Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!
யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம்.
கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்...

உண்மை #1
ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

உண்மை #2
யூடியூப் ஏறத்தாழ ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை வைத்துள்ளது. இது இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

உண்மை #3
முதல் யூடியூப் பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளியில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றியிருந்தார்.

உண்மை #4
பேபால் நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் யூடியூப்.

உண்மை #5
யூடியூப்துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

உண்மை #6
கங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் யூடியூப் காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கியமான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து சாதனை படைத்தது.

உண்மை #7
கூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

உண்மை #8
யூடியூப்-ல் "Do the Harlem shake" என சர்ச் செய்து பாருங்கள். யூடியூப் உங்களை ஒருசில நொடி ஆச்சரியப்படுத்தும்.

உண்மை #9
யூடியூப்-ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.

உண்மை #10
யூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.

உண்மை #11
யூடியூப்பில் அதிகமாக சர்ச் செய்யப்பட்ட பயிற்சி காணொளி (Tutorial) முத்தமிடுவது எப்படி என்பது தான்.



Click it and Unblock the Notifications
