என்று தான் நினைத்தனர். எப்.பி.ஐ ட்விட்டர் ஸ்லாங் டிக்சனரி என தனியாக ஒன்று வைத்துள்ளது.

உண்மை #3

உண்மை #3

ஸ்வீடன் நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பயன்பாடு உரிமை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்வீடன் குடிமகனுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.

உண்மை #4

உண்மை #4

2013-ம் ஆண்டு பதிவான ஒரு போலியான ட்வீட் அமெரிக்க ஸ்டாக் மார்கெட்டில் 130பில்லியன் டாலர் குறைவு ஏற்பட காரணியாக அமைந்தது.

உண்மை #5

உண்மை #5

ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்கும்.

உண்மை #6

உண்மை #6

அமெரிக்க மத்திய புலனாய்வு துறை ஒரு நாளுக்கு 5 மில்லியன் ட்வீட்களை படிக்கின்றனர்.

உண்மை #7

உண்மை #7

பாப் பாடகர் ஜஸ்டின் பைபர்-க்கு ஸ்பெயின் நாட்டு மக்கள் தொகையை விட அதிகமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.

உண்மை #8

உண்மை #8

ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை.

உண்மை #9

உண்மை #9

ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை Larry எனும் பறவையாகும்.

உண்மை #10

உண்மை #10

இன்டர்நெட்டை பயன்படுத்தும் 90%பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை. ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Twitter

Do you know about the Interesting Facts About Twitter? read here in tamil.
Desktop Bottom Promotion